ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு சிக்கல்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு சிக்கல்?

Added : செப் 27, 2018 | கருத்துகள் (50)
Advertisement
ராஜிவ்,கொலையாளிகள்,விடுதலை,சிக்கல்?

சென்னை : 'முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது' என, ஸ்ரீபெரும்புதுாரில், ராஜிவுடன் பலியான, 14 பேரின் குடும்பத்தினர், கவர்னரிடம் மனு அளித்துள்ளனர்.

ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. 'அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என, அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். சட்ட நிபுணர்களுடன், கவர்னர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், 'ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது' என, ராஜிவுடன் இறந்த, 14 பேரின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, கவர்னருக்கு ஒரு வாரத்திற்கு முன், 'இ - மெயில்' வாயிலாக, மனு அனுப்பி இருந்தனர்.

நேற்று, 14 பேருடைய குடும்ப உறுப்பினர்கள், கவர்னரை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில், 'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்தால், அது, தவறான முன் உதாரணமாகி விடும். எனவே, அவர்களை விடுதலை செய்யக்கூடாது' என, வலியுறுத்தி உள்ளனர்.





வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-அக்-201803:56:16 IST Report Abuse
J.V. Iyer இவிங்க செஞ்சது படுகொலை. அப்பாவிகள் உயிரை இவர்கள் பலி வாங்க யார் உரிமை கொடுத்தது. கொலையாளிகளை முதலில் தூக்கில் போடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
28-செப்-201809:54:32 IST Report Abuse
Indhiyan அப்போ மும்பாய் பயங்கரவாதி அஜ்மல் கசாபை தூக்கில் போட்டது தவறு. அவனையும் வெளியே விட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையில் இதுவரை போடப்பட்டவர்கள் எல்லாரும் ஆயுளாக குறைக்கப்பட்டு அப்புறம் கொஞ்ச காலத்தில் அனைவரும் வெளியே அனுப்பப்பட்டிருக்க வேண்டியவர்கள். இறந்தகாலத்துக்கும் வரும்காலத்துக்கும் பதில் சொல்லவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
கார்பொரேட் கைத்தடிகள் சங்கம் - ஜாம் நகர், குசராத் ,இந்தியா
27-செப்-201814:26:17 IST Report Abuse
கார்பொரேட் கைத்தடிகள் சங்கம் ஏழுபேரின் கனவை பதினாலு குடும்பம் பிசெபி எனும் பின்புல தீய சக்திகள் மூலம் பறிக்கப்படலாம். சு சா,எச் ரா போன்ற தமிழர் மீது அளவுக்கதிகமான அக்கறையும் அன்பும் கருணையும் கொண்டோர் இதற்காக கடும் உழைப்பை அர்பணிக்கலாம்.
Rate this:
Share this comment
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
27-செப்-201820:37:13 IST Report Abuse
Krishnamoorthi A Nகைத்தடிகளே, அந்த ஏழுபேர் மட்டும் மனிதர்கள், ராஜீவுடன் குண்டு வெடிப்பில் இறந்துபோன பதினான்கு அப்பாவி மக்கள் என்ன மிருகங்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X