புதுடில்லி: வட இந்திய மாநிலங்களில் 5 மாநிலங்கள் ஒரே மாதிரியான பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன.
இது குறித்து கூறப்படுவதாவது: பஞ்சாப் இமாச்சல்பிரதேசம்,உ.பி.,புதுடில்லி, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ., காங்கிரஸ் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் டீசல் விலைகள் மாநிலங்களுக்கிடையே மாறுபட்டு காணப்படுகி்ன்றன. இந்நிலையில் மேற் கண்ட மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் ஹரியானா மாநில நிதி மற்று்ம எக்ஸைஸ்துறை அமைச்சர் கேப்டன் அபிமன்யூ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அபிமன்யூ கூறியதாவது:
கூட்டத்தில் ஒரேநாடு ஒரே தேசம் என்பதை வலியுறுத்தும் வகையில் முதற்கட்டமாக இம் மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் டீசல் விலைகளை ஒரே மாதிரியாக அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவாவனது வட மாநிலங்களில் ஒரே மாதிரியான மதுபான விலையை பின்பற்றுவது போன்றதாகும் என கூறினார்.
மேலும் பெரும்பாலான மாநிலத்தின் வாகனங்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பதிவு மற்றும் அனுமதி கட்டணத்தில் இருந்து வருவாய் இழக்கப்பட வேண்டியதில்லை என பஞ்சாப் மாநில அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து உயர் அதிகாரிகள் குழுவும், அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சுங்கவரி மற்றும் போக்குவரத்திற்கான விகிதங்களின் சீரான தன்மை குறித்து அந்தந்த மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும்.
கடந்த 2015-ம் ஆண்டிற்கு பின்னர் ஹரியானா மாநிலம் இது போன்ற கூட்டத்தை நடத்துவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE