எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தவிப்பு..!
'ரபேல்' விவகாரத்தில் காங்.,க்கு ஆதரவு இல்லை:  
சக எதிர்க்கட்சிகள் வாய் திறக்க மறுப்பதால் தவிப்பு


சக எதிர்க்கட்சிகளிடம் இருந்து, 'ரபேல்' போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், எதிர்பார்த்தஆதரவு கிடைக்காததால், காங்கிரசுக்கு கடும்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

'ரபேல்' விவகாரம்: எதிர்க்கட்சிகள் மவுனம்


ஐரோப்பிய நாடான, பிரான்சிடமிருந்து, இந்திய விமானப்படைக்கு, 'ரபேல்' ரக போர் விமானங்களை வாங்குவது குறித்து, மத்திய அரசு போட்டுள்ள ஒப்பந்தம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய தணிக்கை ஆணையமான, சி.ஏ.ஜி., மற்றும் மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையமான, சி.வி.சி., ஆகியவற்றில் புகார் மனு அளித்துள்ளனர்.'பா.ஜ.,வுக்கு எதிராக, 2019 தேர்தலில், காங்கிரஸ் கையாளப்போகும், மிகப் பெரிய ஆயுதமாக, இந்த பிரச்னை இருக்கும்' என, பலரும் கருதுகின்றனர்.ஆனாலும், காங்கிரசை தவிர, பிற எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது, அந்தகட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.மார்க்சிஸ்ட் பொதுச்செயலர், சீதாராம் யெச்சூரி மட்டுமே, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், ஒரே ஒரு முறை, 'டுவிட்' போட்டு, அமைதியாகி விட்டார்.

ஓரளவு உதவி


நாள்தோறும் பரபரப்பை கிளப்பக் கூடியவர்களாக கருதப்படும், பிற முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே,அமைதியாக இருக்கின்றனர்.அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டிவிடுவது என்ற வேகத்தில், காங்கிரஸ் இருந்தாலும், அதற்கான பலன்,கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தென்படவில்லை.ஏற்கனவே, ஐ.மு.,

கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தான், காங்கிரசுக்கு ஓரளவு உதவி செய்கின்றன. மாநில அளவில், பலம் வாய்ந்த கட்சிகளாக கருதப்படும் பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என எல்லாமே, காங்கிரஸ் குடைக்குள் நிற்பதை தவிர்க்கின்றன.ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சமீபத்தில் நாடு தழுவிய, 'பந்த்'திற்கு, காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. ஆனால், போதிய ஒத்துழைப்போ, ஆதரவோ, சக கட்சிகளிடம் இருந்து, காங்கிரசுக்கு கிடைக்கவில்லை.இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும்மாநிலங்களில் கூட, 'பந்த்' பிசுபிசுத்தது. தற்போது, ரபேல் ராணுவ விமான ஒப்பந்தம் குறித்த விஷயத்திலும், இந்த கட்சிகள், முற்றிலுமாக, ஒதுங்கி நிற்கின்றன. தினமும், டில்லியில், காங்கிரசுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையில், செய்தியாளர் சந்திப்பு போரே நடக்கிறது.

ஏன் மவுனம்


இந்த விவகாரத்துக்காக, பா.ஜ., சார்பில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் களமிறக்கப்பட்டு, பேசி வருகின்றனர்.நேரடியாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, பிரதமர் பதில் தர வேண்டும். அவர் ஏன் பேச மறுக்கிறார்' என, ராகுல் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கோரி வருகின்றனர்.இந்நிலையில், 'பிரதமர் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். நம்முடன் சேர்ந்து நின்று, பிற விஷயங்களில் பா.ஜ.,வையும், பிரதமரையும் கடுமையாக விமர்சிக்கும், சக நட்பு கட்சிகள் கூட, ரபேல் விவகாரத்தில், ஏன் மவுனம் காக்கின்றன' என்ற சந்தேகமும், நெருக்கடியும் காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பிரதமர் மீது ராகுல் பாய்ச்சல்


உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில், நேற்று, காங்., கட்சியின் சமூக ஊடகவியல் தொண்டர்கள் இடையே, அக்கட்சி தலைவர் ராகுல் பேசினார்; அப்போது அவர்கூறியதாவது:ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து, பிரதமர் பதவியில் அமர்ந்தவர், நரேந்திர மோடி. ஆனால் அவரே, அனில் அம்பானிக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளித் தந்துள்ளார்; இது, மிகவும் சுவாரசியமாக உள்ளது.அடுத்த இரு மாதங்களில், ரபேல்

Advertisement

, விஜய் மல்லையா, லலித் மோடி, செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட விஷயங்களில், மோடி என்ன செய்துள்ளார் என்பதை அம்பலப்படுத்துவோம்.இவை எல்லாமே திருட்டு. நரேந்திர மோடி, இந்த நாட்டின் காவலாளி அல்ல என்பதை உலகுக்கு தெரிவிப்போம்.இவ்வாறு ராகுல் கூறினார்.இது குறித்து, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:பொறுப்பின்றி பொய்களை பேசி வரும் ராகுலை, தலைவராக பெற்றுள்ள, காங்., வெட்கப்பட வேண்டும். போபர்ஸ், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில், ராகுலின் குடும்பம் சிக்கியுள்ளது.இந்திய வரலாற்றில், ஒரு பிரதமரை பற்றி, இத்தகைய மோசமான கருத்துகளை, எந்த தலைவரும் கூறியதில்லை.இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -

ராகுலுக்கு பா.ஜ., பதிலடி!


ரபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர், ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:ரபேல் விமானம் வாங்குவது தொடர்பாக, காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடந்தது. அப்போது, இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேராவை, சில ஆயுத புரோக்கர்கள் சந்தித்துள்ளனர். வதேராவுக்கு லஞ்சமாக, லண்டனில் ஒரு பிளாட் மற்றும் அவருடைய வங்கிக் கணக்கில் பணமும் போடப்பட்டுள்ளது. மேலும், லண்டன் செல்ல, வதேராவுக்கு விமான டிக்கெட்டும் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ராகுல் என்ன பதில் சொல்லப் போகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
26-செப்-201821:14:07 IST Report Abuse

Viswanathan அறுபது ஆண்டுகளாக செய்த அயோக்யத்தனத்தின் விளைவு , யாருமே நம்ப தயாராய் இல்லை

Rate this:
s t rajan - chennai,இந்தியா
26-செப்-201821:03:20 IST Report Abuse

s t rajanஇப்ப இருக்கற காங்கிரஸ் ஒரு செத்த பாம்பு.. பாவம் raw fool பொய் மகுடி வாசித்து எழுப்பப் பாக்கறாரூ.

Rate this:
Nisha Rathi - madurai,இந்தியா
26-செப்-201819:06:38 IST Report Abuse

Nisha Rathiஅமுல் பேபி உன் பேச யாரும் கேட்கமாட்டாங்க பேசாமே ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பத்தோட சந்தோசமா இரு அதா விட்டுட்டு நீ எல்லாம் அரசியல் பேச வந்துட்டே

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X