பொது செய்தி

இந்தியா

ஆயுஷ்மான் பாரத்: முதல் நாளில் ஆயிரம் பேர் பயன்

Added : செப் 25, 2018 | கருத்துகள் (42)
Advertisement
Ayushman Bharat, Prime Minister Modi, National Medical Insurance,ஆயுஷ்மான் பாரத்,  பிரதமர் மோடி, தேசிய மருத்துவ காப்பீடு, பிரதமர் நரேந்திர மோடி, தரமான மருத்துவ சிகிச்சை, ஆயிரம் பேர் பயன், நரேந்திர மோடி, மோடி, 
 Prime Minister Narendra Modi, Quality Medical Treatment, Thousands of People, Narendra Modi, Modi,

புதுடில்லி: பிரதமர் மோடி துவக்கி வைத்த ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


துவக்கம்

ஏழை, எளிய மக்களுக்கு, தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையில், 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும், 10.71 கோடி குடும்பங்களைச் சேர்ந்த, 50 கோடி பேருக்கு, இலவச மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்கும். ஏழை, எளிய மக்கள் கடனாளியாவதை தடுக்கும் வகையிலும், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யும் வகையிலும், இந்த திட்டம் அமைந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில், கடந்த 23ம் தேதி இந்த திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து, 5 பேருக்கு அடையாள அட்டையை வழங்கினார்.


முதல்பயனாளி

இந்த திட்டத்தின் கீழ், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கிழக்கு சிங்பூம் சர்தார் மருத்துவமனையில் 22 வயதான கர்ப்பிணி ஒருவர்முதலாவதாக பயனடைந்துள்ளார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முதல் நாளில் 4 பேர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள், ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சத்தீஸ்கர், அரியானா, ஜார்க்கண்ட், அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடிதம்

