பதிவு செய்த நாள் :
சுனாமி!
இந்தோனேஷியாவில் 832 பேர் பலி
அடுத்தடுத்த ஆபத்துகளால் மக்கள் பீதி

பலு: இந்தோனேஷியாவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, 832க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின், வடக்கு பகுதியில் உள்ள, சுலவேசி தீவின், டோங்காலா நகரில், நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில்,6.1 ஆக பதிவானது.
இதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மத்திய பகுதியில் உள்ள, பலு நகரில், 7.5 ரிக்டர் அளவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு நகரங்களிலும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன; மின் இணைப்பு, தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. பலு நகரில் வீடுகள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு, அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.இதையடுத்து, உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது; பின், திரும்ப பெறப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில், கடலோரப் பகுதிகளில், சுனாமி தாக்கியது. 2 மீ., உயரத்திற்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகள், கரையை நோக்கி சீறிப் பாய்ந்தன.இதில், கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டடங்கள் சேதம் அடைந்தன. சுனாமியால், பலு நகர் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகியது.நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, இதுவரை, 832க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, தேசிய பேரிடர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்; சுனாமி பேரலைகளில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், காயம் அடைந்தோருக்கு, மருத்துவமனை வெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, ராணுவத்தினர் விரைந்துள்ளனர்.இதற்கிடையே, சுனாமி பேரலைகள் தாக்கும் காட்சிகள், 'வீடியோ' எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், ராட்சத அலைகள் எழும்பி, கடல் பகுதியை மூழ்கச் செய்வதும், கட்டடங்கள் அலையில் மூழ்குவதும் இடம் பெற்றுள்ளன.கடலோரத்தில் உள்ள மசூதியை மூழ்கச் செய்யும் அளவுக்கு, சுனாமி அலைகள் எழும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.சுனாமி அலைகளில், பலர் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.சமீபத்தில், இந்தோனேஷியாவின், லம்பாக் தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் சூறாவளி17 பேர் காயம்

கிழக்காசிய நாடான, ஜப்பானின் ஒகினாவாவில், நேற்று சூறாவளி காற்று வீசியது. இதில், 17 பேர் காயம் அடைந்தனர். இந்த சூறாவளியால், பல பகுதிகளில், சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.இதனால், சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, 'இந்த சூறாவளி, மேலும் தீவிரமடையும்' என, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.ஒகினாவாவில், ஆபத்தான பகுதிகளில் இருந்து, பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில், தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனால், மீட்புப் படையினர் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய சுனாமி பேரலைகள்

மார்ச் 3, 1933
ஜப்பானில், ஹோன்சு தீவில்

Advertisement


8.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். இதைத் தெடார்ந்து ஏற்பட்ட சுனாமியால், 3,000 பேர் பலிமே 21 - 30, 1960
சிலியில், பசிபிக் பெருங்கடலில், 9.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். பின் ஏற்பட்ட சுனாமியால், இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில், 5,700 பேர் பலிஆக., 17, 1999
துருக்கியில், 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். பின் ஏற்பட்ட சுனாமியால், 17 ஆயிரம் பேர் பலி

பிப்., 28, 2010
சிலியில், 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால், 800 பேர் பலி
செப்., 28, 2018
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில், 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். பின் ஏற்பட்ட சுனாமியால், 400 பேர் பலி
நவ., 4, 1952
சிலி மற்றும் பெரு இடையே, பசிபிக் கடலில், 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால், 2,300 பேர் பலி
ஜூலை 17, 1998
பப்புவா நியூ கினியாவில், 7 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கம். சுனாமி அலைகளால், 2,000 பேர் பலி
டிச., 26, 2004
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். தொடர்ந்து உருவான சுனாமியால், இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்டன. 2.50 லட்சம் பேர் பலி
மார்ச் 11, 2011
ஜப்பானின் வடகிழக்கில், கடல்பகுதியில், 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். பின் ஏற்பட்ட சுனாமியால், 16 ஆயிரம் பேர் பலி


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
30-செப்-201820:32:37 IST Report Abuse

BoochiMarunthuகடலுக்கு அடியில் எண்ணெய் எடுத்தால் fracking முறையில் காஸ் எடுத்தால் நில நடுக்கம் வரும் , கடலில் நில நடுக்கம் வந்தால் அது சுனாமியாக மாறும் . அதனால தான் வட நாட்டு கும்பல் தமிழ்நாட்டையே சுத்தி சுத்தி வருகிறது .

Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
01-அக்-201804:11:16 IST Report Abuse

 nicolethomsonஅப்போ சவுதியில் , வளைகுடா நாடுகளில் ஏன் சார் வரவில்லை? பக்கத்து மலேஷியாவில், புரூனேயில் fracking முறை எண்ணெய் எடுத்தல் தான் நடைபெறுகிறது, கொஞ்சம் புரிஞ்சு எழுதுங்க சார், இன்னமும் புரிய வேண்டும் என்றால் "RING OF FIRE " என்று தீண்டி விட்டு எழுதுங் நா ...

Rate this:
R Elangovan - Thiruvarur,இந்தியா
30-செப்-201811:30:25 IST Report Abuse

R Elangovanஉலகளாவிய தீவிரவாதம், பொறுப்பிலுள்ளவர்கள் பொறுப்பற்று லஞ்ச லாவண்யத்தில் உழன்று மகிழ்வது நீதி செய்வதறியாது திகைத்து நிற்பது, பஞ்சபாதக செயல்களை பயப்படாமல் துணிந்து செய்வது ஈடுபடுவது என்பது பல்கிப் பெருகிவிட்ட நிலையில் இயற்க்கை (கடவுள்) ஒரு நீதி தவறா நெறியாளர் தன்கடமைகளை ஒரு நூல் பிசகாமல் ஆற்றிக்கொண்டு வருவதால் தான் நாம் அதன் மேல் அமர்ந்து கொண்டு இத்தனை ஆட்டம் போடுகிறோம் மனித அணு சக்தி பெரிதாக நினைத்து நாம் ஒருவரை ஒருவர் மிரட்டுகிறோம் இயற்கை சக்திக்கு எதிராக மனிதனால் எதிர்த்து நிற்க முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை எப்பொழுது அதை நாம் ஓவ்வொருவரும் உணர்ந்து செயப்படுகிறோமோ அப்பொழுது முதலே மேலே கண்ட அனைத்து கெட்டவர்களும், கெட்டவைகலும் தானாக ஒழிந்து இந்த உலகம் சுபிட்சம் அடையும் அப்படி செயல் படாத பட்சத்தில் இயற்க்கை தன் சமன்பாட்டை தானாக குறிப்பிட்ட காலத்தில் அவைகளை செய்து முடித்து மறுபடியும் இந்த உலக பூமிப்பந்தை சமன்படுத்தும் என்பதுதான் நிதர்சன உண்மை நாம் 2000ம் வருடத்தைத்தான் பார்த்துக் கொண்டு இது பெரிய வருசமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் இயற்கையை பொறுத்தவரை இது ஒரு தூசிக்கு கூட சமமானது அல்ல உணர்ந்து செயல்படுங்கள் இந்தோனேசியாவில் ஏற்படுவது இந்த உலக மனித பதர்களுக்கு ஒரு தொடர் எச்சரிக்கையே தவிர அதுதான் மையப்புள்ளி அதன் தாக்கம் இந்த பூமிப்பந்து பூராக பரவும் என்பதுதான் உண்மை. பிரபஞ்சத்தில் மேலே மேலே செல்லும்போது பூமிப்பந்தே புள்ளியாக மறைந்துவிடும் போது அதன் மீது ஆட்டம் போடும் மனிதப் பதர் நீ எங்கே எம்மாத்திரம்.

Rate this:
tamil - coonoor,இந்தியா
30-செப்-201809:09:23 IST Report Abuse

tamilஎத்தனை கடவுள்கள், எத்தனை மதங்கள், எவ்வளவு விஞ்ஞான தொழில்நுட்பங்கள், இயற்கைக்கு முன் நாம் வெறும் பதர்கள், இயற்கைக்கு முன் யாரும் உயர்ந்தவனும் இல்லை, யாரும் தாழ்ந்தவனும் இல்லை, மத தீவிரவாதிகள் தான் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X