தமிழக கண் டாக்டருக்கு கூகுள் கவுரவம்

Added : அக் 01, 2018 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி கண் டாக்டரும் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனருமான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளையொட்டி, கூகுள் டூடில் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. 1918 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, விருதுநகர் மாவட்டம் வடமாலபுரத்தில், கோவிந்தப்பா வெங்கடசாமி பிறந்தார். தேவையில்லாத குருட்டுத்தன்மையை அகற்றுவதற்காக, தம் வாழ்நாளையே
 அரவிந்த் கண் மருத்துவமனை, கோவிந்தப்பா வெங்கடசாமி,  கூகுள் டூடில், கோவிந்தப்பா வெங்கடசாமி பிறந்தநாள்,  கண் டாக்டர் கோவிந்தப்பா வெங்கடசாமி, கூகுள்,
Arvind Eye Hospital, Govindappa Venkatasamy, Google Doodle, Govindappa Venkatasamy Birthday, Eye Doctor Govindappa Venkatasamy, Google,

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி கண் டாக்டரும் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனருமான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளையொட்டி, கூகுள் டூடில் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. 1918 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, விருதுநகர் மாவட்டம் வடமாலபுரத்தில், கோவிந்தப்பா வெங்கடசாமி பிறந்தார். தேவையில்லாத குருட்டுத்தன்மையை அகற்றுவதற்காக, தம் வாழ்நாளையே அர்ப்பணித்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இதுவரை 6.8 மில்லியன் கண் ஆபரேசன்கள் நடைபெற்று 55 மில்லியன் பேர் கண்பார்வை திறன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshminarayanan Putarjunan - chennai,இந்தியா
01-அக்-201811:34:14 IST Report Abuse
Lakshminarayanan Putarjunan கூகுள் நிறுவனம் கண் டாக்டர் கெளரவித்தது மிகவும் பாராட்டத்தக்கது. இவருடைய குடும்பமே கண் சிகிச்சைக்கு சேவை செய்தது. பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
01-அக்-201810:55:10 IST Report Abuse
சுந்தரம் இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு செய்தி. நம்நாடு என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி. தினசரி ஒரு ரூபாய் வீதம் செலுத்தினால் வீடு வழங்கப்படும் என்று திட்டம் துவங்குவார் நகராட்சி தலைவர். இந்த திட்டத்தை மக்கள் நம்புவார்களா என்ற கேள்வி எழும். அப்போது அந்த மோசடி திட்டத்துக்கு நல்ல மனிதர் ஒருவரை முன்னிறுத்தினால் மக்கள் எளிதில் நம்பி பணம் காட்டுவார்கள் என்று கூறி அந்த திட்டத்துக்கு ஊரிலேயே நல்ல மனிதர் என்று மக்களால் புகழப்படும் ஒருவரை முன்னிறுத்துவார். அதுபோல திரு. ஜி வெங்கடசாமி அவர்களை (அவர்களின் பெயரை) முன்னிறுத்தி கண்ணொளி திட்டம் என்ற பெயரில் சில பல லட்சங்கள் வசூலித்து ஏப்பம் விட்டார் அந்நாட்களில் ஒருவர்.
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
01-அக்-201809:39:15 IST Report Abuse
சுந்தரம் இவர் மட்டுமல்ல இவரது சகோதரி திருமதி நாச்சியார் அவர்களும் கண் மருத்துவரே. அவரும் தன் வாழ்நாளை கண் மருத்துவத்துக்காக அர்ப்பணித்தவர்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X