அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'அரசு செலவில் அரசியல் செய்யாதீங்க'

சென்னை: 'மக்கள் வரிப் பணத்தில், அரசியல் செய்ய வேண்டாம்' என, தமிழக அரசுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அறிவுரை கூறியுள்ளார்.

அரசு செலவு, அரசியல்,திமுக, ஸ்டாலின், எம்ஜிஆர், மக்கள் வரிப்பணம்

அவரது அறிக்கை:எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், என் பெயரை இடம் பெறச் செய்திருக்கும், அரசியல் பண்பாட்டை மதிக்கிறேன். அதில் பங்கேற்க வேண்டும் என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை


அழைத்துள்ளார்.பல மாவட்டங்களில், அரசு சார்பில் நடத்தப்பட்ட, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாக்களில், அவரது அருமை பெருமைகளைபரப்புவதை விட, தி.மு.க.,வையும், கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரையும், கடுமையாக விமர்சிப்பதையே, முதன்மை இலக்காக கொண்டுஉள்ளனர்.நிறைவு விழா என்பது, இன்றைய ஆட்சியாளர்களின் மிச்சமிருக்கும் அரசியல் பயணத்திற்காக, மக்கள் வரிப் பணத்தில், அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பர விழா.உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பல நுாறு விளம்பர பேனர்களை, போக்குவரத்திற்குஇடையூறாக, பாதையெல்லாம் வைத்து நடத்தப்படும் விழா. இதன் பின்னணியையும், உள்நோக்கத்தையும் புரிந்து, அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற,

Advertisement

முடிவுக்கு வந்துள்ளேன்.
அரசு சார்பிலான, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மலருக்கு, என் கட்டுரையை தந்துள்ளேன். எனக்கு பிடித்த நடிகர், எம்.ஜி.ஆர்., அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது, கருணாநிதி - எம்.ஜி.ஆர்., நட்பு. அதை அரசியலாக்காமல், எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக, அவரது நுாற்றாண்டை கொண்டாட, அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
02-அக்-201805:12:21 IST Report Abuse

meenakshisundaramகட்சி பணத்தையே கட்சிக்கு செலவு செய்யாத இந்த "உத்தமர்" பேசும் டயலாக் . வசூல் வேட்டையே ஆரம்பிச்சுட்டு பேசற பேச்சைப்பாரு.

Rate this:
30-செப்-201820:40:09 IST Report Abuse

SB.RAVICHANDRANMr. சுடல் தினம் உப்பு உப்பு போட்டு சாப்பிடு. இவர் மழை பெய் என்றால் மழை பெய்யும் அவ்வளவு யோக்கியரு.

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
30-செப்-201819:07:19 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்ஏங்க உங்க குடும்ப சொத்து எவ்வளவு என தெரியுமா? உங்க நைனா சென்னை வந்தப்போ காசே இல்லை ஆனா இப்போ எவ்வளவு லட்சம் கோடிகள் இருக்கும். எனவே நீங்க போட்டிருக்கிற டவுசர் கூட எங்க காசுதான் தெரியுமா?.......... இதுல மத்தவங்களை எப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம பேசரீங்க அதுக்கெல்லாம் உப்பே இல்லாம சாப்பிடனும்........

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X