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டத்தில் பயன்பெற போகும் 98 சதவீத பயனாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு, இந்த திட்டம் குறித்தும், எப்படி பயன்படுத்தி கொள்வது குறித்தும், பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பி வருகிறோம். இதுவரை 40 லட்சம் கடிதம் அனுப்பியுள்ளோம். அந்த கடிதத்தில் 'கியூஆர்' கோட்(QR code) மற்றும் பயனாளிகளின் குடும்ப விவரம் இருக்கும். இதனை அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டம் குறித்த விவரங்களை mera.pmjay.gov. in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 14555 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-201818:30:19 IST Report Abuse
ஆப்பு இதுவரையில் இதுல எப்படி ஆள் சேக்குறாங்க? என்ன பிரிமியம்? இதுக்கு நிதி எங்கேருந்து வரப்போகுது? பொக்ன்ற தகவல்களெல்லாம் இல்லை. சும்மா 50 கோடி பேர் பயனடவாங்கன்னு சொல்றதோட சரி. இதுவும் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தைக் குறிவைக்கும் ஓட்டு வங்கி அரசியலே....எலக்‌ஷனில் ஜெயிச்சதும் அந்த 15 லட்சத்தப் போட்ட மாதிரி செஞ்சுருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
25-செப்-201815:40:23 IST Report Abuse
vns தமிழகத்தின் திட்டத்தை மோடி நகல் எடுத்தாராம் .. பொய் சொல்ல திரவிஷம்களுக்கும் மத வெறியர்களுக்கும் பாடமா எடுக்கவேண்டும். தமிழகத்தின் மருத்துவ காப்பீட்டைப் பற்றி தெரிந்தவர்கள் எழுதுங்கள். அது இப்போது நடைமுறையில் இருக்கிறதா என்று விசாரித்து இந்த மாதத்த்தில் இந்த வருடத்தில் எத்தனைபேர் எத்தனை பணம் பயன் பெற்றார் என்றும் உண்மையாக தெரிவியுங்கள். எந்த மருத்துவமனைகள் சிகிச்சை கொடுத்தன என்றும் எழுதுங்கள். ஹிந்தி ஆதிக்கம் ரூபாய்க்கு மூன்று படி போன்ற பொய் கூறியே மக்களை ஏமாற்றும் வேலைகளை யாரும் நம்பப்போவதில்லை..
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
25-செப்-201814:13:01 IST Report Abuse
MANI DELHI இங்கு டாக்டர்ஸ் குறிப்பாக அரசு மருத்துவர்கள் யாரும் தவறாக நினைக்காதீர்கள்... முதலில் உரிய மதிப்பெண் பெறாமல் மருத்துவராக வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் மருத்துவத்தில் சேராமல் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையினால் மட்டுமே உருவாகி உள்ளனர். அரசு பணியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக அரசின் எல்லா சமூக நீதி சலுகைகளை பெற்று அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்தீர்கள். மனதை தொட்டு சொல்லுங்கள் அங்குள்ள கட்டமைப்புகள் உருவாக நீங்கள் எந்த அளவிற்கு முயன்று இருக்கிறீர்கள். அரசு பணியாளர்கள், தனியார் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் தந்திரிகள் MLA க்கள் MP க்கள் எத்தனை பேருக்கு மருத்துவம் செய்கிறீர்கள். ஏன் என்றால் நடேசன் போன்ற இந்தியாவில் இருந்து கொண்டு நாட்டாமை வேலை செய்பவர்களுக்கு நீங்கள் எந்த லட்சணத்தில் உங்களையே நம்பி வரும் ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ சேவை செய்கிறீர்கள் என்று தெரிய வேண்டாமா. என்னமோ உலக தரத்தில் கட்டமைப்பு செய்துகொடுத்தால் உங்கள் சேவையால் மக்களின் மனதில் இடம் பிடித்து விடுவீர்கள் என்ற மாயை திரையால் நடேசன் பேசுகிறார். ஒரு முறையாவது அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை என்று கோஷமிட்டு தரம் உயர்த்தி மக்களுக்கு தரமான சேவை தர வேண்டும் என்று போராட்டம் செய்தது உண்டா... அப்படி இருக்கும்போது மோடி காப்பீடு திட்டம் கொடுத்தால் ஏன் அரசியல் செய்கிறார் நடேசன். அம்மாவும் அய்யாவும் மத்தவங்க செஞ்சப்ப தேர்தல் கண்ணுக்கு தெரியலையா... அரசு டாக்டர் ஏன் செய்வார். அவருக்கு ஒரே குறி இலவசமா தனக்கும் தன் குடும்பத்திற்கும் மருத்துவ வசதி கிடைக்கும். மருத்துவ வட்டாரத்தில் சொந்த அரசு செல்வாக்கை வைத்து ஒரு தனி வருமானத்திற்கும் வழி செய்து விடுவார்கள். சேவை என்ற பெயரில் அவர்களுக்கு சம்பளம் ஒன்றே இலக்கு. அது சரியாக வரவேண்டும் என்பதில் தான் நாட்டமே. அப்படியே அரசு கட்டமைப்பு பணிகள் தொடங்கினாள் தனக்கு என்ன லாபம் என்ற எண்ணத்தில் அமைச்சர் தொடங்கி அதிகாரி அனைவருடன் அனுசரித்து போனால் தனக்கும் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசை. கருவிகள் தூங்கி கொண்டு இருக்கும். பராமரிப்பு அணுஅளவிலும் இருக்காது. ஏன் அரசு பணம் தானே எக்கேடு கேட்டால் என்ன..ஆக நடேசன் அவர்களுக்கு உண்மையான பிரச்னை மோடியா இல்லை மோடியின் ஏழைகளின் திட்டமா... எந்த உலகத்தில் உள்ளீர்கள். கேஷ் லேஸ் திட்டம் மூலம் நீங்கள் சொல்லும் சால்ஜாப்பு போய் ரொம்ப நாளாச்சு. உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்குமேயானால் அது பொது கருத்தாக இருக்காது...எவன் அரசியல் பன்றானோ தெரியாது... நீங்கள் அரசியல் செய்யாமல் இருப்பது தான் நாட்டுக்கு நல்லது ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X