கும்பமேளா பாதுகாப்புக்கு சைவ - சாது போலீசார் மட்டும் தேவை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கும்பமேளா பாதுகாப்புக்கு சைவ - சாது போலீசார் மட்டும் தேவை

Updated : செப் 28, 2018 | Added : செப் 28, 2018 | கருத்துகள் (14)
Share
அலகாபாத் கும்பமேளா, சைவ போலீஸ்,   துணை ராணுவம், கும்பமேளா நிர்வாகிகள் ,  சாது போலீஸ், டிஐஜி கே.பி.சிங், உத்தர பிரதேசம் , உத்தர பிரதேசம் கும்பமேளா, உ.பி.,சைவம், போலீஸ் பாதுகாப்பு, 
Allahabad Kumbh Mela, Vegetarian Police, Paramilitary, Kumbh Mela Administrators,  DIG KP Singh,Uttar Pradesh, Uttar Pradesh Kumbh Mela, UP, Vegetarian, Police Security,

அலகாபாத் : உ.பி., மாநிலம் அலகாபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ம் தேதி கும்பமேளா துவங்குகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அக்டோபர் மாதம் முதல் துவங்க உள்ளது.
சுமார் 10,000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர், போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கும்பமேளா பாதுப்பிற்கு வரும் போலீசார் இளமையாக, துடிப்புடைய, சைவம் சாப்பிடுபவர்களாக, ஒழுக்கமான, புகைப்பிடுக்கும் பழக்கம் இல்லாத, சாந்தமாக பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என கும்பமேளா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் மூத்த அதுிகாரிகளிடம் இருந்து நற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அலகாபாத்தை சேர்ந்த போலீசார் யாரும் கும்பமேளா பாதுகாப்பிற்கு வேண்டாம் என கும்பமேளா நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
கான்ஸ்டபிள்கள் 35 வயதிற்கு கீழ் உள்ளவர்களாகவும், தலைமை காவலர்கள் 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களாகவும், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கும்பமேளா பாதுகாப்பு பணி கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களில், கும்பமேளா நிர்வாகம் கூறி உள்ள தகுதிகளுடன் இருப்பவர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என கும்பமேளாவிற்கான டிஐஜி கே.பி.சிங், மாவட்ட எஸ்எஸ்பி.,க்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X