பதிவு செய்த நாள் :
விளாசல்!
காங்கிரசுக்கு எதிராக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி...
தனியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது என சவால்

புதுடில்லி : ''காங்கிரஸ் கட்சியால் எந்த மாநிலத்திலும் தனியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது. அந்தக் கட்சியின் ஊழலுக்கு எதிரான மக்களின் கோபம், தற்போதும் உள்ளது,'' என, உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி ஆவேசமாக கூறியுள்ளார். சத்தீஸ்கரைத் தொடர்ந்து, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும், தனித்து போட்டியிட உள்ளதாக, அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால், காங்கிரஸ் தலைமையிலான மெகா எதிர்க்கட்சி கூட்டணியில் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ்,எதிராக,மாயாவதி,விளாசல்


மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையிலான, மெகா எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த சூழ்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

எதிர்பார்ப்பு :


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில், பா.ஜ., அரசுகள் அமைந்துள்ளதால், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி, இந்த மாநிலத் தேர்தலிலும் தொடரும் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், சத்தீஸ்கரில், முன்னாள் முதல்வரும், ஜனதா காங்கிரஸ்

தலைவருமான, அஜித் ஜோகியுடன் கூட்டணி அமைப்பதாக, மாயாவதி அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் தனித்து போட்டியிட உள்ளதாக, மாயாவதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மாயாவதி நேற்று அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சியினர் மிகவும் திமிராக நடந்து கொள்கின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா ஆகியோர், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்கின்றனர்.

ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள், அதற்கு எதிராக செயல்படுகின்றனர். பா.ஜ.,வை எதிர்த்து தனியாக போட்டியிட்டு வென்றுவிடலாம் என்ற நினைப்பில், அவர்கள் உள்ளனர்; ஆனால், அது நடக்காது. காங்கிரஸ் கட்சி செய்த ஊழல்கள், தவறுகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததால், பகுஜன் சமாஜ், நிறைய நஷ்டத்தையே சந்தித்து உள்ளது.

அதே நேரத்தில் எங்களுடன் சேர்ந்ததால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பலன்கள் கிடைத்துள்ளன. எங்கள் கட்சிக்கான ஓட்டுகள், அவர்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளன. ராஜஸ்தானில், 200 தொகுதிகளில், ஒன்பது தொகுதிகளும்; மத்திய பிரதேசத்தில், 230 தொகுதிகளில், 15 முதல் 20 தொகுதிகளும்; சத்தீஸ்கரில், 90 தொகுதிகளில், ஐந்து அல்லது ஆறு தொகுதிகள் தருவதாகக் கூறியுள்ளனர்.

கூட்டணி:


மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தோம்.

Advertisement

ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து எங்கள் முதுகில் குத்தி வந்து உள்ளது.

உத்தர பிரதேசத்தில், தாஜ்மஹால் மண்டலம் தொடர்பாக, என் மீது காங்கிரஸ், வழக்கு தொடர்ந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தால், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன். கட்சியின் நிறுவனர், கன்சிராமுக்கு பாரத் ரத்னா அளிக்க வேண்டும் என பலமுறை கேட்டும், அதை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றவில்லை.

பா.ஜ.,வைப் போலவே, பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ் செயல்படுகிறது. காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையே கூட்டணி அமைந்து விடக் கூடாது என, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தீவிரவாக உள்ளார். பா.ஜ.,வின் ஏஜென்டாக அவர் செயல்படுகிறார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்றவற்றின் நடவடிக்கைகளுக்கு அவர் பயப்படுகிறார். ஆனால், நான் பயப்படுவதாக, அவர் கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பேசி தீர்க்கலாம்!

சில நேரங்களில், உணர்ச்சிவசப்பட்டு, சில கசப்பான வார்த்தைகளை வெளிப்படுத்துவது, தவிர்க்க முடியாது. காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியா மீது, மாயாவதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனால், இந்தப் பிரச்னையை பேசி தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்.

-ரண்தீப் சுர்ஜேவாலா, செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
04-அக்-201817:43:32 IST Report Abuse

Vaduvooraan சகோதரி மாயாவதி மற்றும் திக்விஜய் சிங் இருவருக்கும் நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி

Rate this:
04-அக்-201816:24:38 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்அடுத்தடுத்து மாநில கட்சிகள் பப்புவை கைகழுவுகின்றன , காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுமானால் சூடு சுரணை இல்லாமல் வேகாத பப்புவை தலைமையாக ஏற்றுக்கொள்ளலாம் , இவர்கள் எதற்காக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Rate this:
Mal - Madurai,இந்தியா
04-அக்-201814:57:42 IST Report Abuse

MalThis is excellent plan by Congress... They know if they all oppose BJP then people will vote for bjp. So they now plan to split votes and will later join post elections. Just like Kamal who is a dmk supporter says I will not join with dmk but later these people will join post polls. Never trust these people. Congress is criminal n is supported by Christian cancer who are very clever ....in divide n rule.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X