அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் : ஸ்டாலின்

சென்னை: 'கருணாசுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற, அ.தி.மு.க., அரசின் பாகுபாடான போக்கு கண்டிக்கத்தக்கது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

எஸ்.வி.சேகர், எச்.ராஜா,கைது,செய்யாதது,ஏன்,ஸ்டாலின்


அவரது அறிக்கை:


காமெடி நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான, கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு, வெளி படையாக வருத்தம் தெரிவித்து விட்டார். அதன் பின், அவரை வேண்டுமென்றே கைது செய்து இருப்பது, தமிழகத்தில், சட்டத்தின் ஆட்சியா னது, ஆளுக்கொரு நீதி, வேளைக்கொரு

நியாயமாக அமல்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

'ஈ.வெ.ரா., சிலையை உடைப்பேன்' என்றதுடன், உயர் நீதிமன்றத்தையும், போலீஸ் துறையையும், தரக்குறைவாக விமர்சித்தும், பல்வேறு போலீஸ் நிலையங்களில், வழக்கு பதிவு செய்யப்பட்டும், இதுவரை,எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.


பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட, எஸ்.வி. சேகரின் முன் ஜாமின் மனுவை, உயர் நீதிமன்றம் நிராகரித்தது. எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என, உச்ச நீதி மன்றம் மறுத்தும், அவரை, அ.தி.மு.க., அரசு கைது செய்ய தயக்கம் காட்டுவது, எந்த வகை யிலான அணுகுமுறை என, தெரியவில்லை.


முதல்வர் பழனிசாமியை முதல்வராக்கிய, கூவத்துார் மர்மமும், ரகசியமும் வெளிச்சத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காக, கருணாசை கைது செய்துள்ளனர் என, கருதுகிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

''எச். ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருகிறது,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனி மாவட்டம், சுருளி அருவியில், நடந்த சாரல் விழாவில் அவர் கூறியதாவது:


சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் கைது செய்யப்பட்டது போல, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்ட ஆலோசனை பெறப்பட்டு வரு கிறது.என்னை பசுத்தோல் போர்த்திய புலி என கூறும் தினகரனின் சுயரூபத்தை, நீங்கள், அவரது பதிலில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-201821:29:18 IST Report Abuse

இன்றயதமிழன்நீயெல்லாம் எந்த மூஞ்சிய வச்சுட்டு நியாயம் பேச வர? H.Rajaவும், S.V.Sekarரும் உங்கள போல தமிழ்மக்கள அடிச்சு உலையில போட்டு சொத்து சேக்கல. முதல்ல ஒங்க மொத்த சொத்தையும் ஏழை தமிழனுக்கே திருப்பி கொடுத்திட்டு, அரசியலுக்கு வந்து திரும்ப உங்க நையினா போல 1 நயா பைசாலயிருந்து இருந்து உன் அக்கௌண்ட ஆரம்பி. அப்புறம் தமிழ்நாட்டில யார கைது செய்யலாம்கிற பத்தி பேசு. உங்க பழைய பஞ்சாங்க அரசியல குப்பையில போட்டு கொளுத்து.

Rate this:
Sivak - Chennai,இந்தியா
24-செப்-201820:31:10 IST Report Abuse

Sivakஅந்த தகரமுத்துவை ஏன் இன்னும் கைது பண்ணலைன்னு கேட்டியா சுடலை ??

Rate this:
N Parthiban - Thanjavur,இந்தியா
24-செப்-201820:19:07 IST Report Abuse

N ParthibanMr. Stalin, people are watching and waiting for their day. Don't think winning assembly election may not be cake walk.

Rate this:
மேலும் 73 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X