'பேஸ் புக்', 'வாட்ஸ் ஆப்' வரிசையில் அடுத்த வளர்ச்சியாக புதிது புதிதாய் 'மொபைல் ஆப்'கள் இளைய தலைமுறையை கவர்ந்து வருகின்றன. அதில் முக்கியமானது 'மியூசிக்கலி ஆப்'. இதனை அனைவரும் தங்களின் நடிப்பு திறனை உலகறிய செய்யும் தளமாக பயன்படுத்தி பிரபலமடைந்து வருகின்றனர். அந்தவகையில் பிரபலமாகி 'டிவி' தொடர்கள், சினிமா வாய்ப்புகளை பெற்று தனித்துவமான நடிப்பாற்றலால் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் அக் ஷய் கமல். அவர் பேசியதிலிருந்து...
* குடும்பம்...சென்னையில் பிறந்தேன். அப்பா ஹரிநாத், அம்மா வைஜெயந்திமாலா, தம்பி அர்ஜூன் என அளவான குடும்பம்.
* படிப்பு...பொறியியல் முடித்துள்ளேன். கல்லுாரி முடிந்து ஆறு மாதங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். பின் ராஜினாமா செய்து விட்டு சினிமா வாய்ப்பு தேட துவங்கினேன்.
* சினிமா ஆர்வம்சிறுவயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்ப சூழ்நிலை ஏற்றதாக இல்லை. என் தோற்றத்தை பார்த்து சினிமா வாய்ப்பு கிடைக்கும் என நண்பர்கள் நம்பிக்கை ஊட்டினர். அதன்படி சினிமா வாழ்க்கை துவங்கியுள்ளது. பெயரிடப்படாத சினிமா ஒன்றில் நடித்து வருகிறேன்.
* வாய்ப்பு கிடைத்தது'மியூசிக்கலி ஆப் 'பை நன்றாக பயன்படுத்தினேன். அதன் மூலம் சினிமா வாய்ப்பு வந்தது. தற்போது 'டிவி'யில் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
* 'மியூசிக்கலி ஆப்' பயன்படுத்தினால் சினிமாவில் நுழையலாமாநிச்சயமாக. சினிமாவுக்கு செல்ல சரியான தளம் அது. முறையாக பயன்படுத்தினால் வாய்ப்பு தேடி வரும்.
* பிடித்த நடிகர்நாசர். அவர் தான் என் ரோல் மாடல்.
* ஹீரோவா, வில்லனா...நல்ல கதை கிடைத்தால் ஹீரோவாக, ஏன் வில்லனாகவும் கூட நடிப்பேன்.
* ரசிகைகள் அதிகமாமேரசிகர்களும் உள்ளனர். அவர்களது குடும்பத்தில் ஒருவராக இருப்பதால் ரசிகைகள் அதிகம்.
* சினிமாவில் இலக்குமுழு திறமைகளை காட்டி மக்கள் மனதில் நல்ல நடிகர் என பெயர் வாங்க வேண்டும். அவ்வளவு தான்.
இவரை பாராட்ட: the_akshay_kamal_
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE