சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சிலைகள் பதுக்கிய விவகாரம்
சிக்கினார் பெண் தொழிலதிபர்

சென்னை : சென்னையில், சிலைகளை பதுக்கிய விவகாரத்தில், ஒரு பெண் தொழிலதிபர் சிக்கி உள்ளார். அவரது வீட்டு வளாகத்தில் புதைத்திருந்த, பழங்கால கல்துாண் மீட்கப்பட்டுள்ளது.

சிலை பதுக்கல்,சிக்கினார்,பெண் தொழிலதிபர்


நடிகரும், தொழில் அதிபருமான, ரன்வீர் ஷா, 62, சைதாப்பேட்டையில் உள்ள, தன் பங்களாவில், பஞ்சலோக சிலைகள், கற்சிலைகளை பதுக்கி வைத்திருந்தார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த, மோகல்வாடி; படப்பை அருகே, கூழாங்கல்சேரியில் உள்ள, விவசாய பண்ணைகளிலும், பல்வேறு விதமான கலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தார்.

செப்., 27ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் குழுவினர், அங்கு நடத்திய சோனையில், பதுக்கியிருந்த, 223 கலைப் பொருட்களை மீட்டனர். ரன்வீர் ஷாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில், கிரண் ராவ், 52 என்ற, பெண் தொழிலதிபர் உள்ளார். இவர், சென்னை, அண்ணா சாலையில், ராமகிருஷ்ணா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவர், ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில், 'அமேதிஸ்ட்' என்ற ஓட்டலை நடத்தி வருகிறார்.

மேலும், அவருக்கு, அபிராமபுரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், ஓட்டல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கிரண் ராவுக்கு, மயிலாப்பூர், கஸ்துாரி எஸ்டேட், மூன்றாவது தெருவில், பங்களா உள்ளது. அங்கு, நேற்று மாலை, 5:00 மணியில் இருந்து, பொன் மாணிக்கவேல் குழுவினர், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பங்களாவின் வளாகத்தில், நான்கு அடி ஆழத்தில் புதைத்திருந்த, பழங்கால கல் துாணை பறிமுதல் செய்தனர்; தொடர்ந்து சோதனை நடக்கிறது. தொழிலதிபர் கிரண் ராவ், செப்., 29ல், 'என்னிடம் சிலைகள் இருப்பதாகவும், அதுபற்றி, பொன் மாணிக்கவேலுக்கு தெரிவித்து விடுவதாகவும், இருவர், 60 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர்' என, அண்ணா சாலை காவல் நிலையத்தில், புகார் அளித்தார்.

விசாரணையில், மிரட்டல் விடுத்தோர், தொழிலதிபரின் ஓட்டல் மேலாளர்களாக இருந்த, கொளத்துாரைச் சேர்ந்த ரெனிட் டைசன், 24, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த, சுரேஷ், 27, என்பது தெரிய வந்தது. பின், ரெனிட் டைசன் கைது செய்யப்பட்டார். ஆனால், சிலைகள் பற்றி, போலீசார் மூடி மறைத்து விட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

தகவல் அறிந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ரெனிட் டைசனிடம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் கூறியுள்ளதாவது: ரன்வீர் ஷா பங்களா மற்றும் விவசாய பண்ணைகளில், போலீசார் சோதனை செய்வதை அறிந்து, கிரண் ராவ் அதிர்ச்சியடைந்தார். அதனால், ஒயிட்ஸ் சாலை ஓட்டலில் இருந்த சிலைகளை, 'பார்சல்' செய்து, மினி லாரியில் ஏற்றி, வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார்.

Advertisement



அதை நாங்கள், வீடியோ எடுத்தோம். சிலைகளை ஏற்றும்போது, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. ஆனால், அந்த பதிவுகள் அடங்கிய, 'ஹார்ட் டிஸ்க்'கை, கிரண் ராவ் எடுத்து சென்று விட்டார். நாங்கள் எடுத்த படங்கள் மற்றும் வீடியோவை, அண்ணா சாலை இன்ஸ்பெக்டர் சிவகுமார், 'டெலீட்' செய்து விட்டார். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கிரண் ராவையும், இன்ஸ்பெக்டரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறியதாவது: ராயப்பேட்டை, 'அமேதிஸ்ட்' ஓட்டலில் உள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய, 'ஹார்ட் டிஸ்க்' கைப்பற்றி ஆய்வு செய்தோம். அதில், மூன்று மினி லாரிகளில், மர்ம பார்சல்கள் ஏற்றப்பட்டது தெரிய வந்தது. அங்கிருந்து எடுத்த கல்துாண் உள்ளிட்ட பொருட்களை தான், வீட்டில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். இந்த ஓட்டலுக்கு அடிக்கடி வரும் பிரமுகர்களும் சிக்குவர் என, தெரிகிறது.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.AJINS - CHENNAI,இந்தியா
06-அக்-201817:56:36 IST Report Abuse

S.AJINSசிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு - இது பழைய பாட்டு. சிலை கடத்தல் செய்தாள் ஒரு பெரிய பொண்ணு - இது புது பாட்டு. எப்படி எப்படி எல்லாம் சம்பாதிக்கிறாங்க, பாருங்க.

Rate this:
Manian - Chennai,இந்தியா
07-அக்-201808:20:39 IST Report Abuse

Manianபண ஆசை என்பது தணியாத தாகம். முதலில் ஆயிரம், அப்புறம் பத்தாயிரம், கோடி, பத்து கோடி.... இப்படி செய்ததில் வயதான காலத்தில் ஆரோக்கியம் இல்லாமல் செத்து, மத்தவங்க கொள்ளை அடிப்பாங்களே என்ற சிந்தையே வருவதில்லை. எண்ணிக்கை என்பது மேலே மேல் கொண்டுபோய்விடும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை மாறி பணப் பேய் கொள்ளும் பேராசை என்றாகிவிட்டது. இவர்களை திருத்தவே முடியாது. திருடர்களுக்கு போதும் என்ற மனமே வராது. கடல் கரையில் ஆறடிக்கு கிழி போன போதும், கையில் தங்க மோதிரம் வேண்டும் என்று சூனால், திருடர்களை செத்த பிறகும் திருத்த முடியாது என்பது உண்மை அல்லவா? ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-அக்-201814:51:18 IST Report Abuse

Pugazh Vஹா ஹா ஹா ஹா. சிலைகள் கண்டு பிடிக்கிற படம் செம்ம சூப்பரா இருக்கு. 100 நாள் ஓடுமா இல்ல அடுத்த படம் வந்தா, இத தூக்கிருவாங்களா??

Rate this:
S.P. Barucha - Pune,இந்தியா
06-அக்-201813:34:29 IST Report Abuse

S.P. Baruchaசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி சார் அண்ணா சாலை இன்ஸ்பெக்டர் சிவகுமார் அவர்களையும் உள்ளே தள்ளுவார் .

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X