மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் மோடி

Added : செப் 28, 2018 | கருத்துகள் (27)
Share
Advertisement
Maldives, PM Modi, Ibrahim Mohammed Soli, மாலத்தீவு, பிரதமர் மோடி,  இப்ராஹிம் முகமது சோலீ , மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழா, நரேந்திர மோடி,பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் அப்துல்லா யாமீன்,மோடி,
Maldives President swearing-in ceremony, Narendra Modi, Prime Minister Narendra Modi, President Abdullah Yameen, Modi,Prime Minister Modi,

மாலே : மாலத்தீவு புதிய அதிபராக பதவியேற்கும் சோலீயின் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

அண்டை நாடான மாலத்தீவில் அண்மையில் நடந்த தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வியடைந்தார். எதிர்க்கட்சி கூட்டமைப்பு வேட்பாளரான இப்ராஹிம் முகமது சோலீ 58 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்நிலையில் நவம்பரில் நடக்கவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு மாலத்தீவு புதிய அதிபர் சோலீ அழைப்பு விடுத்துள்ளார்.


மோடி செல்லாத தேசம் :

பிரதமராக பதவியேற்ற மோடி உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அண்டை நாடான மாலத்தீவுக்கு மட்டும் அவர் இதுவரை செல்லவில்லை. யாமீனின் சீன ஆதரவு நிலைப்பாடு காரணமாக தொடர்ந்து மாலத்தீவை மோடி புறக்கணித்து வந்தார்.

தேர்தல் நேர்மையாக நடக்க இந்தியா உதவ வேண்டும் என மாலத்தீவு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. புதிய அதிபர் சோலீ இந்தியா ஆதரவு சிந்தனை கொண்டனர். எனவே பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்பார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-செப்-201818:30:26 IST Report Abuse
Cheran Perumal சுற்றிலும் உள்ள நாடுகள் இந்திய ஆதரவு நிலைப்பாடு எடுப்பது இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி.
Rate this:
Cancel
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
28-செப்-201817:08:39 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் மோடிக்கு சாராயம் காய்ச்சி விக்கிற கம்பெனி இல்லை, ஊரான் பணத்தை ஆட்டைய போட்டு பழக்கமில்லை, அரசியலில் கொள்ளையடிக்க தெரியலை எனவே தனி விமானம் இல்லை.ஏர் இந்தியா விமானத்தில்தான் போகனும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-செப்-201816:03:11 IST Report Abuse
sankaseshan அப்பனும் பொண்ணும் சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து சீனாவிடம் உதை வாங்கி உலகத்தை விட்டு போகும் வரை அரசு செலவில் சுற்றாத நாடா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X