Mega BJP Convention of Workers in Bhopal Enters 'World Book of Records' | உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்

Added : செப் 26, 2018 | கருத்துகள் (26)
Advertisement
உலக,சாதனை,புத்தகத்தில்,இடம்,பிடித்த,பா.ஜ.,பொதுக்கூட்டம்

போபால்: ம.பி.யில் ., பிரதமர் மோடி பங்கேற்ற பா.ஜ. பொதுக்கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

மத்திய பிரதேச மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைதேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று தலைநகர் போபால் ஜம்போரீ நகரில் பிரதமர் மோடி தலைமையில் மெகா பொது கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா , ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மெகா கூட்டத்திற்கு லண்டனை தலைமையிடமாக கொண்ட உலக சாதனை புத்தக அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய வந்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் கூட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் எனவும், 45 எல்.இ.டி. திரைகள், ஹெலிகாப்டர்கள் இறங்கும் 5 தளங்கள், ஒரு லட்சம் சதுர அடியில் அமைந்த கண்காட்சி அரங்கம், 26 ஹெக்டேர் நிலபரப்பில் அமைந்த வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் 1,580 கழிவறைகள் அமைக்கப்பட்டு இருந்தன எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து உலக சாதனை புத்தகத்தில் இந்த மெகா பொது கூட்டம் இடம் பிடித்தாக அறிவித்து அதற்கான சான்றிதழை முதல்அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அக்கட்சியின் மாநில தலைவர் ராகேஷ் சிங் ஆகியோரிடம் வழங்கியதாகவும், தககவல்கள் தெரிவிக்கின்றன.

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-அக்-201817:06:50 IST Report Abuse
Malick Raja ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்திநாட்டம் தேடும் வரை கூட்டம் சென்ற பின்பும் வருமோ (மோடி உல்லாசமாக இருப்பதால் இதை உணரவாய்ப்பில்லை ) வீடு வரை உறவு (சகோதரர்கள் இருக்கிறார்கள் வீட்டுடன் நின்றுவிடுவார்கள்) வீதிவரை மனைவி (அது இருந்தும் இல்லாமை ) காடு வரை பிள்ளை (அதற்குரிய வாய்ப்பில்லை )கடைசிவரை யாரோ ? இது அப்போதுதான் .. தெரியும் . மனிதன் தன்வாழ்க்கையை பற்றி அறியாதவன் ..கண்டதே காட்சி கொண்டதே கோலம் .என்ற நிலை மனிதவாழ்வுக்கு ஏற்றதன்று ..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-செப்-201805:27:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அமெரிக்க எத்தனால் வாங்க போவது உறுதியாகி விட்டதா? அவார்டு இப்பவே வந்துடிச்சி..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-செப்-201805:24:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பத்து லட்சத்திலே ஏதாவது ஒண்ணு இருந்தாத் தான் ஏழை தாயின் மகன் கூட்டத்துக்கே வருவாப்புலே.. அது கோட் ஆனாலும் சரி, கூட்டிவந்த கூட்டம் ஆனாலும் சரி. அஞ்சு ஹெலிகாப்ட்டர் இறங்குதளம் .... கின்னஸ் ரெக்கார்ட் தான். அங்கே ஆக்சிஜன் இல்லாமல் சாகும் குழந்தைகள், கஞ்சிக்கு சாகுறவன், செத்த உறவினரை, மனைவியை, மகனை கூட்டி செல்ல ஒரு வாகனம் இல்லாமல் இருக்கும் போது , இவங்க பொதுக்கூட்டத்துக்கு அஞ்சு ஹெலிகாப்டர் இறங்குதளம்.. முக்கியம் தான்.. கட்சி இறங்குமுகமாக இருக்கும் போது இவை தேவை தான்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X