சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

Updated : செப் 28, 2018 | Added : செப் 28, 2018 | கருத்துகள் (220)
Share
Advertisement
Sabarimala,  temple, supreme court, sc, சபரிமலை, அய்யப்பன் கோயில், பெண்கள், சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.


வழக்கு

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என, பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது. இங்கு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க, அரசுக்கு ஆட்சேபனை இல்லை என, கேரள அரசு சமீபத்தில் தெரிவித்தது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கன்வில்கர், சந்திரசூட், நாரிமன், இந்து மல்ேஹாத்ரா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.


போராட்டம்

இந்த அமர்வில், 4 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு: பல நூற்றாண்டுகளாக பெண்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. பெண்களை கடவுளாக கவுரவிக்கும் நாட்டில் அவர்களை பலவீனமானவர்களாக கருதக்கூடாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான், பெண்கள் காத்திருக்க வேண்டும். மனிதர்களின் பக்தி என்பது, உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக தீர்மானிக்கக்கூடாது. வழிபாட்டு தளங்களில் பாகுபாடு காட்டக்கூடாது. பாலின அடிப்படையில், பொது இடங்களில் பொது மக்கள் செல்ல தடை விதிப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (220)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar.s. - bangalore,இந்தியா
03-அக்-201814:58:12 IST Report Abuse
kumar.s. இந்த விஷயத்தில் பெண்களின் சமஉரிமையைப்பற்றியோ, பாலினத்தின்மேல் பாகுபாடு கடைப்பிடித்தார்கள் என்றோ கருதக்கூடாது. இது ஒரு மதம் சார்ந்த ஐதீகம் மற்றும் பல நூறாண்டுகளாக கடைபிடிக்கப்படும் மத நம்பிக்கை. அதுவும் எல்லா பெண்பாலினத்தவரையும் அனுமதிக்கவில்லை என்று வாதிடுவது சரியில்லை. 10 வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்குமேல் உள்ள பெண்களுக்கு, அதாவது, தீட்டு, வீட்டுக்கு விலக்காகும் பெண்களுக்கு மட்டும் தடை. இப்பொழுதும் அவர்கள் சபரி மலைக்கு போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது எந்த பெணகளுக்கும் தடை என்ற ஒன்றே கிடையாது. உச்ச நீதிமன்றம் இதை தவறாக புரிந்துக்கொண்டே தங்களது தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இந்த தீர்ப்பை பெரும்பான்மையான பெண்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஐயப்பன் ஒரு பிரம்மசாரி கடவுள் என்பது எல்லா பக்தர்களுக்கும் தெரியும். ஆகவே தீட்டுடன் வரும் பெண்கள் மலை ஏறக்கூடாது என்பது ஐதீகம். அப்படியிருக்கும்போது வழியில் தீட்டானால் அப்படிப்பட்டவர்களுக்கு தெய்வக்குற்றம் ஏற்படும் என்பது மதம் சார்ந்த நம்பிக்கை. அப்படி சந்நிதானத்திலேயே பெண்களுக்கு தீட்டாகும் பொது கோவில் வளாகத்தையே சுத்தம் செய்து ஷாந்தி செய்யவேண்டியதும் ஐதீகம். மேலும் இரவு பகலாக யாத்திரை செய்யும் பொது பெணகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான். அது மட்டுமல்லாமல் சிலர் இந்த புனித இடங்களை tourist ரிசார்ட் போல ஆக்கிவிடும் அபாயமும் பெரியதாக உள்ளது. தற்போது மிகவும் கட்டுக்குள் இருக்கிறது. பெண்களுக்கென்று தனி வரிசை ஏற்பாடு செய்வதும் சிரமம். ஆகவே SC இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்து மாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
29-செப்-201804:57:59 IST Report Abuse
B.s. Pillai Hindu religion has many women poets who sang the songs in praise of The Almighty. No one has any right to say that women can not come to the " Sannishanam " to worship the Lord Iyappa. From the time of Ramayanam, Kaikeye asked the boon for Bharathan to become the King, similarly Lord Iyappa mother wanted her son to become king. So iyappa sacrificed his claim for throne and went to the Forest, like Ram, and stayed there in Tapas. Lord Iyappa never told that no woman should come to worship him. This principle degrades the ideals of Lord Iyappa. It reflects hatred towards women folks. Being a saint, He would never have said or wished that young women should not come to " Sannidhanam " to worship him. Denying this to women is like hating your own mother. Women has equal rights or more rights than men, because they bear the man child also in their wombs for 9 months and give life to them. do not stab on the back your own mother. They pray only for the welfare of their children, male and female, and their husbands. Don't you want it ?
Rate this:
kumar.s. - bangalore,இந்தியா
23-அக்-201816:22:30 IST Report Abuse
kumar.s.Unfortunately you people are not appreciating the truth. The fact is not all the females are barred from reaching sannidhaanam. Only those in mensurating age group which means the danger of "theettu" should be avoided. We used see even our temples on the plains as and when some one accidentally urinate or making it dirty, the premises of the temple is washed, pooja conducted for the presiding deity and then only devotees allowed to have dharsan. This is ok here but imagine some lady of this age group mensurate in the temple complex & of '18 steps' what could be done when lakhs reach after trekking the mountainous stretch for about 20/30 kms. & waiting to have dharshan and closes the temple for cleaning. Such unwanted incidents should not happen here that's the point. This shouldn't be seen as a 'gender inequality' which is also misnomer because females 10 & >50 are still allowed to reach for the dharshan. Even a few days ago when a lady could prove she is 52 yrs using her Aadhaar card, but appeared only 40-45 she was allowed. How to verify every lady running into lakhs if they try to reach sannidhanam. One should view this matter impartially, keeping in mind the 'practical difficulties' & 'aachcharam' of the diety....
Rate this:
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
28-செப்-201820:47:32 IST Report Abuse
Shroog Court has no rights to control religious beliefs.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X