ஆதார் திட்டம் பற்றி காங்.,கிற்கு ஒன்றும் தெரியாது : ஜெட்லி

Added : செப் 26, 2018 | கருத்துகள் (27)
Advertisement
ஆதார் கார்டு, அருண் ஜெட்லி, காங்கிரஸ், சுப்ரீம் கோர்ட், நிதியமைச்சர் அருண் ஜெட்லி , அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , ஆதார் திட்டம், டிஜிட்டல் கம்யூனிகேஷன் கமிஷன், ஆதார் , 
Advani, Arun Jaitley, Congress, Supreme Court, Finance Minister Arun Jaitley, Minister Ravi Shankar Prasad, Aadhaar Project, Digital Communications Commission, Aadhaar Card,

புதுடில்லி : இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், பாட்னா விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் அமைக்கவும், பீகார் மற்றும் காஷ்மீரில் முழுமை பெறாத திட்டங்களை முடிக்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆதார் பற்றி விமர்சித்தவர்கள், தொழில்நுட்பத்தை வெல்ல முடியாது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதார் திட்டத்தை அறிமுகம் செய்தது காங்., தான். ஆனால் அதில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தேசிய டிஜிட்டல் தொலைத் தொடர்பு கொள்கைகள் 2018 க்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொலைத் தொடர்பு கமிஷனை, டிஜிட்டல் கம்யூனிகேஷன் கமிஷனாக மாற்றி அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆதாரால், அரசின் வருமானம் ரூ.90 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நல்லாட்சிக்கான அடையாளம் தான் ஆதார். ஆதார் தீர்ப்பை வரவேற்கிறோம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
26-செப்-201820:23:43 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஆதார் நல்லதே. ஊழல் செய்ய முடியாதுங்க. காங்கிரசுக்கு அதன் தன்மை நன்மை தெரியாதுதான்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
27-செப்-201803:44:37 IST Report Abuse
Anandanஆதார் கொண்டுவந்ததே காங்கிரஸ்தான் கடைசியில் வந்து அதை வெளியிட்ட பிஜேபிக்கு மட்டும் எல்லாம் தெரியும் வேறு யாருக்கும் தெரியாதுன்த்றது ரொம்ப கேவலம்....
Rate this:
Share this comment
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
26-செப்-201820:10:13 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே ஆதார் கார்டை பற்றி காங்கிரஸ்சுக்கு தெரியாது என்றால் ஒப்புக்கொள்ள முடியாது. அதை பற்றி நன்றாக தெரிந்து தான் கத்துகிறார்கள். ஆதார் கார்டினால் அரசுக்கு வருடம் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக லாபம் வருகிறது. அந்த பணம் இவ்வளவு நாள் இத்தனை வருடம் எங்கே யாருக்கு போய்க்கொண்டு இருந்தது ? அது போச்சே இப்போது. தவிர இனியும் அப்படி நடந்தால் மரண அடி தான். அதனால் மீண்டும் மோடி வரக்கூடாது என்று எல்லா எதிர்கட்சிகளும் ஒருமித்து கூறுகிறது. காரணம் கொள்ளையில் கிடைத்த மரண அடி.
Rate this:
Share this comment
Cancel
Sathiyanathan - Paris,பிரான்ஸ்
26-செப்-201819:36:37 IST Report Abuse
Sathiyanathan ஆதார் ஒரு பிராடு, மோசடியாக கொண்டு வரப்பட்டுள்ளது - நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பு. மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆதார் சட்டத்தை நிறைவேற்றிய விதமே தவறானது. புறவழியாக ஆதார் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சாடினார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X