வெக்கி, திருச்சிக்காரர்... தாடி, மாடலிங் பென்சில் 'பிட்' பேண்ட் என பரபர, சுறுசுறு தாடி மாடல்... தமிழ் இளைஞர்களுக்கு 'தாடிக்கார' மாடலிங்கிற்கான நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கிறார்.
2010 ல் சென்னையில் இன்ஜினியரிங் படிக்க போகும்போது அப்பாவியாக இருந்தவர், திரும்பும்போது சினிமாவின் கலக்கும் வில்லனாக வந்துள்ளார். கல்லுாரியில் படிக்கும் போது தனக்குள் கலை ஆர்வம் இருப்பதை உணர்ந்தவர் இறுதியாண்டில் மாடலிங்கில் கால் பதித்தார்.பல சினிமா நிறுவனங்களின் தேர்வு தேடலில் பங்கேற்றார். ஓராண்டு போராட்டமாக அமைந்த வாழ்க்கையில், சினிமாக்களில் எதிர்மறை கதாபாத்திர வாய்ப்பு கிடைத்தது. அதுவும் வெளிவர தாமதமானதால் மீண்டும் மாடலிங்.சென்னை நாட்களில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்த வெக்கிக்கு, மாடலிங் மீது ஆர்வம் வர சில போட்டோக்களே காரணமாம். சில முன்னணி நிறுவனங்கள் அவரது போட்டோக்களை பார்த்து மாடலிங் செய்ய அழைத்ததுதான் தொடக்கம்.பின் தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விளம்பர மாடலிங் ஆனார். தமிழகத்தில் 'பியர்டு மாடலிங்' (அது வேறொன்றுமில்லை... தாடியுடன் மாடலிங்) செய்யும் 'முதல்வர்' இவர்தான். ஆடைகள், கூலிங் கிளாஸ், காலணிகள், அழகு உபகரணங்கள் என எல்லாவற்றுக்கும் இப்போ வெக்கிதான் மாடலிங்.
பல முன்னணி நிறுவனங்களுக்கு முதல் ஆண் 'இன்புளுயன்ஸராக' அறியப்படுகிறார். தற்போது சினிமாவில் வாய்ப்புகள் குவிகின்றன. '46', சிவகார்த்திகேயன் படம் உள்ளிட்ட பல படங்களின் எதிர்மறை நாயகன் இவர். இந்தியாவின் சிறந்த தாடிக்கான விருது 2015, 'பியர்டு ஐகான்' விருது 2016, ஸ்டைலிஷ்மேன் 2017, சிறந்த இன்புளுயன்ஸர் 2018 என விருதுகளை அள்ளி வருகிறார்.''இன்றைய இளைஞர்கள் மாடலிங் ரொம்ப 'ஈஸி' என நினைத்து, அதற்கான கடின உழைப்பை மறந்து இறுதியில் மாடலிங்கே வேண்டாம் என ஓட்டம் பிடிக்கின்றனர். எனக்கும் வழிகாட்டுதல் கிடைத்ததில்லை. ஆனால் ஆர்வமான தேடுதல்தான் என்னை எங்கோ கூட்டிச் சென்றது. பல முன்னணி நிறுவனங்களில் எத்தனை காலம் அமெரிக்கரும், பிரிட்டிஷாரும் 'மாடல்' செய்வது. நம்மில் ஒருவரும் முன்னோடி என்றால் பெருமைதானே.
மாடலிங் செய்ய தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல இயற்கை உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். உடலை ஆலயமாக கருதினால் மனது தெளிவு பெறும். மனம் தெளிவடைந்தால் அழகும் பண்பும் ஒருங்கே கிடைக்கும். இதை தாண்டி நிர்வகிக்கும் திறன் இவையெல்லாம் ஒரு மாடலுக்கு முக்கியம்.
வெறுமனே அழகு மட்டும் போதாது. மாடலிங் செய்ய விரும்புபவர்கள் நல்ல உயரம் இருக்க வேண்டும். பயிற்சி, முயற்சியால் கிடைக்கும் நல்ல வெற்றி" என்றார்.இவரை பாராட்ட இன்ஸ்டாகிராம் ஐடி: vekkey
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE