அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தியா வர டிரம்ப் ஆர்வம்

Added : செப் 28, 2018 | கருத்துகள் (16)
Share
Advertisement
Donald Trump,India,Trump, US Official,அதிபர், இந்தியா, டிரம்ப், டோனால்ட் டிரம்ப்,

நியூயார்க்: இந்தியா வர அதிபர் டிரம்ப் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.


அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றிருந்த போது, அதிபர் டிரம்ப் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். 2019 குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.


நெருங்கிய உறவு

இது தொடர்பாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான முதன்மை துணை செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் கூறுகையில், அதிபர், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள நிகழ்ச்சிகள், பணிகளின் அடிப்படையில் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அதிபர் டிரம்ப், இந்தியா வர ஆர்வமாக உள்ளார். ஆனால், அவர் முன் உள்ள பணிகளின் அடிப்படையில் பயணம் குறித்து முடிவு செய்யப்படும். இரு நாடுகளுக்கு இடையில் உள்ள நெருங்கிய உறவு காரணமாகத் தான்,ஏராளமான அமெரிக்க அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் இந்தியா செல்கின்றனர். இரு நாட்டு அரசு மற்றும் துறைகளுக்கு இடையே, 40 முக்கிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-செப்-201811:49:55 IST Report Abuse
Pasupathi Subbian ஆடு உறவு குட்டி பகை, இந்திய நாட்டின் ஆதரவு வேண்டும், ஆனால் இந்திய மக்களை விரட்டவேண்டும் என்ற கொள்கை .
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-செப்-201805:17:23 IST Report Abuse
Kasimani Baskaran ஒரு விமானம் முழுவதும் பெண் நண்பர்களை கூட்டி வருவார்....
Rate this:
Cancel
Rajan - chennai,இந்தியா
29-செப்-201803:14:45 IST Report Abuse
Rajan அது வரைக்கும் இவரு இருப்பாரா? நவம்பர் பிறகு... கத்தி இவர் மேல தொங்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X