பதிவு செய்த நாள் :
எச்சரிக்கை!
தாக்கினால் தகுந்த பதிலடி கொடுப்போம்
பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்

புதுடில்லி:''அமைதியை இந்தியா விரும்புகிறது; அதே நேரத்தில், அதற்காக சுய மரியாதையை விலை கொடுக்க மாட்டோம். நாட்டின் அமைதியை சீர்குலைக்க யார் முயன்றாலும், அதற்கு நம் ராணுவம் தகுந்த பதிலடி கொடுக் கும்,'' என, 'மன் கீ பாத்' ரேடியோ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எச்சரிக்கை! ,தாக்கினால், தகுந்த, பதிலடி, கொடுப்போம் பாகிஸ்தான் ,மீது பிரதமர் மோடி,பாய்ச்சல்


பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும், 'மன் கீ பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். இந்த மாதத்துக்கான நிகழ்ச்சி, நேற்று ஒலி பரப்பானது. அதில், அவர் கூறியதாவது:


நம் நாடு, பாரம்பரியமாக, அமைதியை விரும்பும் நாடு. இதுவரை மற்ற நாடுகளின் எல்லையை ஆக்கிரமிக்க வேண்டும் என விரும்பியதில்லை.இதில் இருந்தே, அமைதியே, நம் நாட்டின் பாதை என்பதை
உலக நாடுகள் அறிந்து கொள்ளலாம்.


மறைமுக போர்ஐ.நா., அமைதிப் படையின் பல்வேறு அமைதி முயற்சிகளில், நம் வீரர்கள் தொடர்ந்து பங்கேற்று, சிறந்த சேவையை செய்து வருகின்றனர். உலகிலேயே, அமைதி படைக் காக, அதிக அளவுக்கு வீரர்களை அனுப்பும் நாடாக நாம் உள்ளோம்.அதே நேரத்தில், அமைதிக்காக, நம் சுய மரியாதை, நாட்டின் இறையாண்மையை விலை கொடுக்க மாட்டோம். பயங்கரவாதம் என்ற பெயரில், எல்லையில் மறைமுகப் போர் நடத்தப் படுகிறது.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது, நம் ராணுவம், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும், துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது. தற்போது, அதன்
இரண்டாம் ஆண்டைக் கொண்டாடி வருகிறோம்.நம் ராணுவத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும், தாக்குதல்களை நடத்தினா லும், பதிலடி கொடுப்போம் என்பதை நிரூபித்து உள்ளோம். நம் ராணுவத்தினரின் தியாகங்கள்

வீணாகாது; தாக்குதல் நடத்தினால்,பதிலடி கொடுக்க, நம் வீரர்கள் எப்போதும் தயாராக உள்ளனர்.


நம் நாட்டில் நிலவும் அமைதியை சீர்குலைக்க யார் முயன்றாலும், அதற்கு நம் ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும்.கடந்த, 1932ல், உருவாக்கப்பட்ட நம் விமானப்படை, வரும், 8ம் தேதி, விமானப் படை தினத்தைக் கொண்டாட உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த, 1947ல், ஸ்ரீநகரைக் கைப்பற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது, நம் விமானப் படை உடனடி யாக படைகளை கொண்டுசென்று, அந்த முயற்சியை முறியடித்தது.


கடந்த, 1965, 1971 மற்றும் கார்கில் போர்களின்போது, விமானபடையின் வீரத்தை நேரடியாக பார்த்தோம். அதேபோல், புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், படையின் சேவை அளப்பரியது. விமான படையில், பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கபட்டு, பாலினப் பாகுபாடு நீக்கப்பட்டுள்ளது.


ஆணையம்தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப் பட்டு, 25 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. மனித உரிமைகளை அறிந்து, அதை மதிக்கக் கூடியவர்களாக அனைவரும் இருக்க வேண்டும்.
அப்போதுதான், 'அனைவருடன் இணைந்து, அனை வரின் நலனுக்காக' என்ற அரசின் கொள்கைக்கு வலுசேர்க்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


செலவழிக்கும் போது கவனியுங்க!'மன் கீ பாத்' நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது:ஒரு பொருளை வாங்கும் போது, அதற்காக தன் திறன், உழைப்பை கொடுத்த வர்களை, நினைத்து பார்க்க வேண்டும். இதுவே, மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளில், அவருக்கு நாம் செய்யும் மிகப் பெரிய மரியாதை. எந்தப் பொருளை நாம் வாங்கினாலும், அதனால், யார் பயனடைவர், அவர்களுக்கு இந்தப் பணம் சேரும்போது அவர்களது முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை எல்லாம் நினைத்து பார்க்க வேண்டும்.


