பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
2.50 ரூபாய்,பெட்ரோல்,டீசல்,விலை,குறைப்பு

புதுடில்லி : மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு, 1.50 ரூபாய் குறைத்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களும், 1 ரூபாய் குறைத்துள்ளதை அடுத்து, பெட்ரோல், டீசல் மீதான விலை, லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
* மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, பெட்ரோலியத் துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் மற்றும் பல அமைச்சக உயரதிகாரிகளுடன், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

ஜெட்லி அறிவிப்பு :


* பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி, லிட்டருக்கு, 1.50 ரூபாய் குறைக்கப்படுகிறது. இத்துடன், எண்ணெய் நிறுவனங்களும், 1 ரூபாய் குறைத்துள்ளன. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைக்கப்படுகிறது.
* நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இழப்பு :


* மத்திய அரசுக்கு, அடுத்தாண்டு மார்ச் வரையிலான காலத்தில், 10 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஒரு ஆண்டு காலத்தை கணக்கிட்டால், 21 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

விலை உயர்வு காரணம் :


பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில், 1 லிட்டர் பெட்ரோல் விலை, 90 ரூபாயை எட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்று, 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 86 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

ஜெட்லி வாக்கு :


நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில்லரை பணவீக்கம், 4 சதவீதத்திற்குள் உள்ளது. பெட்ரோல், டீசல் வரி குறைப்பால், நிதிப் பற்றாக்குறை, 0.05 சதவீதம் தான் குறையும். அதனால், நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட, 3.3 சதவீத இலக்கு எட்டப்படும்.

கோரிக்கை :


பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மாநில அரசுகளின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. அதனால், மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' வரியை குறைக்க வேண்டும். இதை வலியுறுத்தி, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்படும். இதன் மூலம், மக்களுக்கு முத்தரப்பு பயன் கிடைக்கும்.
-அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,


பா.ஜ., ஆளும் மாநிலங்களில் குறைப்பு :


'பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைத்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளும், அதே அளவுக்கு குறைக்க வேண்டும்' என, வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, பா.ஜ., ஆளும், எட்டு மாநிலங்கள், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை, லிட்டருக்கு, தலா, 2.50 ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளன. இதையடுத்து, இந்த மாநிலங்களில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, லிட்டருக்கு, தலா, 5 ரூபாய் குறைந்துள்ளது.
குஜராத், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், அசாம் திரிபுரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் டீசலுக்கான விலையை மட்டும் குறைப்பதாக அறிவித்துள்ளன. ராஜஸ்தான், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள், அவற்றின் விலையை, தலா, 2 ரூபாய் குறைப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தன.

மாட்டோம் :


''மக்களின் நலனைக் கருத்தில் வைத்து, மத்திய அரசுக்கு முன்பாகவே, பெட்ரோல், டீசல் விலையை, ஏற்கனவே, லிட்டருக்கு, தலா, 2 ரூபாய் குறைத்து விட்டோம். அதனால், மீண்டும் விலையை குறைப்பதற்கான வாய்ப்பில்லை''
-குமாரசாமி, கர்நாடக முதல்வர், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்
* பெங்களூரில், பெட்ரோல் - 84.76 ரூபாய், டீசல் - 75.93 ரூபாய்
''கடந்த, 2014ல், பா.ஜ., அரசு பதவியேற்றபோது இருந்த விலையை, மத்திய அரசு அறிவித்தால், நாங்களும் வரியைக் குறைக்க தயாராக உள்ளோம். மற்றபடி, தற்போதைக்கு விலையை குறைக்க முடியாது''
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவின் பொருளாதார நிபுணரான, நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்
* திருவனந்தபுரத்தில் பெட்ரோல் - 87.39 ரூபாய் டீசல் - 80.74 ரூபாய்
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநில அரசும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒரே முறை தான் :

மத்திய அரசு, 2014 நவ., - 2016, ஜன., வரை, ஒன்பது தவணைகளில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு, 11.77 ரூபாய்; டீசலுக்கு, 13.47 ரூபாய் வரை, கலால் வரி உயர்த்தப்பட்டது. கடந்த, 2017, அக்டோபரில், ஒரே ஒரு முறை, பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி, தலா, 2 ரூபாய் குறைக்கப்பட்டது; தற்போது, இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.


