நடப்பது செம்மொழி மாநாடு; மது எதற்கு?

Added : ஜூன் 17, 2010 | கருத்துகள் (9)
Share
Advertisement
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது மதுக்கடைகள் செயல்படுவதால், சாலை விபத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நேரிடும் அபாயம் உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிமாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி, "டாஸ்மாக்' மதுக்கடைகளை ஐந்து நாட்கள் மூட, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். கோவையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இம்மாநாட்டில்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது மதுக்கடைகள் செயல்படுவதால், சாலை விபத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நேரிடும் அபாயம் உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிமாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி, "டாஸ்மாக்' மதுக்கடைகளை ஐந்து நாட்கள் மூட, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.


கோவையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இம்மாநாட்டில் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்தும் பல லட்சம் மக்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வாகனங்களில் வெளிமாவட்ட மக்கள் கோவை நகருக்கு வரவுள்ளதால், சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடவுள்ளனர். மாநாடு முன்னிட்டு கோவையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என, அதன் ஊழியர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக, மாநாடு நடக்கும் நாட்களில் கடைக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கூடுதலாக இருப்பு வைத்திருக்க, ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருவோர் மது கிடைக்காமல், "அவதி'ப்படக் கூடாது என்ற முன்னேற்பாட்டில் டாஸ்மாக் நிர்வாகம், இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. கூடுதல் மது விற்பனையால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்ற போதிலும், அதன் எதிர்விளைவுகள் ஆபத்தானதாகவே இருக்கும்.


வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருவோர் மது அருந்தி, போதையில் சாலை, ஓட்டல், வர்த்தக நிறுவனங்களில் தகராறில் ஈடுபடவும், பொது இடங்களில் அத்துமீறிய செயல்களில் இறங்கவும் வாய்ப்புகள் உள்ளன. டிரைவர்கள், போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது, விபத்து உயிரிழப்புகள் நேரிடும் அபாயமும் அதிகமுள்ளன. வெளியூர்களில் இருந்து மாநாட்டுக்கு வருவோர் பாதுகாப்பாக, ஊருக்கு திரும்பிச் செல்வதற்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய தமிழக அரசு, கடைகளில் கூடுதல் எண்ணிக்கையில் மதுபானங்களை இருப்பு வைக்க உத்தரவிட்டிருப்பது, விந்தையானது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க கோவைக்கு வரும் வேளையில், "குடிமகன்'கள் போதையில் ஆங்காங்கு அத்துமீறலில் ஈடுபடுவதை கண்டால், நிச்சயம் முகம் சுழிப்பர்; தமிழ் கலாசாரத்தின் மீதான பார்வையும் வேறுவிதமாக அமைந்துவிடும். இதனால், மாநாடு நடக்கும் நாட்களில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. அப்போது தான், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நோக்கம் நிறைவேறும். மாநாடு நாட்களில் மதுக்கடைகளை மூடுவதற்கான வாய்ப்பு குறித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது, "இந்த யோசனை அரசுக்கு தெரியப்படுத்தப்படும்' என்றார்.


முடிவு யார் கையில்? போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: செம்மொழி மாநாட்டின் போது, மதுக்கடைகள் திறந்திருப்பது சட்டம் ஒழங்கு பிரச்னையை ஏற்படுத்தும். பல லட்சம் பேர் கூடும் இடத்தில், அனைவரையும் தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். நகரின் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். தலைவர்களுக்கான பாதுகாப்பு, மாநாடு நிகழ்விட பாதுகாப்பு, அலங்கார வாகன அணிவகுப்புக்கான பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு பணிகளுக்கே போலீசாரின் எண்ணிக்கை போதுமானதாக இருக்கும். மாநாடு நடக்கும் வேளையில் குடிபோதையில் தாறுமாறாக வாகனம் ஓட்டுவோரால் விபத்து ஏற்படும். அடிதடி தகராறு, ஈவ்-டீசிங் பிரச்னைகளும் தலைதூக்கும். மதுக்கடைகளை மூடுவதே சிறந்தது. எனினும், போலீஸ் தரப்பில் இருந்து அரசுக்கு யோசனை தெரிவிக்க வாய்ப்பில்லை. மாவட்ட நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.


                                                                                                      - நமது நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குணசீலன் - கோயம்புத்தூர் ,இந்தியா
23-ஜூன்-201017:08:16 IST Report Abuse
குணசீலன் தமிழ்நாட்டில் எத்தனையோ நகரங்கள் இருந்தும் எங்களுடைய கோவை நகரை தேர்ந்தெடுத்த முதல்வர் கலைஞர்க்கு நன்றி!
Rate this:
Cancel
ஓம்னி - சென்னை,இந்தியா
23-ஜூன்-201015:17:11 IST Report Abuse
ஓம்னி தமிழே போதைதான் தலைவா..
Rate this:
Cancel
குடிமகன் - tirupur,இந்தியா
19-ஜூன்-201019:16:05 IST Report Abuse
குடிமகன் மது விற்பனை இல்லாவிட்டால் மாநாடு நடத்த காசு ஏது? நன்றி மறக்கும் உலகமடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X