'குண்டூசியால் மலையை ஓட்டை போட முடியாது' : தினகரனை விளாசிய பன்னீர்செல்வம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'குண்டூசியால் மலையை ஓட்டை போட முடியாது' :
தினகரனை விளாசிய பன்னீர்செல்வம்

சென்னை : ''குண்டூசியால், குன்றத்துார் மலையை ஓட்டை போட்டு விடுவேன் என்கிறார் தினகரன்,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கிண்டலடித்தார்.

 'குண்டூசியால், மலையை , ஓட்டை போட, முடியாது' :  தினகரனை, விளாசிய ,பன்னீர்செல்வம்


சென்னையில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவில், பன்னீர் செல்வம் பேசியதாவது:


எம்.ஜி.ஆர்., தனக்காக வாழவில்லை; அவரது நுாற்றாண்டு விழா அழைப்பிதழில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், ஸ்டாலின் பெயரை போட்டோம். அவர், 'எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், தி.மு.க.,வையும், கருணாநிதியை யும் கடுமை யாக விமர்சிப்பதால், விழாவிற்கு

செல்ல வில்லை' என, கூறியுள்ளார். தமிழக மக்களுக்கு, கருணாநிதி செய்த துரோகங்களை, நாங்கள் சொல்லித்தானே ஆக வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், முதல்வர்களாக இருந்த போது, ஜீவாதார உரிமைகளை பாது காப்பவர்களாக இருந்தனர்; தி.மு.க., அதை செய்ய வில்லை. இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இருந்தது, கச்சத்தீவை தாரை வார்த்தது போன்றவற்றை, எடுத்துரைக் காமல் இருக்க முடியுமா.


இலங்கையில் போர் நடந்தபோது, அதை கண்டித்த தலைவர்கள், இன்று வாய்மூடி மவுனியாக உள்ளனர்; காரணம், கூட்டணி சேரபோகிறார்களாம். 'நான் உயிரோடு இருக்கும் வரை, ஸ்டாலினை முதல்வராக விட மாட்டேன்' எனக்கூறிய வைகோ, இன்று, 'ஸ்டாலினை முதல்வராக்காமல் துாங்க மாட்டேன்' என்கிறார். இனி,அவருக்கு துாக்கமே வராது; ஏனெனில் ஸ்டாலின் முதல்வராகவே முடியாது.


தற்போது, 20 ரூபாய் நோட்டை கொடுத்தால், வாங்க மறுக்கின்றனர். அவர் ஒரு பக்கம், 'குண்டூசியால், குன்றத்துார் மலையை ஓட்டை போட்டு விடுவேன்'

Advertisement

என்கிறார். அ.தி.மு.க.,என்ற, எக்கு கோட்டையை, யாராலும் அசைக்க முடியாது. நவக்கிரக கூட்டணி'தினமலர்' நாளிதழில் ஒரு செய்தி வந்துள்ளது. நவக்கிரக கூட்டணி அமைக்கின்றனராம்.


எத்தனை நவக்கிரகங்கள் சேர்ந்தாலும், 'மெகா' கூட்டணி சேர்ந்தாலும், 'தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றியது யார்' என, சீர் துாக்கி பார்த்து மக்கள், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தருவர்; எத்தனை சதி திட்டம் தீட்டி னாலும், அடித்துநொறுக்குவோம். இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-அக்-201802:33:05 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்சம்பந்தி கிட்டே கொடுத்தா ஏலகிரி மலையிலேயே ஓட்டையை போட்டு ஆட்டையை போடுவாரா பழனிசாமி அவர்களே?

Rate this:
Manian - Chennai,இந்தியா
05-அக்-201804:44:53 IST Report Abuse

Manianகல் குவாரி பிவிஆரை கூப்பிடுங்கள் போடுவார். லேசர் ஊசியால் துளை போடுவதுபோல, உள்ளடி வேலையால் இது முடியுமே...

Rate this:
Sekar KR - Chennai,இந்தியா
03-அக்-201814:43:17 IST Report Abuse

Sekar KRகொண்டை ஊசியால் தமிழகத்தை ஓட்டை போட்ட எங்களுக்கு குன்றத்தூர் மலையை குண்டுசியல் ஓட்டை போடுவது என்ன கடினமா?

Rate this:
Karthik Arumugam - Chennai ,இந்தியா
03-அக்-201809:49:56 IST Report Abuse

Karthik ArumugamArasu - Madurai,இந்தியா 01-அக்-2018 18:43நீங்க வாழ்நாள் முழுவதும் No 2 தான்// இல்லையே , பொய் சொல்லாதீர்கள் . இரண்டு தடவை முதல்வர் . ஊழல் கும்பலை எதிர்த்து போராடி திரும்ப வந்தார் . உங்க சுடாலின் வாரிசு , வரதன் of CCV.

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X