புதுடில்லி:ரயில் பயணத்தின்போது, பெண் களை கிண்டல் செய்து துன்புறுத்து வோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் விதிமுறையை, ரயில்வே சட்டத்தில் சேர்க்க, ஆர்.பி.எப்., எனப்படும், ரயில்வே பாதுகாப்பு படை பரிந்துரைத்துள்ளது.
பெண்களை கிண்டல் செய்து துன்புறுத்து வோ ருக்கு, கிரிமினல் சட்டத்தில், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க இடம் உண்டு. ரயில் பயணத் தின்போதும்,பெண்களை கிண்டல் செய்து துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதை தடுக்க, பல்வேறு ஷரத்துகளை, ரயில்வே ,
சட்டத்தில் சேர்க்கும்படி, ஆர்.பி.எப்., பரிந்துரைத்து உள்ளது. இதன்படி,
ரயில்களில் பெண்களை துன்புறுத்துவோர், கிண்டல் செய்வோருக்கு, மூன்று
ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடி யும். பெண்களிடம் அத்துமீறுவோரை,
ரயில்வே போலீஸ் உதவியின்றிஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
இதுகுறித்து, ஆர்.பி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில்களில், பெண்களிடம் யாராவது அத்து மீறி னால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ரயில்வே போலீசாரின் உதவியை நாட வேண்டி உள்ளது. இதை தடுக்க, அத்துமீறும் நபர்களை பிடிக்கும் அதி காரத்தை ஆர்.பி.எப்.,புக்கு அளிக்கும் படி பரிந்துரைத்து உள்ளோம்.
ரயில்களில், பெண்கள் பெட்டியில் பயணிக்கும் ஆண்களுக்கு, தற்போது,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை, 1,000 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு ரயில்வே திட்டங்களின் துவக்க
விழாக்களுக்காக செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்து, தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப் பட்டது.இதற்கு கிடைத்த பதில் விபரம்:கடந்த, 2014, நவம்பர் முதல், 2017 செப்டம்பர் வரை, புதிய ரயில் சேவை, ரயில்வே நடை மேம்பாலங்கள், காத்திருப்பு அறைகள், வி.ஐ.பி., அறைகள், கழிப்பறைகள் போன்றவற்றை துவக்க, 166 விழாக்கள் நடத்தப்பட்டன.
'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்த நிகழ்ச்சிகளுக்கு, 13.46 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (15)
Reply
Reply
Reply