ஏழை உழைப்பாளிக்கு உதவும் வகையில், அவர்களது தயாரிப்புகளைவாங்க வேண்டும். துாய்மையே சேவை என்ற இயக்கத்துக்கு அமோக ஆதரவு அளித்ததற்காக அனைவருக்கும் நன்றி. தற்போது உலகெங்கும், துாய்மையின் முக்கியத் துவம் பெரிய அளவில் பேசப்படுகிறது. முதல்

Advertisement

சர்வதேச துாய்மை மாநாட்டை நாம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள குஜராத்தில், திரவ
இயற்கை எரிவாயு மையம் திறப்பு விழா உள்ளிட்ட, நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சி களில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் முதல் குடியிருப்பு சங்கத்தை உருவாக்கிய பெருமை, சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. கடந்த, 1927ல், ஆமதாபாத் நகராட்சித் தேர்தலில் வென்ற அவர், பிரீதம் ராய் தேசாய் என்பவரிடம், நாட்டின் முதல் குடியிருப்பு சங்கத்தை உருவாக்கும்படி கூறினார். அந்த சங்கத்தையும் படேல் தான் துவக்கி வைத்தார்.


அந்த இடத்துக்கு பிரீதம் ராய் தேசாயின் நினைவாக, பிரீதம் நகர் என்று பெயரிடப் பட்டது. ஆனால், அந்த சங்கம் உருவாக காரணமாக இருந்த படேலின் பெயர் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிபொருள் தேவையில், தன்னிறைவு நிலையை அடைய வேண்டும். மின்சாரம், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது. மின்சாரம் இல்லாமல், எந்த வேலையும் நடக்காது. மொபைல் போன், சார்ஜ் செய்வதற்கு கூட, மின்சாரம் தேவை.


மின்சார தட்டுப்பாடு உள்ள எந்த ஒரு நாடும், ஏழ்மையிலிருந்து மீண்டு வர முடியாது. நாட்டின் நிதி நிலை, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றை சார்ந்தே அமையும்.நாடு சுதந்திரம் அடைந்த, 60 ஆண்டுகளில், நாட்டில் உள்ள, 13 கோடி பேர் மட்டுமே, சமையல், 'காஸ்' இணைப்பு பெற்றிருந்தனர். ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், 4ஆண்டுகளில், 60 கோடி பேர், 'காஸ்' இணைப்பு பெற்றுள்ளனர்.


பொருளாதார வளர்ச்சியில், ஐரோப்பிய நாடான பிரிட்டனை, நாம் மிஞ்சும் நாள், வெகு தொலை வில் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-201820:30:08 IST Report Abuse

AROMA S B. RAVICHANDRANவாய் சொல்லில் வீரர்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-அக்-201815:57:55 IST Report Abuse

Pugazh Vஇந்த உதார் எல்லாம் மக்களின் கவனத்தை இந்த கேடுகெட்ட அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளிலிருந்து திசை திருப்பும் வில்லத்தனம். சமையல் வாயு சிலிண்டர் ரூ 59 ஒரே நாளில் உயர்த்தியதை மக்கள் மறக்க இந்த பாகிஸ்தான் மிரட்டல்.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-அக்-201814:46:52 IST Report Abuse

Malick Rajaமோடி அவர்களே .. பாகிஸ்தான்காரன் நமது இராணுவ வீரரின் தலையை சீவுகிறான் நீங்கள் அப்படியே பார்த்துவிட்து கண்டனம் மட்டுமே செய்கிறீர்கள் இதைப்போல இருப்பதால் இன்னும் பலரையும் சீவுவான் .. நீங்களும் தலையை சீவிக்கொண்டு அலங்காரமாக பேசுவீர்கள் தவிர பாகிஸ்தான் கொட்டத்தை அடக்க நினைப்பதே இல்லை . நீங்கள் ராணுவத்துக்கு சுயாதிகாரம் கொடுத்தால் பாகிஸ்தான் என்றோ அடிமைநாடாக ஆகி இருக்கும் .இந்திய அரசியல் வாதிகள் குறிப்பாக உங்களின் ஆட்சியில் பாக்கிஸ்தான் குளிர்காய்கிறது

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X