'ரபேல்' ஒப்பந்த விவகாரம்; ராகுல் மீண்டும் தாக்குதல்

Added : செப் 25, 2018 | கருத்துகள் (70)
Advertisement
 Rahul Gandhi,PM Modi, France dussault,காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, பிரான்ஸ் ரபேல் போர் விமானங்கள், ரபேல் ஊழல் , காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் டசால்ட், தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ், விஜய் மல்லையா , பாஜக அரசு, டசால்ட் ரபேல் போர் விமானம், 
 France Rafael Warplanes, Rafael Scandal, Congress leader Rahul,
Prime Minister Narendra Modi, Businessman Anil Ambani, Reliance, Vijay Mallya, BJP Government, dussault Rafael , 
 Congress, Rahul,

அமேதி : பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 'ரபேல்' போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வரும், காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மோடியை, மீண்டும் விமர்சித்துள்ளார்.


ஊழல் :

விமானப் படைக்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'டசால்ட்' நிறுவனத்திடம் இருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து, இந்த விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்து உள்ளது.

இந்த விமானங்களை வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. அக்கட்சித் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து, பல்வேறு புகார்களை கூறி வருகிறார்.


ரூ.20,000 கோடி:

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, உத்தர பிரதேசத்தில் உள்ள, தன் சொந்த தொகுதியான, அமேதிக்கு, ராகுல் நேற்று சென்றார்.

இங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில், மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. நாட்டின் காவல்காரன் என கூறும் பிரதமர் மோடி, ஏழை எளிய மக்கள், ராணுவ வீரர்களிடம் இருந்து, 20 ஆயிரம் கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளார். அதை, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு வழங்கியுள்ளார்.

மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, ஏழை எளிய மக்களுக்காக எதையும் செய்யவில்லை. அதே நேரத்தில், அம்பானி, விஜய் மல்லையா போன்றவர்களே பலனடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (70)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
25-செப்-201816:43:39 IST Report Abuse
Endrum Indian ஏண்டா ஏஜண்டுன்னா 3% முதல் 7 % வரை கமிஷன் வாங்குவார்கள், இதில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை இந்த பப்புவுக்கு. ரபேல் ஒப்பந்தம் 39 போர்விமானங்கள், US.$ 8.9 billion அதாவது ரூ. 64,080 கோடி. நீ என்ன சொன்னாய்,ஊழல் முதலில் 1 .2 லட்சம் கோடி, பிறகு 1 .3 .....அப்படியே போய் 2 .5 லட்சம் கோடி என்று சொல்லி பிறகு என்னாது ஒரேயடியா இறங்கி இப்போ ரூ.20 ,000 கோடிக்கு வந்து விட்டாய் அடுத்தது என்ன ரூ.2 ,000 கோடி என்பாயா???ஆமா உனது குடும்பம் இப்போது ரூ.82 .4 லட்சம் கோடியில் இருந்து இப்போ இன்னும் எவ்வளவு பெருகியது சொல்லவில்லையே???ஓ பதவியில் இல்லை அல்லவா அதான் ரொம்ப பெருக மாட்டேன் என்கின்றது. நீ தான் அந்த பாகிஸ்தான் மாலிக்குக்கு சொன்னாயா எப்படியாவது நான் பிரதமர் ஆவேன் என்று ட்வீட் செய்யச்சொல்லி, அதான் அவன் காலையிலிருந்து மாலை வரை அதே பணியில் இருக்கின்றான்.
Rate this:
Share this comment
Cancel
25-செப்-201815:48:01 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் HAL நிறுவனத்திற்கு நவீன விமானங்களை தயாரிக்கும் அளவிற்கு கட்டமைப்பு இல்லை. சாதாரண இரும்பு குழாய் செய்யும் தொழிற்சாலைபோல இயங்கிக்கொண்டிருக்கிறது (எல்லாம் காங்கிரஸின் அருள் தான் ) அதனால் தனியார் நிறுவனம் இதை முதலீடு செய்து இந்தியாவில் உற்பத்தி செய்வது சரிதான் , அது எந்த தொழிலதிபராக இருந்தால் என்ன , ராகுலுக்கு அம்பானி , அதானி என்றால் அலர்ஜி ஏன் ? அவர்கள் உங்களுக்கு நன்கொடை கொடுக்கவில்லையா ? எதற்கெடுத்தாலும் அம்பானி அதானி இன்று கூவுவதற்கு இதுதான் காரணம். தொழிலதிபர்கள் வளராமல் நாடு எப்படி வளரும். இன்று அமெரிக்கா பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ளதென்றால் அதற்கு காரணம் உலக பணக்காரர்கள் அங்கே இருப்பதுதானே , அதேபோல் தான் சீன , ஜப்பான் எல்லாம், அடிப்படை அறிவில்லாமல் ராகுல் போன்ற கோமாளிகள் உளறினால் அதை மக்கள் பொருட்படுத்த கூடாது.
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
25-செப்-201814:02:23 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா ஆயிரம் அறிவாளிகளுக்குப் பதில் சொல்ல முடியும்.... ஆனால் ஒரு முட்டாளுக்குப் பதில் தர முடியாது...
Rate this:
Share this comment
MIRROR - Kanchipuram,இந்தியா
25-செப்-201817:11:58 IST Report Abuse
MIRRORஒரு முட்டாளுக்கு பதில் தர முடியாமல் ஆயிரம் அறிவாளிகளை முட்டாள்களாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X