பொது செய்தி

இந்தியா

எஸ்பிஐ பணம் எடுக்கும் வரம்பு ரூ.20,000 ஆக குறைப்பு

Added : அக் 01, 2018 | கருத்துகள் (48)
Advertisement
SBI ATM, SBI Bank,State Bank of India,  எஸ்பிஐ, ஏடிஎம், எஸ்பிஐ ஏடிஎம், எஸ்பிஐ வங்கி, ரொக்க பணம் இல்லாத பரிவர்த்தனை, எஸ்பிஐ பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு, 
SBI, ATM,  Non-cash transaction, SBI cash withdrawal limit,

புதுடில்லி : எஸ்பிஐ வங்கி ஏடிஎம்.,ல் நாள் ஒன்றிற்கு பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.20,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 31 ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.

மோசடிகளை தடுப்பதற்காக ஏடிஎம்.,களில் பணம் எடுக்கும் வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது. தற்போது எஸ்பிஐ ஏடிஎம்.,யில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.40,000 ஆக இருந்து வருகிறது.

சமீப காலமாக ஏடிஎம்.,களில் இருந்து பணம் எடுப்பதில் மோசடிகள் நடப்பதாக அதிக அளவில் புகார்கள் வருவதாலும், ரொக்க பணம் இல்லாத பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவும் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை குறைத்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.



ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் எடுக்கலாம் என்பதை பாதியாக குறைத்துள்ளது நிர்வாகம். ஒரு நாளில் எடுக்கக்கூடிய அதிகபட்ச பணம் 20,000 என்பது அக்டோபர் 31 முதல் அமலுக்கு வருகிறது.
 சமீப காலமாக ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதில் அதிக மோசடிகள் நடப்பதாக புகார்கள் வருவதாலும், ரொக்கம் இல்லாத பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்த முடிவை எடுத்திருப்பதாக எஸ்பிஐ சொல்கிறது. எனினும், பெரும்பாலான கடைகள், கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி டிஜிட்டல் பேமென்டை நிராகரிப்பதால் ஏடிஎம் ரொக்க குறைப்பு நடவடிக்கை பலரை பாதிக்கக்கூடும்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02-அக்-201810:36:05 IST Report Abuse
Natarajan Ramanathan எந்த ஆட்சியாக இருந்தால் என்ன? நமது குலத்தொழிலான ஹவாலாவை ரொக்கமாகத்தான் நடத்துவோம் இல்லையா???
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
01-அக்-201821:23:42 IST Report Abuse
sumutha - chennai நடப்பதை எல்லாம் பார்க்கும்போது கூடிய விரைவில் இப்படி சொல்வார்களோ என்னமோ. "எங்கள் வங்கியில் உள்ள பணமெல்லாம் அரசாங்கம் அச்சடித்தது. எனவே உங்கள் கணக்கில் உள்ள பணம் எல்லாம் இனி உங்களுடையது இல்லை. அனைத்தும் அரசாங்கத்தை சேர்ந்தது " நினைக்கும்போதே பயமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
01-அக்-201820:37:44 IST Report Abuse
sam யாருக்கோ கொடுக்கும் கடனால், சாதாரண மக்களை ஆட்டுவிக்கும் SBI மற்றும் அரசாங்கமும். இவர்களுக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X