'ஆன்லைனில்' புகார் அளித்த பெண்களை 'டாய்லெட்' கழுவ வைத்த பெண் போலீஸ்!

Added : அக் 02, 2018
Share
Advertisement
''என்ன... ஆன்ட்டி, அக்கா இன்னும் எழுந்திருக்கலையா?'' என்றவாறே, சித்ராவின், வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.சத்தம் கேட்டு எழுந்து வந்த சித்ரா, ''இல்ல... மித்து. நேத்து ராத்திரி மழையில நல்லா நனைஞ்சிட்டேன். பயங்கர தலைவலி. அதான், ரெஸ்ட் எடுத்தேன். அம்மா... சூடா, ரெண்டு கப் காபி கொண்டு வாங்களேன்,'' என்றாள்.ஹாலில் இருந்த ேஷாபாவில் இருவரும் அமர்ந்தனர். ''ஏக்கா.. சட்டசபை,
'ஆன்லைனில்' புகார் அளித்த பெண்களை 'டாய்லெட்' கழுவ வைத்த பெண் போலீஸ்!

''என்ன... ஆன்ட்டி, அக்கா இன்னும் எழுந்திருக்கலையா?'' என்றவாறே, சித்ராவின், வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.சத்தம் கேட்டு எழுந்து வந்த சித்ரா, ''இல்ல... மித்து. நேத்து ராத்திரி மழையில நல்லா நனைஞ்சிட்டேன். பயங்கர தலைவலி. அதான், ரெஸ்ட் எடுத்தேன். அம்மா... சூடா, ரெண்டு கப் காபி கொண்டு வாங்களேன்,'' என்றாள்.ஹாலில் இருந்த ேஷாபாவில் இருவரும் அமர்ந்தனர். ''ஏக்கா.. சட்டசபை, உறுதிமொழிக் குழுவினர் வந்தாங்களே! ஏதாச்சும், விேசஷம் இருக்கா?''''ஆமாப்பா, 'என்.எச்.,ரோடு' வேலையே சரியில்லை. வடிகால் வசதி செய்யாமலே, 'புட்பாத்' போடறாங்க, அரை குறை வேலை செய்றாங்கன்னு,' சவுத் எம்.எல்.ஏ., மீட்டிங்லயே சொல்லிட்டாரு,''''ம்... அப்புறம். என்னாச்சுக்கா?''''என்ன திட்டம் போடறீங்க?. சரியா 'பிளான்' பண்ண மாட்டீங்களா. என்.எச்., ரோடாக இருந்தாலும், கலெக்டருக்கு கட்டுப்பட்டதுதான் தெரியுமா. அவர்கிட்ட கேட்டு வேலைய முடிவு பண்ணுங்க'ன்னு, உறுதி மொழிக்குழு செயலாளர், என்.எச்., ரோடு, அதிகாரிகளை வெளுத்து வாங்கிட்டாராம்,'' என்றாள் சித்ரா.''அந்த மேட்டரில் வேறு ஏதோ விஷயமிருக்குன்னு சொல்றாங்க்கா''''ம்ஹூம்.. எனக்கு தெரியலை. நீயே சொல்லு மித்து,''''குமரன் ரோட்டில், ரோடு வேலையால, கடைக்காரங்களுக்கு பெரிய பிரச்னையாம். எம்.எல்.ஏ., மூலம், கடைக்கு முன்னாடி 'புட்பாத்' போடாதீங்கனு, அதிகாரிகிட்ட பேசினாங்களாம். ஆனா, முடியாதுன்னு, 'புட்பாத்'கட்டிட்டாங்க,''''இதுக்காகத்தான், என்.எச்., அதிகாரிகள் மீது, எம்.எல்.ஏ., புகார் வாசிச்சாராம்,''''அதுதானே பார்த்தேன்,'' என்று சிரித்தாள் சித்ரா. அப்போது, 'டிவி'யில், கைத்தறி ஆடை அணிந்து, நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டுமென, தமிழக அரசு சார்பில், விளம்பரம் ஒளிபரப்பானது.அதைப்பார்த்த மித்ரா, ''கைத்தறி என்றவுடன், கணக்கம்பாளையம் நெசவாளர் சங்க மேட்டர் நினைவுக்கு வந்துடுச்சு. தற்போது சங்கம் இல்லாததால், உறுப்பினர்கள், உரிய ஆதாரம் கொடுத்து, தொகையை வாங்கிக்கலாம்னு அதிகாரிகள் அறிவிச்சாங்க தெரியுங்களா?''''அது எல்லாருக்கும் தெரியுமே மித்து. அதுல என்ன பிரச்னை?''''சங்கம் கலைச்சு, 45 வருஷத்துக்கு மேல ஆச்சாம். ரசீது இல்லாததால, பழைய மெம்பருங்க எந்த தொகையையும் வாங்க முடியாம போச்சாம். இது பரவாயில்லை. 'ேஹண்ட்லுாம் 'ஆபீசுலேயே, கணக்கம்பாளையம்் சொசைட்டியோட டாக்குமென்டையே தொலைச்சுட் டாங்களாம்,''''பதிவு செஞ்ச 'டாக்குமென்ட்' இருந்தாத்தான், மெம்பர் களுக்கான தொகையை கொடுக்க முடியும். இப்ப என்ன பண்றதுன்னு அதிகாரிங்க புலம்பறாங்களாம்,'' என்றாள் மித்ரா.