தந்தை டைரக்டர், தாத்தா ஆர்ட் டைரக்டர் என சினிமா பின்னணி குடும்பத்தில் இருந்தாலும் மூன்றாவது தலைமுறையில் திரையில் முகம்காட்டுகிறார் நடிகர் விதுஷ்,28. விஸ்காம் பட்டதாரியான இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக இங்கே பேசுகிறார்...
கடைக்கண் பார்வை, 'புல் ஆனாலும் பெண்சாதி' படங்களை இயக்கியவர் தந்தை ராஜ்ஸ்ரீதர். தாத்தா பி.பி.ராய்சவுத்திரியோ நான் ஏன் பிறந்தேன், மர்மயோகி, மாடிவீட்டு ஏழை, வேலைக்காரி, மலைக்கள்ளன், பாகப்பிரிவினை படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி ரசிகர்களை வியக்க வைத்த கலைஞர்.
இப்படி 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் ஈடுபாடுள்ளது எங்கள் குடும்பம். நான் மூன்றாவது தலைமுறை. தாத்தா, தந்தை திரைத்துறையில் பயணித்ததால் எனக்கும் சினிமா, நடிப்பு இயல்பாகவே வந்து விட்டது. 12 வயதில் விளம்பர படங்களில் நடித்தேன். படிப்புதான் முக்கியம் எனக்கூறி தொடர்ந்து நடிக்க பெற்றோர் அனுமதிக்கவில்லை. இடையிடையே சினிமாவில் முகம் காட்டினேன். 2010ல் திருவாசகம் படம் மற்றும் 'அழகான பொண்ணுதான்' படத்தில் மாணவர் வேடத்தில் நடித்தேன்.
தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் தமன்னாவுடன் நடிக்கிறேன். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'ஏஞ்சலினா' படத்திலும் நடித்துள்ளேன். ராஜிவ் விக்ரம் இயக்கத்தில் 'மின்மினி' எனும் திரில்லர் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளேன்.தெலுங்கில் கோபாலகிருஷ்ணா இயக்கத்தில் 'ஆதாரம்' என்ற படத்திற்கும் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.
இப்படி பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும் ஹீரோவாக வேண்டும் என்பதே ஆசை.விஜய்சேதுபதிதான் என் ரோல்மாடல். சின்ன ரோலாக இருந்தாலும் சினிமாவில் முகம் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும், நல்ல வாய்ப்புகள் அமையும் என்பார். இதையே நானும் பின்பற்றுகிறேன்.
என்னதான் திரையுலக பின்னணி இருந்தாலும், எப்படித்தான் நடித்தாலும் ரசிகர்கள் அங்கீகாரம் வழங்கினால்தான் என்னால் ஹீரோவாக முடியும் என்றார்.இவரை பாராட்ட sathishr.fx@gmail.com.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE