ஆபாச இணையதளங்களை தடை செய்ய உத்தரவு

Added : செப் 28, 2018 | கருத்துகள் (43)
Share
Advertisement
நைனிடால்: ஆபாச இணையதளங்களை கண்டிப்பாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை 4 மாணவர்கள் பலாத்காரம் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, பலாத்காரம் செய்யும் முன்னர் இணையதளத்தில் ஆபாச படங்களை பார்த்ததாக கூறினர்.இது தொடர்பாக மாநில ஐகோர்ட்
ஆபாச இணையதளங்கள், உத்தரகாண்ட் ஐகோர்ட்,

நைனிடால்: ஆபாச இணையதளங்களை கண்டிப்பாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை 4 மாணவர்கள் பலாத்காரம் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, பலாத்காரம் செய்யும் முன்னர் இணையதளத்தில் ஆபாச படங்களை பார்த்ததாக கூறினர்.

இது தொடர்பாக மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜிவ் சர்மா மற்றும் மனோஜ் திவாரி அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து, விசாரணை நடத்தியது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆபாச இணையதளங்களை, கண்டிப்பாக தடை செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக துவங்க வேண்டும். குழந்தைகளின் மனதில் பாதிப்பை தடுக்க, அவர்கள் ஆபாச இணையதளங்களை அளவில்லாமல் பார்ப்பதை தடுக்க வேண்டும். அல்லது தடை செய்ய வேண்டும். ஆபாச இணையதளங்களை தடை செய்வது குறித்து மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை அனைத்து, இணையதள சேவை நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். ஆபாச காட்சிகள் அனுப்புவதையும், பகிர்வதையும் தடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ArulKrish -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-201810:35:19 IST Report Abuse
ArulKrish only U certificate cinema must be allowed.... Lets not waste time
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-செப்-201808:12:01 IST Report Abuse
Srinivasan Kannaiya அதை இந்தியா முழுமைக்கும் கொண்டுவரவேண்டும்
Rate this:
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
29-செப்-201804:39:12 IST Report Abuse
arabuthamilan இனிமேல் யாரும் யாரையும் கற்பழிக்கலாம் என்று விரைவில் நீதிபதிகள் தீர்ப்பு கொண்டுவரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X