குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?

Updated : செப் 25, 2018 | Added : செப் 25, 2018 | கருத்துகள் (69)
Advertisement
Nitin sandesara, Gujarat businessman sandesara,  Nitin sandesara Nigeria,குஜராத் தொழிலதிபர் சந்தேசரா, நைஜீரியா, வங்கி கடன் மோசடி, தொழிலதிபர் நிதின் சந்தேசரா, நிதின் சந்தேசரா, ஸ்டெர்லிங் பயோ டெக்,  ஆந்திர வங்கி மோசடி, சிபிஐ, நைஜீரியாவில் பதுங்கல், 
 Nigeria, bank debt fraud, businessman Nitin sandesara, Nitin sandesara, Sterling Bio tech, Andhra Bank fraud, CBI, nitin sandesara dubai

புதுடில்லி : குஜராத் மாநிலத்தில், 5,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த, தொழிலதிபர் நிதின் சந்தேசரா, நைஜீரியாவில் பதுங்கி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர், நிதின் சந்தேசரா; தொழிலதிபர். இவர், வதோதரா மாவட்டத்தில், 'ஸ்டெர்லிங் பயோ டெக்' என்ற பெயரில், மருந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர், நிறுவன மேம்பாட்டுக்காக, ஆந்திர வங்கியிடம் இருந்து, 5,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால், அதை திரும்பச் செலுத்தாமல் தலைமறைவானார்.

இந்த மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையினர் வழக்கு பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர், அனுப் கார்க், நிறுவனத்தின் இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். மேலும், ஸ்டெர்லிங் பயோ டெக் நிறுவனத்திற்கு சொந்தமான, 4,700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, ஜூனில், அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர். தலைமறைவாக இருந்த, நிதின் சந்தேசராவுக்கு, கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டு, சி.பி.ஐ., அதிகாரிகளும் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், நிதின் சந்தேசரா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த, அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நிதின் சந்தேசரா, தற்போது துபாயில் இல்லை என்றும், அவன், தன் குடும்பத்தினருடன், ஆப்ரிக்க நாடான, நைஜீரியாவில் பதுங்கி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

துபாயில் கைது செய்யப்படுவதற்கு முன், அவர், நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என, கூறப்படுகிறது. ஆப்ரிக்க நாடான, நைஜீரியாவுடன், கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லாததால், அங்கிருந்து, நிதின் சந்தேசராவை, இந்தியாவுக்கு நாடு கடத்துவது கடினம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-201820:21:17 IST Report Abuse
கோகுல்,மதுரை குஜராத்ல காங்கிரஸ் mla 77, bjp mla 99. காங்கிரஸ் திட்டமிட்டு குஜராத்தில இருக்கிற தன்னுடைய சகாகளுக்கு கடன் கொடுத்துள்ளது. இந்த மாதிரி ஓடி போனா வசதியா மோடி மேல பழி போட்டுடலாம் பாருங்க. இதெல்லாம் சாம்பிள் தான். வாராகடன் 10 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் வருவதற்குள் காங்கிரஸின் சுயரூபம் தோலுரித்து காட்டப்படும். இதை திசை திருப்பதான் ரபேலை வைத்து அரசியல் செய்கிறது. இப்பொழுது அதுவும் நீர்த்து போய் விட்டது. எதற்கும் ராகுலுக்கு ஒரு look out notice கொடுத்து வைப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
25-செப்-201818:31:25 IST Report Abuse
ஆப்பு நைஜீரியா தானே....ரொம்ப நல்லது. அவிங்களே போட்டுத் தள்ளிருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
25-செப்-201818:01:17 IST Report Abuse
ரபேல் ஊழல் நாயகன் மோடி: இந்த ஏழைத்தாயின் மகன் குஜராத் தொழில் அதிபர்களுக்கு கிளாஸ் எடுத்திருப்பாரோ?. நான் மக்களை ஏமாற்றுகிறேன் நீங்கள் வங்கிகளை ஏமாற்றுங்கள் என்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X