லோக்சபா தேர்தலில் நவக்கிரக கூட்டணி: தி.மு.க. புது திட்டம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நவக்கிரகம் !
லோக்சபா தேர்தலில் தி.மு.க., அணியில் 9 கட்சிகள் கூட்டணி
திரைமறைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியது
காங்கிரஸ் - 6, த.மா.கா., - 2, ம.தி.மு.க., - 2 ஒதுக்க திட்டம்

வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில், ஜி.கே.வாசனின், த.மா.கா.,வும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும் இடம் பெறுவதால், ஒன்பது கட்சிகள் இணைந்து, 'நவக்கிரக கூட்டணி' உருவாகிறது. அக்கட்சிகள் மத்தியில், திரைமறைவில், தொகுதிபங்கீடு பேச்சும் துவங்கியுள்ளது.

லோக்சபா தேர்தல், நவக்கிரக கூட்டணி, தி.மு.க., புது திட்டம்


லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. அதனால், விரைவில் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு விவகாரங்களை முடித்து, தேர்த லுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட வேண்டும் என, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டு, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

வரவேற்பு


லோக்சபா தேர்தலை பொறுத்தவரையில், தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தான், பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்டி, ஓட்டு கேட்க முடியும். எனவே, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட, தி.மு.க., தயாராகி விட்டது.சமீபத்தில்,

.ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த, தி.மு.க, தலைவர், ஸ்டாலின், 'லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்' என, உறுதியாகதெரிவித்துள்ளார்.அவரது அறிவிப்பை, காங்கிரஸ் தலைவர், ராகுலும் வரவேற்றுள்ளார்.தி.மு.க., தலைமையிலானகூட்டணியில், காங்கிரசுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பதும், ராகுலிடம், ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் ஐந்து தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., முன்வந்துள்ளது. அதாவது, ஸ்ரீபெரும்புதுார், சேலம், ராமநாதபுரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், புதுச்சேரி உட்பட, ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.ஒன்பது கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது, தமிழகத்திலிருந்து, 40 தொகுதிகள் ஒட்டுமொத்தமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதால்,காங்கிரசுக்கு, ஆறு தொகுதிகள் பெறுவதில், ராகுல் தரப்பில், எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை.தென் சென்னைஅதேபோல, வாசன் தலைமையிலான, த.மா.கா.,விற்கு, மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய, இரு லோக்சபா தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.மக்கள் நீதி மையம் கட்சிக்கு, அதாவது, கமல்போட்டியிடுவதற்காக, தென் சென்னையை ஒதுக்கலாம் என,ஸ்டாலின் விரும்புகிறார்.நடிகர் ரஜினியின் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்க, கமல் கைகொடுப்பார்

Advertisement

என்பதால், அவருடன் உள்ள கருத்து வேறுபாட்டையும் மறந்து, ஒரு தொகுதி வழங்க, தி.மு.க., தயாராக உள்ளது.

நவக்கிரக கூட்டணி


ம.தி.மு.க.,வுக்கு, ஈரோடு, விருதுநகர் என, இரு தொகுதிகளும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தலா, இரு தொகுதிகள் என, தென்காசி, கோவை, நாகப்பட்டினம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என, பேசப்படுகிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சிதம்பரம் தொகுதியும், முஸ்லிம் லீக் கட்சிக்கு, திருச்சியும் என, எட்டு கட்சிகளுக்கும், 17 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டு, 23 தொகுதி களில், தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளது.இந்த மெகா கூட்டணி யில், தி.மு.க.,வுடன் சேர்த்து, மொத்தம் ஒன்பது கட்சிகள் இடம் பெறுவ தால், இது, நவக்கிரக கூட்டணியாக கருதப்படுகிறது.தற்போது, திரைமறைவில் நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சு, பொங்க லுக்கு பின், அதிகாரப்பூர்வ வடிவம் பெறும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
01-அக்-201820:52:49 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இந்தக் கூட்டணி செயிக்காதுங்க பிகாஸ் ஒத்துமையே இல்லாத கூட்டம் சுடாலின் குர்சியே தான் வேண்டும் காங்கிரஸ் காரன் சுடுகண்ட பூனை பாருங்க பிஜேபி ஏ வந்துரும் இந்த மாமியார்க்கூட்டம் எல்லாம் லபோதிபோன்னு கத்தின்னே இருக்கும் வைத்தே பேச்சுன்னு

Rate this:
Manian - Chennai,இந்தியா
01-அக்-201819:13:18 IST Report Abuse

Manianஇவர்களை நவ -அக்கிரமங்கள் என்றும் சொன்னால்தான் சரியாக இருக்குமோ? - சந்தேகம் சங்கட முத்தப்பன்

Rate this:
jeans bala - CHENNAI,இந்தியா
01-அக்-201817:44:04 IST Report Abuse

jeans balaஸ்டாலின் தலைவருக்கு பயம் எதற்கு கூட்டணி இல்லாமல் தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் மாறாக நவகிரக சேர்த்தால் வொவ்வொன்றும் எதிர் கிரகம் யாரும் அவர்களுக்கு வேலை செய்யமாட்டார்கள் சூரியன் நடுவில் நீங்கள் நின்றால் நவகிரக உங்களுக்கு ஆப்பு வைப்பது உறுதி தயவு செய்து கூட்டணி வேண்டாம் தணிந்து செயல்பாடு துணிந்து செயல்பாடு வெற்றி நிச்சயம் 40 /40

Rate this:
மேலும் 67 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X