ஜூனியர் நயன்தாரா : மகிழும் மானஸ்வி| Dinamalar

ஜூனியர் நயன்தாரா : மகிழும் மானஸ்வி

Added : செப் 23, 2018
ஜூனியர் நயன்தாரா : மகிழும் மானஸ்வி

'ஓங்குடா... ஓங்குடா... ஓங்குடா.. ஓங்கிப்பாரேன் ஓங்குவானாமே சொட்ட... சொருகிடுவேன்', 'இமைக்கா நொடிகள்' படத்தில் போலீஸ் கேரக்டரை பார்த்து வெறித்தனமாக இப்படி டயலாக் பேசி தெறிக்கவிட்ட குழந்தை நட்சத்திரம் மானஸ்வி, தமிழ் சினிமாவிற்கு கிடைத்த குட்டி ஹீரோயின். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்துள்ள இவர் வேறு யாருமில்லை. காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் தான். 'ஜூனியர் நயன்தாரா' என்ற பட்டத்துடன் அடுத்தடுத்த படங்களில் 'ஓவர் பிசி'யாக இருந்த 6 வயது மானஸ்வியை பேட்டிக்காக 'ஓவர் டேக்' செய்து பேசினோம்...
* 'இமைக்கா நொடிகள்'ல் நடித்தது ?எனக்கு இது தான் முதல் படம். ரொம்ப 'ஹேப்பியா' இருக்கு. இயக்குனர் அஜய் ஞானமுத்து சாக்லேட், பிஸ்கட்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்தாரு.

* நயன்தாரா என்ன சொன்னாங்க ?ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவை பார்த்ததும் 'ராஜா ராணி' படத்தில் அவங்க பேசின டயலாக் பேசி காட்டினேன், அப்படியே என்னை துாக்கி 'கிஸ்' பண்ணிட்டாங்க. நடிக்கும் போது 'நல்லா நடிச்சிருக்கடி, ஐ லவ் யூ பேபி'ன்னு சொன்னாங்க.

* 'ஐ லவ் யூ மட்டும்' தானா ?இல்லை, ஒரு 'ஷாட்' நடிச்சு முடிச்சதும் 'உனக்கு என்ன வேணும்'னு கேட்டாங்க, 'லிப்ஸ்டிக்' வேணும்னு கேட்டேன். உடனே ஆள் அனுப்பி வாங்கிட்டு வரச்சொல்லி கொடுத்தாங்க.

* படத்தில் கோவக்கார மானஸ்வி... நிஜத்தில் ?எனக்கு கோபமே வராது. படத்துக்காக கொஞ்சம், கொஞ்சம் கோபம் வர வைச்சிருக்குறேன்.

* இப்பெல்லாம் ஓவர் பிசியாமே?ஆமா... 'சதுரங்க வேட்டை 2' அரவிந்த்சாமிக்கு, 'பரமபத விளையாட்டு' திரிஷாவுக்கு, 'இருட்டு' சுந்தர்.சி.,க்கு, 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' விக்ராந்துக்கு மகளா நடிக்கிறேன். 'கும்கி 2'ல் சின்ன வயசு ஹீரோயினா வரேன். 'கண்மணி பாப்பா' படத்தில் ஹீரோயின் சவுமியாவுக்கு பொண்ணா நடிச்சிருக்கேன்.

* 'கும்கி 2' யானையை பார்த்து பயம் ?முதல்ல பயம் இருந்தது. அப்புறம் கும்கியும் நானும் பிரண்டாயிட்டோம்.

* உங்க லட்சியம் என்ன ?பெரிய ஹீரோயினாகி நிறைய படங்களில் நடிக்கணும். அப்பா கொட்டாச்சி, அம்மா அஞ்சலி என் நடிப்பை பார்த்து ரசிக்கணும்.
இந்த குறும்புக்கார குட்டி நடிகையின் தந்தை கொட்டாச்சியிடம் சில கேள்விகள்...

* மானஸ்விக்கு நடிப்பு எப்படி ?சின்ன வயசிலயே 'ரோலிங், கேமரா, ஆக் ஷன்'னு சொல்லி தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டுவேன். சினிமா டயலாக் பேச சொல்லி, நடிக்க வைச்சு வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிடுவேன். அதை பார்த்த சினிமா மேனேஜர் கணேஷ் எங்களை 'இமைக்கா நொடிகள்' இயக்குனரிடம் அறிமுகம் செய்தார். பாப்பா 'சொட்ட சொருகிடுவேன்' டயலாக் பேசினதும் இயக்குனர் ஓ.கே., சொல்லிட்டார்.

* பிரபலங்களின் பாராட்டு ?ஒரு நாள் நயன்தாரா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க, பாப்பாக்கிட்ட பேசினாங்க. என் வாழ்க்கையிலயே முதன் முதலில் எனக்கு போன் பண்ணின ஒரே ஹீரோயினும் இவங்க தான். நிறைய பேருக்கு பாப்பா என் பொண்ணுதான்னு தெரியலை. ஆனால் இயக்குனர்கள் பலர் பாராட்டினர்.

* உங்க நடிப்புக்கு இடைவெளி ஏன் ?பெரியளவில் வாய்ப்பு கிடைக்கலை. தாய்லாந்தில் 'கும்கி 2' ஷூட்டிங் நடந்தப்போ பிரபுசாலமனிடம் 'எனக்கும் சின்ன கேரக்டர் கொடுங்க'ன்னு கேட்டேன். உன் பொண்ணுக்காக நடிக்க வைக்குறேன்னு, எனக்கு சூப்பர் கேரக்டர் கொடுத்திருக்கார். ரொம்ப நாளைக்கு அப்புறம் என் பொண்ணால் வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுவும் என் பொண்ணு கூடவே நடிப்பதால் குஷியா இருக்கேன்.
actorkottachi@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X