சினிமா கனவுடன் வாய்ப்புகளை தேடி அலைந்து அலைந்து ஓயாத கால்கள்...சின்னச்சின்ன கதாபாத்திரங்களால் பெற்ற நம்பிக்கை...14 ஆண்டுகளுக்கு பிறகு மனம் நிரம்பிய சந்தோஷம்...எதிர்பார்க்காத ஹீரோ வாய்ப்பு...திறமைக்கு கிடைத்த அங்கீகாரத்தின் அடையாளம்...இவை தான் நடிகர் ஆண்டனி. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசியதிலிருந்து...
* ஆசை?திண்டுக்கல்லில் இருந்து 2004ல் சென்னைக்கு சென்றேன். ஓட்டல் சர்வர், அலுவலக உதவியாளர் வேலை செய்து கொண்டே ஸ்டுடியோக்களாக ஏறி இறங்கினேன். அங்கு கிடைத்த நண்பர்களால் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.
* நடித்தது?வெண்ணிலா கபடிக்குழு, களவாணி, பிரம்மன், நெடுஞ்சாலை படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள். கதாநாயகனாக தற்போது 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தில்.
* அனுபவம்?இயக்குனர் லெனின் பாரதியால் கிடைத்த வாய்ப்பு இது. நாங்க நல்ல நண்பர்கள். பெயர் சொல்லும் மாதிரி கதாபாத்திரம் தர அவரிடம் கேட்டிருந்தேன். கதாநாயகன் வாய்ப்பே தந்திட்டார். சண்டை, டான்ஸ் என பட்டையை கிளப்பும் கதாநாயகர்கள் மத்தியில் என்னையும் மக்களுக்கு பிடித்த மாதிரி நடிக்க வைத்திருக்கிறார்.
* வாய்ப்புகள்?மேற்கு தொடர்ச்சி மலை மாதிரி நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். ஏதோ வந்தோம் நடித்தோம் என இல்லாமல் நல்ல கதைகளை மக்களுக்கு தர வேண்டும்.
* போட்டி?இங்கு திறமை உள்ளவர்கள் வெற்றி பெறலாம். ஆனால் வாய்ப்பு கிடைக்க கொஞ்சம் நாட்களாகும். தினமும் நிறைய பேர் சினிமா கனவுகளுடன் வருகின்றனர். உழைப்பும், நேர்மையும் இருந்தால் வெற்றி தான்.
* எதிர்கால கனவு?நடிகராகாமல் இருந்தால் ஆசிரியராக ஆகியிருப்பேன். ஆனால் ஆசை யாரை விட்டது. 14 ஆண்டுகள் போராடி கதாநாயகனாகியுள்ளேன். சினிமா உலகில் அவரவர் வாழ்க்கைக்கு தினமும் போராடிக் கொண்டிருக்கும் எல்லோருமே கதாநாயகர்கள் தான்.இவரை வாழ்த்த 9841262507.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE