அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பொய் சொல்வதில் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம்
எம்.ஜி.ஆர்., விழாவில் முதல்வர் காட்டம்

நாகர்கோவில்:''பொய் சொல்வதில், ஸ்டாலினுக்கு, டாக்டர் பட்டம் கொடுக்கலாம்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

  பொய் ,சொல்வதில், ஸ்டாலினுக்கு, டாக்டர்,பட்டம்  எம்.ஜி.ஆர்., விழாவில், முதல்வர், காட்டம்


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடந்த, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:


தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசுவது எல்லாம் பொய். பொய் பேசுவதற்கு, டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்றால், அது, ஸ்டாலினுக்கு தான் பொருந்தும். 'மைக்' கிடைத்தால் போதும்; உடனே, அ.தி.மு.க., அரசின் மீது, பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவது, அவரின் வாடிக்கை.


அவர் சொல்வதில், ஒன்று கூட உண்மை இருக்காது.தமிழகத்தை, நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்ற, இரவு, பகல் பாராமல், பாடுபட்டு கொண்டிருக்கிறோம். காவிரி பிரச்னையில், நல்ல தீர்ப்பை பெற்றுள்ளோம்.


சிறு நகரங்களுக்கு, விமான போக்குவரத்து துவங்க, மத்திய அரசுடன் சேர்ந்து பணியாற்றுகிறோம். விவசாயிகளுக்கு,

பல்வேறு மானிய திட்டங்களை வழங்கி உள்ளோம். இதையெல்லாம், ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் படிப்பதும் இல்லை; சொல்வதை கேட்பதும் இல்லை. கட்சிக்காரர் எழுதிக் கொடுப்பதை தான் பேசுகிறார்.


ஒவ்வொரு துறையிலும், தேசிய அளவில், விருதுகளை பெற்று வருகிறோம். இதற்கு காரணம், சிறந்த முறையில் பணியாற்றுவது தான். அரசு மீது, அரசியல்ரீதியான குற்றசாட்டுகள் தான் எழுகிறதே தவிர, திட்டப் பணிகள், விறுவிறுவென்று நடந்து வருகின்றன.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினகரன், 'டுபாக்கூர்!'துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெ., வழியில், பழனிசாமி தலைமையிலான அரசு, செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.,வை, யாராலும் அசைக்க முடியாது. நெஞ்சில் துணிவிருந்தால், நேர்மை திறன் இருந்தால், திருவாரூர், திருப்பரங்குன்றம் வாருங்கள்; தேர்தல் களத்தில் சந்திப்போம்.

அதைவிட்டு, தெருவில் நின்று கூச்சலிட்டு, வாய் கிழியப் பேசாதீர்கள்.தி.மு.க.,வை, மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். ஜெ., அரசு மீது, உங்களின் தரம் கெட்ட விமர்சனங்களையும், அமைச்சர்கள் குறித்த அநாகரிக பேச்சுகளையும், தமிழக மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர்.


இதற்கிடையில், ஜெ.,க்கு துரோகம் செய்து, அவ ரால் துரத்தி அடிக்கப்பட்ட ஒருவர், ஜெ., தொண்டர் கள் எல்லாம்,அவர் பக்கம் இருப்பதாக,கதை அளந்து கொண்டிருக்கிறார். அவர், 'டுபாக்கூர்' என்பது,

Advertisement

தொண்டர்களுக்குநன்றாக தெரியும்.இவ்வாறு அவர் பேசினார்.


மத்திய மந்திரி அழைப்பு!மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-பின்தங்கிய மாவட்டமான, கன்னியாகுமரி மக்களின் எதிர்பார்ப்பு அதிகம். எங்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான, வர்த்தக துறைமுகம் வந்தாக வேண்டும். இத்திட்டத் திற்கு, தமிழக அரசு ஆதரவு தர வேண்டும். குமரியில், விமான நிலையம் அமைய, முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.தமிழக அரசின், அனைத்து திட்டங்களையும் மேம்படுத்தி தர, மத்திய அரசு தயாராக இருக்கிறது. நாட்டின், முதல் மாநிலமாக, தமிழகத்தை உருவாக்க, மத்திய அரசுடன் இணைந்து, தமிழக அரசு செயல்பட வேண்டும்.


பணியில் இருக்கும் போது, போலீசார் மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுக்கு பணி வழங்குவது இல்லை என்ற, குறை இருக்கிறது, அதை, நிவர்த்தி செய்ய வேண்டும் . என்றார்


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai தமிழக ஒன்றிய முதல்வரை ஒழிப்போம் இந்தியப்பேரரசுவை காப்போம் ,இந்தியா
24-செப்-201814:24:53 IST Report Abuse

Nisha Rathiஇந்துவிரோதி டாக்டர் சுடாலின், குடிகாரர்களை உருவாக்கும் டாக்டர் சுடாலின் கடைக்காரர்களை அடிக்க ரவுடி உருவாகும் டாக்டர் சுடாலின், பெண்களை பார்லரில் புகுந்து அடிக்கும் ரௌடிகளை வளர்க்கும் டாக்டர் சுடாலின்

Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
23-செப்-201816:46:22 IST Report Abuse

Loganathaiyyanடாஸ்மாக் நாட்டு அமைச்சர் ஏன்??? எம்.எல்.ஏ அனைவருக்கும் கூட உடனே முனைவர் பட்டம் ஊழலில், பொய் சொல்வதில், மணல் கொள்ளையில், ஒன்றை 5 ஆண்டில் 500 ஆக்கும் மந்திரத்தில் என்று நிச்சயம் கொடுக்கவேண்டும்.

Rate this:
K.ANBARASAN - muscat,ஓமன்
23-செப்-201816:42:40 IST Report Abuse

K.ANBARASAN டாக்டர் சுடலை - ரைம்ஸ் கூட சரியில்லை

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X