தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது: கமல் உறுதி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் உறுதி

காஞ்சிபுரம்: ''லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன், காஞ்சிபுரம் மாவட்டம், களியாம்பூண்டி கிராமத்தில் நேற்று தெரிவித்தார்.

தேர்தல்,தி.மு.க.,கூட்டணி,கிடையாது,கமல்,உறுதி


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியாம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற, கிராம சபை கூட்டத்தில், கமல் ஹாசன், நேற்று காலை பங்கேற்றார்.

முன்னதாக, உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில், குடவோலை முறையை தெரிவிக்கும், சோழர் கால கல்வெட்டுகளை அவர் பார்வையிட்டார்.

ஊராட்சியின் தீர்மானங்கள் அனைத்தும், ஊராட்சி செயலரால் வாசிக்கப்பட்டன. சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. கமல்ஹாசனும், அவரது கட்சியினரும், கிராம ஊராட்சியின் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் கமல் ஹாசன் கூறியதாவது: கிராம சபை கூட்டத்தில் நான் பார்வையாளராக பங்கேற்க அனுமதி அளித்ததற்கு, கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்களது கட்சியினருடன், கிராம சபை கூட்டம் நடக்கும் விதத்தையும், அது நடக்கிறதா என்பதையும் பார்க்க வந்தோம்.

கிராம சபையில் பட்டியிலிடப்படும் பணிகள் நடைபெறுகிறதா என, மக்கள் தான் மேற்பார்வை செய்ய வேண்டும். என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதை, சுவரொட்டி கூட ஒட்டலாம்.கிராம சபைகளில் பங்கேற்பதன் மூலம் எங்களுக்கும் அனுபவம் வளர்ந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் மூன்று இடங்களில், ஹைட்ரோ கார்பன் திட்டம் வருவது, மக்களை அறியாத

Advertisement

அரசாக உள்ளது என்பதையே காட்டுகிறது. சினிமாவில் முதல் இன்னிங்க்ஸ் முடித்து விட்டு, அரசியலில் இரண்டாவது இன்னிங்ஸ் வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். காந்தியும் முதல் இன்னிங்ஸ்சை தென்னாப்பிரிக்காவில் முடித்து, இரண்டாவது இன்னிங்ஸ்சை இங்கு வந்து செய்தார்.

எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமில்லை என்ன செய்ய போகிறோம் என்பதே முக்கியம்.லோக்சபா தேர்தலில் போட்டியிட, எல்லா ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம். தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது.யாருமே முழு நேர அரசியலுக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. நானும் முழு நேரம் அரசியலில் ஈடுபட போவதில்லை. சினிமாவே எனக்கு முழு நேரம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
05-அக்-201818:22:11 IST Report Abuse

karutthuமையத்தின் தலைவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இருக்கக்கூடாது இது பற்றி எம் ஜி ஆர் அவர்களிடமே கேள்வி கேட்கப்பட்டது .சினிமாவா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்த பொது தலைவர் முழு நேர அரசியல் தான் என முடிவெடுத்து கட்சி துவங்கி ஆட்சி அமைத்து நினைத்ததை முடித்துவிட்டார் அதுபோல மைய்யத்தின் தலைவரும் ஒரு ஸ்திரமான முடிவு எடுக்க வேண்டும் .

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-அக்-201818:11:59 IST Report Abuse

J.V. Iyereppudi ninnaalum nottaava pottipoodamudiyaadhu kamaal

Rate this:
bal - chennai,இந்தியா
03-அக்-201820:07:40 IST Report Abuse

balஎன்னவோ நிறைய வோட்கள் கிடைக்க போகிறது மாதிரி பேச்சு....0.00000001 % கூட கிடைக்காது...ஏன்னா அத்தனை கூத்தாடிகளும் களத்தில் இறங்கியுள்ளனர்.

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X