பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
காஷ்மீர் பிரச்னைக்கு பாக்., காரணம்
அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

புதுடில்லி : ''ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் காணப்படும் பிரச்னைகளுக்கு, அண்டை நாடான பாகிஸ்தானே காரணம்; அங்குள்ள மக்களில், 90 சதவீதம் பேர், உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பதில் ஆர்வமுடன் உள்ளனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

காஷ்மீர்,பிரச்னை,பாக்., காரணம்,அமைச்சர்,ராஜ்நாத் சிங்,குற்றச்சாட்டு


டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரில், 1995ம் ஆண்டில்,

6,000 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இது, 2017ம் ஆண்டில், 360 ஆக குறைந்துள்ளது. இந்த மாநிலத்தில், நிலைமை மேலும் சீரடைய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அங்குள்ள பிரச்னைகளுக்கு, பாகிஸ்தானே காரணம்.

ஜம்மு - காஷ்மீரில், இந்த மாதம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு நடக்கும் தேர்தலில் பங்கேற்பதில், அம்மாநில மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். கடந்த, 1993ல், மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான, தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளான். அவனை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதில் சிரமங்கள் உள்ளன.

பாக்., உடன் நட்புறவை மேம்படுத்தவே, நாம் விரும்புகிறோம். ஆனால், அந்த நாடு, தவறுகளை

Advertisement

திருத்த மறுக்கிறது. ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதம் தழைக்க, பாக்., உதவுகிறது. நாடு முழுவதும், 126 மாவட்டங்களில் நக்சலைட்கள் பரவி உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், நக்சலைட் பிரச்னை பெரியளவில் இருந்தது. அதை, தற்போது கட்டுப்படுத்தி உள்ளோம். நாடு முழுவதும், 10 அல்லது 12 மாவட்டங்களில் மட்டுமே, நக்சலைட் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-அக்-201800:42:16 IST Report Abuse

Mani . Vஉள்நாட்டு பிரச்சினை என்றால் காங்கிரஸை கை காட்டுவதும், வெளிநாட்டு பிரச்சினை என்றால் பாகிஸ்தானை கை காட்டுவதும் இவர்கள் வாடிக்கை. கடந்த நான்கரை வருடங்களாக இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். (திரு. வாஜ்பாய் அவர்களின் ஆட்சி திறமையை கண்டு உலகமே வியந்தது. பாகிஸ்தான் வாலை சுருட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் நாம் தான் எங்கு சாப்பாடு போடுகிறார்கள் என்று நாடு, நாடாய் சுற்றுகிறோமே)

Rate this:
06-அக்-201820:38:44 IST Report Abuse

ஆப்புகாஷ்மீர் பிரச்சனைக்கு இந்தியாதான் காரணம்னு பாகிஸ்தான் சொல்லுதாம்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-அக்-201819:30:45 IST Report Abuse

Pugazh Vஇதேபோல நாலு அமைச்சர் பேசினா போதும், பிஜேபி வாசகர்கள் தலைல துண்டைப் போட்டுக்கிட்டு நடமாட வேண்டியது தான்.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X