சரிபாதி வசூல் :

மத்திய அரசு, 1 லிட்டர் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு, முறையே, 19.48 ரூபாய் மற்றும் 15.33 ரூபாய் கலால் வரி வசூலிக்கிறது. இவற்றுடன், மாநில அரசுகள், 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை விதிக்கின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலையில், பாதி தொகை, வரியாக, மத்திய - மாநில அரசுகளுக்கு செல்கிறது.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
05-அக்-201817:24:51 IST Report Abuse

Endrum Indianஅப்போ ஹரியானாவில் ரூ.4 .50 கம்மியாயிற்றா மற்ற மாநிலங்களை விட.

Rate this:
bal - chennai,இந்தியா
05-அக்-201813:59:32 IST Report Abuse

balஇந்த செய்தியி தலைப்பில் மத்திய அரசு என்று சேர்க்கவும்... இல்லையென்றால் மக்கள் எடப்பாடி குறைத்தார் என்று நினைப்பார்கள்...வெட்கம் கெட்ட அரசு இப்போதாவது விலை குறைக்க வேண்டும்... முன்பெல்லாம் தமிழ் நாட்டில் 1 ரூபாய் கர்நாடகாவைவிட குறைவாக இருக்கும்...இப்போதெல்லாம் 3 ரூபாய் அதிகமா இருக்கு....இந்த திராவிடம் கோவில் சிலை, பெட்ரோல் விலை, வேலைவாய்ப்பு எல்லாவற்றையும் கொள்ளை அடிப்பதே கொள்கையாக வைத்திருக்கிறது.

Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-அக்-201813:23:36 IST Report Abuse

Janarthananஇங்கு உள்ள அனைவர்க்கும் ஒரு தகவல் எண்ணெய் வளம் மிக்க நாடுகள் ஆனா சவூதி , கத்தார் , எமிரேகம் போன்ற இடத்தில கடந்த மூன்ற ஆண்டுகளில் 2016-2018 இந்தியாவில் உயர்ந்ததை விட அதிகமாகவே உயர்ந்து உள்ளன , அதற்கான காரணம் என்ன வென்று உங்கள் யுகத்துக்கு விட்டு விடுகிறேன். சவுதியில் 2016-1l-0.9 SAR, 2018-1l-2.03SAR,ஏற்றம் 125%, கத்தாரில் 2016-1l-1.35QAR, 2018-1l-2.05QAR, ஏற்றம் 46%, எமிரேகத்தில் 2016-1l-1.69AED, 2018-1l-2.61,ஏற்றம் 54%, இந்தியாவில் (சென்னையில்) May 2014-1L-Rs74.60, Oct 2018-1L-Rs84.70,ஏற்றம் 13%, எரிபொருள் சிக்கன நடவடிக்கையும் மற்றும் மாற்று வழிகளை ஆராய்ந்து எடுத்து செல்வதே வரும் காலத்தில் சிறந்த தீர்வாக இருக்க முடியும்

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
05-அக்-201815:11:35 IST Report Abuse

தேச நேசன் மோடியைத் திட்ட வேறு ஏதாவது காரணம் தேடிக்கண்டுபிடிக்கும் வரை இப்படித்தான் திட்டுவர். கண்டுக்காதீங்க ...

Rate this:
Anandan - chennai,இந்தியா
07-அக்-201804:17:54 IST Report Abuse

Anandan//மோடியைத் திட்ட வேறு ஏதாவது காரணம் தேடிக்கண்டுபிடிக்கும் வரை இப்படித்தான் திட்டுவர். கண்டுக்காதீங்க...// அவர் ஏதாவது சுயமா செய்தால்தான் அவரை திட்ட காரணம் தேடவேண்டும் அவர் பாட்டுக்கு சிவனேனு வீட்டில் உள்ளார் பாராளுமன்றம் பக்கம் கூட எட்டி பார்ப்பது இல்லை. கேள்வி கேட்பது என்றால் பயம். ...

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X