அப்போது வந்த ஒரு பெண், ''அம்மா... எங்கீங்க? 'டாய்லெட்' கிளீன் பண்ண வரச் சொன்னாங்க,'' என்றதும், ''அம்மா... நீங்க கேட்டீங்களே. அந்தம்மா.. வந்திருக்காங்க,'' என்று குரல் கொடுத்தாள் சித்ரா. அதைக்கேட்டவுடன் மித்ரா, ''ஏக்கா.. நார்த் மகளிர் ஸ்டேஷனில், விசாரணைக்கு சென்ற லேடீைஸ, 'டாய்லெட்' கிளீன் பண்ண சொன்னாங்களாமா?,''''உண்மைதான்டி. ரோட்டோரம் தங்கி, வாழ்க்கையை நடத்தி வரும் மூன்று பெண்களை, அவரது உறவினர் ஒருவர் தொந்தரவு செய்துள்ளார். இதைப்பத்தி, கமிஷனர் அலுவலகம், வடக்கு, மகளிர் ஸ்டேஷன் என, அவர்கள் அலைக்கழிக்கப் பட்டனர்,''''கடைசியாக, ஒரு வக்கீல் மூலமாக, 'ஆன்லைனில்' புகார் செஞ்சாங்களாம். அடுத்த நாளே, நார்த் மகளிர் போலீசார் விசாரணைக்கு அழைத்துள் ளனர். அந்த பெண்களிடம், 'ஆன்லைனில்' புகார் கொடுக்குற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா?'ன்னு கேட்டுட்டு, ஸ்டேஷனில் 'டாய்லெட்' கழுவ சொல்லியிருக்காங்க,''''அப்புறம் அவங்களும் 'கிளீன்' பண்ணி முடிச்சதும், உங்களை தொந்தரவு பண்ற அந்தப்பையன் வந்தால், 100க்கு போன் பண்ணுங்க'ன்னு சொல்லி அனுப்பீட்டாங்களாம்,''''பெண்களை, பெண்களே மதிக்காம நடந்துக்கறது எந்த விதத்தில் நியாயமுங்க?''என்று ஆவேசப்பட்டாள் மித்ரா.''மித்து... கூல் டவுன். இந்த விஷயத்தை பத்தி, சி.ஓ.பி., கிட்ட புகார் போயிருக்குதாம். பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு?'' ''ஆமாங்க்கா, சிட்டி முழுக்க போலீசாரை டிரான்ஸ்பர் பண்ணாங்களாமா?''''ஆனா, ஐ.எஸ்., போலீசை அப்படியே விட்டுட்டாங்க. குறிப்பாக, பாத்திர உற்பத்தி பண்ற ஊர் ஸ்டேஷன் எல்லைக்குள், லாட்டரி, சீட்டாட்டம், சரக்கு 'சில்லிங்' சேல்ஸ், கஞ்சா இப்படி வெளிப்படையா நெறையா நடக்குது. அதைப்பத்தி எதையுமே, அங்கிருக்கிற போலீஸ்காரர், சி.ஓ.பி.,க்கு ரிப்போர்ட் பண்றதில்லை யாம். அப்படியே மறைச் சிடறாராம். இதனால, ஸ்டேஷன் போலீஸ்காரங்களுக்கு ஏக கொண்டாட்டமாம்,'' ''நல்லா செயல்படாம உள்ள ஐ.எஸ்., போலீசையும், டிரான்ஸ்பர் செய்தால் மட்டுமே, கிரைம் ரேட் குறையும்போல,'' என்றாள் மித்ரா.''ஒரு வழக்கை, அப்படியே மாத்தி போட்டுட்டாங்களாம்,'' என்ற சித்ரா சொன்னதும், ''எங்கே.. எப்படி?'' என கேள்விக் கணைகளை தொடுத்தாள் மித்ரா.''அவசரப்படாதடி.. சொல்றேன். குன்னத்துார் பக்கத்துல, கடந்த ஒரு மாசத்துக்கு முன், ஒரு கார் மரத்தில் மோதிய விபத்தில், நான்கு பேர் அநியாயமாக செத்துட்டாங்க. இதுக்கு முக்கிய காரணமே, அந்தக்காரை, இன்னொருகார் 'சேஸிங்' செஞ்சது தானாம். இது, போலீசுக்கும் தெரியுமாம்,''''ஆனா, இந்த விஷயத்தை கேஸில் கொண்டு வரலையாம். அதனால, எப்படியாவது, உயரதிகாரிக்கு கொண்டு போகணும்னு, இறந்தவங்க குடும்பத்தார், தெரிஞ்ச வக்கீல் மூலமா பேசிட்டு இருக்காங்களாம்,''''இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம்... யார் முடிவுகட்டுறதுன்னே தெரியலைங்க்கா,'' ''ஏய்... நீ... கம்முன்னு இருக்கியா. அதெல்லாம், அதிகாரி பார்த்து கண்டுபிடிச்சுடுவாரு,'' என்ற கூறி சிரிக்கவும், காபி வரவும் சரியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X