அவள் மலர்களின் இளவரசி, கவிஞர்களின் பேரரசி, இளைஞர்களின் மனதில் ரோஜா... ஆம், மலரின் பெயரால் அவர் நடிகை ரோஜா. தினமலர் வாசகர்களுக்காக பேசியபோது...
* மலரின் முகவரிபிறந்தது, வளர்ந்தது ஸ்ரீபெரும்புதுார் பக்கத்துல குட்டி கிராமம். படித்தது எம்.எஸ்சி., பேஷன் டிசைனிங். இவ்ளோ அடக்கமானது என் முகவரி.
* சினிமாவுக்குள்...பேஷன் டிசைனராக வேலை பார்த்து வருகிறேன். அப்பப்போ கொஞ்சம் மாடலிங்கும் பண்ணுவேன். 2017ல் 'மிஸ் தமிழ்' சென்னை சிரிப்பழகி பட்டம் வாங்கினேன். அந்த சிரிப்பை பார்த்து சினிமா வாய்ப்பும் கொடுத்துட்டாங்க.
* என்ன படம்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கல. முதல் படமே ஹீரோயின் வாய்ப்பு. தமிழ், ஹிந்தியில் தயாராகி வருகிறது.
* பிடித்தவர்எப்பவுமே சிம்பு தான் புடிக்கும். நடிகைகளில் நயன்தாரா, அனுஷ்கா.
* பிடித்த ரோல்நான் கூடைப்பந்து, ஓட்டப்பந்தய வீராங்கனை. இறுதிச்சுற்று படத்தில் வரும் விளையாட்டு வீரர் மாதிரியான ரோல் என்றால் டபுள் ஓ.கேதான்.
* பொழுது போக்குநல்லா படம் வரைவேன், கொஞ்சமா பாடுவேன், செமயா ஆடுவேன்... ஆங்... அப்புறம் பிரெண்ட்ஸ் கூட சுற்றித்திரிவேன்.
* மறக்க முடியாததுதாத்தா, பாட்டி தான். அம்மா இல்லாத என்னை, என் தம்பி, தங்கையை அவங்கதான் வளர்த்தாங்க. நகரங்களில் இருக்குற பல குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியோட அன்பு கிடைக்குறது இல்ல. ஆனா, எங்களுக்கு கிடைச்சிருக்கு.
* உங்கள் நிஜம்மாடலிங் மற்றும் சூட்டிங்கில் மட்டுமே நான் மாடர்ன்... ஊருக்கு போயிட்டா நான் 'பக்கா' கிராமத்து பொண்ணுதான். அமைதியான கேரக்டர். முள் இல்லாத ரோஜா மாதிரி. கோபமே வராது. கோபம் வந்தாலும் சிரிச்சுக்கிட்டே போயிடுவேன்.
* அழகு ரகசியம்கிராமத்துல ஜிம், பியூட்டி பார்லர்லாம் கிடையாது. அழகுக்காக மெனக்கிட்டதும் இல்லை. நீங்க நீங்களாவே இருந்து பாருங்க. மற்றவர்களுக்கு ரொம்ப அழகா தெரிவீங்க. அவ்ளோதான்.
இவரை வாழ்த்த S.roja007@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE