ஸ்டெர்லைட் ஆலையை திறக்க துாத்துக்குடி மக்கள் வலியுறுத்தல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க
துாத்துக்குடி மக்கள் வலியுறுத்தல்

சென்னை: 'ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுவட்டார மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என, ஆலையை சுற்றி வசிக்கும் கிராமத்தினர், சென்னையில் தெரிவித்தனர்.

 ஸ்டெர்லைட் ஆலை,திறக்க,துாத்துக்குடி,மக்கள்,வலியுறுத்தல்


துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி வசிக்கும் கிராமங்களை சேர்ந்த, பொன்ராஜ் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர், நேற்று, சென்னை வந்தனர். அவர்கள் அளித்த பேட்டி:

துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை துவங்கி, 24 ஆண்டுகள் ஆகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுக்கு, பெரிய பாதிப்பு இல்லை.

ஸ்டெர்லைட் ஆலையால், தாமிர சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இதை பொறுக்க முடியாமல், ஆலைக்கு எதிரானோர், மக்களை துாண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துள்ளனர்.

ஆலை மூடப்பட்டதால், டீக்கடை முதல் சலுான் கடை உள்ளிட்ட, பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வந்த குழுவினரிடமும்,

Advertisement

எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க விடாமல், ஆலைக்கு எதிரானோர், தடுத்து விட்டனர்.

ஆலையால், சுற்றுவட்டாரத்தில் உள்ள, கிராம மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், ஆலையை திறக்க வேண்டும்; மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilarasu - Thoothukudi ,இந்தியா
06-அக்-201819:15:51 IST Report Abuse

Tamilarasu பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள விசாரணைக் குழுவிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 4 லட்சம் மனுக்கள்.... யாரை தான் நம்புவது

Rate this:
srgmsbhaskar - Trichy,இந்தியா
10-அக்-201817:15:27 IST Report Abuse

srgmsbhaskarஸ்டெர்லைட் ஆலை சுற்றி 4 லட்சம் மக்களா இருக்காங்க . வோட்டர் லிஸ்ட செக் பண்ணுங்க...

Rate this:
yila - Nellai,இந்தியா
06-அக்-201812:43:49 IST Report Abuse

yilaஎட்டப்பா.....

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-அக்-201803:44:15 IST Report Abuse

J.V. Iyerஇந்த டுமீல் போராளிகள் தான் எல்லாவற்றிற்கும் காரணம். நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் திரித்து பொய் பிரசாரம் செய்கின்றனர்.

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X