அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உத்தமபுத்திரன்' ஸ்டாலின் ஜெயகுமார் கிண்டல்

Added : செப் 27, 2018 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை, ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உத்தமபுத்திரன் போல் பேசுகிறார். தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழலை, மக்கள் மறக்கவில்லை,'' என, மீன் வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க.,வினருக்கு, அரசியல் பண்பாடு கிடையாது; அரசியல் நாகரிகமும் கிடையாது.ஆட்சி கட்டிலில் ஏற முடியவில்லை என்பதால், பகைமை உணர்ச்சியுடன், பதவி
'உத்தமபுத்திரன்' ஸ்டாலின்   ஜெயகுமார் கிண்டல்

சென்னை, ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உத்தமபுத்திரன் போல் பேசுகிறார். தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழலை, மக்கள் மறக்கவில்லை,'' என, மீன் வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க.,வினருக்கு, அரசியல் பண்பாடு கிடையாது; அரசியல் நாகரிகமும் கிடையாது.ஆட்சி கட்டிலில் ஏற முடியவில்லை என்பதால், பகைமை உணர்ச்சியுடன், பதவி வெறியுடன்இருக்கின்றனர்.இதை, ஸ்டாலின் செயல்பாட்டை வைத்து, உணர முடியும்.அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, அரசு விழா அழைப்பிதழில், எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் பெயரை போட்டதில்லை.இன்று, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், ஸ்டாலினுக்கு, உரிய மரியாதை தரப்பட்டுள்ளது. அவரது பெயரை, பெரிதாக போட்டுள்ளோம். இதற்கு மேலும், என்ன மரியாதை வேண்டுமாம்?எங்களை பொறுத்தவரை, அரசியல் மாண்பை கடைபிடித்துள்ளோம். கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும், அவரது விருப்பம்.பல நேரங்களில், 'நானும் ரவுடி தான்' என்ற, 'காமெடி' போல, ஸ்டாலின் நடந்து கொள்கிறார். உத்தமபுத்திரன் போல பேசுகிறார். தி.மு.க., மீது, ஆயிரக்கணக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழலை, மக்கள் மறக்கவில்லை. ஊழலின்மொத்த உருவமே, தி.மு.க., தான்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
San - Madurai ,இந்தியா
02-அக்-201821:15:58 IST Report Abuse
San Rightly said Jeya Kumar
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
28-செப்-201817:28:22 IST Report Abuse
Tamilselvan தமிழ்நாட்டை ஊழல்,மது, குடும்ப கொள்ளை,வாரிசு அரசியல், நில அபகரிப்பு, என்று சீரழித்தது திமுகா என்பது இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் தெரியும். அவர்கள் சட்டத்தின் ஓட்டையை பயன் படுத்தி வெளியில் இருந்தாலும் ,உத்தமர் போல வேடம் அணிந்தாலும்,அவர்கள் ஒருக்காலும் மீண்டும் பதவிக்கு வர முடியாது. அது தான் நாட்டுக்கு நல்லது.இவர்கள் மீண்டும் வந்து நாட்டை சீரழித்து குட்டிச்சுவர் ஆக, தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
28-செப்-201811:25:44 IST Report Abuse
Panneerselvam Chinnasamy அம்மையார் கூட பூதக்கண்ணாடி போட்டு பார்த்து ஒன்றும் கிடைக்காமல் கடைசியில் சென்னை மேம்பாலங்கள் காண்ட்ராக்டில் ஊழல் என்று பொய் வழக்கு போட்டு நடு இரவில் முதியவர் என்று பாராமல் கலைஞரை கைது செய்து பின் மூக்குடைபட்டாரே அதை சொல்லுகிறாரா? இல்லை 2 G -இல் ஊழல் என்று சொல்லி கடைசியில் புஷ் என்று போனதே அதை சொல்லுகிறாரா? இல்லை எமெர்ஜென்சியில் சர்காரியாவை வைத்து கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ததை நியாயப்படுத்த ஒரு இயற்க்கை நியதி மறுக்கப்பட்ட (சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யக் கூட மறுக்கப் பட்ட) விசாரணை கமிஷனை சொல்லுகிறாரா? பொதுவில் தங்கள் ஊழலை மறைக்க திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லும் இந்த போக்கே அதிமுக செய்யும் பெரிய ஊழல்... தங்கள் ஊழலை நியாய படுத்தாமல் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் ,எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி mgr வழியில் கட்சியை நடத்தி செல்லுங்கள் ... அதுவே உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும், நாட்டிற்கும் நல்லது...உங்களுக்கு ஊக்கப்படுத்த இதோ உங்கள் அபிமான MGRபாடல் வரிகள்..."ஒரு தவறு செய்தால் .. அதும் தெரிந்தும் செய்தால்.. அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்.. "
Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
28-செப்-201816:52:45 IST Report Abuse
Varun Rameshசிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X