பொது செய்தி

இந்தியா

சுங்கவரி உயர்வு : ஏசி, பிரிட்ஜ் விலை உயர்கிறது

Added : செப் 27, 2018 | கருத்துகள் (35)
Advertisement
இறக்குமதி வரி, சுங்கவரி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெசின் ,  நடப்பு கணக்கு பற்றாக்குறை , மத்திய அரசு , சுங்க வரிஉயர்வு ,  ஏசி, பிரிட்ஜ், 
Import Tax, Customs, AC, refrigerator, Washing Machine, Current Account Deficit, Central Government, Customs Taxes,air conditioner

புதுடில்லி : ரூபாய் மதிப்பை அதிகரிக்கும் வகையில், 19 பொருட்களுக்கான சுங்கவரி நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெசின் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.

ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை சரி செய்வதற்கு, இறக்குமதியை குறைக்கும் விதத்தில் அத்தியாவசிய தேவையற்ற 19 பொருட்களுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏசி, வீட்டுப் பயன்பாட்டுக்கான ஃபிரிட்ஜ், 10 கிலோவுக்கு குறைவான அளவு கொண்ட வாஷிங்மெஷின் ஆகியவற்றுக்கான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்பீக்கர்கள், காலணிகள், கார் டயர் ஆகியவற்றுக்கான சுங்க வரி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருளுக்கு இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்த நிலையில், 5 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. 2017 - 2018 நிதி ஆண்டில் ரூ.86,000 கோடி அளவிற்கு இந்த 19 பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி சுங்க வரிஉயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கார்பொரேட் கைத்தடிகள் சங்கம் - ஜாம் நகர், குசராத் ,இந்தியா
27-செப்-201817:14:10 IST Report Abuse
கார்பொரேட் கைத்தடிகள் சங்கம் ஏன்டா பிஜேபி செம்புகளா இதுக்கும் பிசெபிக்குமோ குறிப்பா மோடிசிக்குமோ சம்பந்தமே இருக்காதே?
Rate this:
Share this comment
Cancel
Madhav - Chennai,இந்தியா
27-செப்-201814:39:50 IST Report Abuse
Madhav இங்கே பல வாசகர்கள், இறக்குமதி வரி மட்டும் தான் உயர்ந்து உள்ளது, இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குங்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் சந்தை எப்படி இயங்குகிறது என்று அறியாதவர்களாக உள்ளார்கள். ஒரு பொருளின் வெளி நாட்டு விலை 10 + tax 90 = 100 என்றால், இந்தியாவில் அந்த பொருளின் விலை தானாக கிட்டத்தட்ட 100க்கு உயர்த்தப் பட்டு விடும். இப்படி வரி வித்தியாசத்தினால் கிடைக்கும் லாபத்தில் % , வரியை முடிவு செய்பவர்க்கு பங்காக கொடுக்கப் படும். இந்த பொருட்கள் எத்தனை கோடிக்கு இறக்குமதி செய்யப் படுகிறது என்ற தகவல் யாருக்குமே தெரியாது தங்கம் தான் அதிக மதிப்பில் இந்தியாவிற்கு வருகிறது அதன் வரி என்ன? pan அட்டை இல்லாமல் தங்கம் விற்பதை தடை செய்ய முடியாதா?
Rate this:
Share this comment
27-செப்-201817:25:17 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்10 + tax 90 = 100 , இது எந்த நாட்டு கணக்கு என்று தெரியவில்லை. முட்டாள்தனமான வாதம். போட்டியில் விலை குறைத்து விற்றால் தான் தான் தொழிலில் நிலைக்க முடியும் என்று இந்திய கம்பெனிகள் குறைந்த விலைக்குத்தான் தருகின்றன. வெளிநாட்டு கம்பெனிகளும் தற்போது இந்தியாவிலேயே உற்பத்தி செய்கிறார்கள். சில பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது உதாரணத்திற்கு AC , பிரிட்ஜ் compressors . இனி அதுவும் இங்கே தயாரிக்கப்படும்....
Rate this:
Share this comment
Cancel
27-செப்-201814:21:27 IST Report Abuse
பாண்டியன் முத்துக்கருப்பையா இறக்குமதி வரியை கூட்டுங்கள் தவறில்லை , அதே சமயம் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்கப்படுத்தி வரியை குறையுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X