பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தயார் நிலையில் இருங்கள்!
முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை : 'தமிழகம் முழுவதும், கன மழை இருக்கும் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், துறை அதிகாரிகளுக்கும், முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தயார் நிலையில்,இருங்கள,முதல்வர்,பழனிசாமி,உத்தரவு


மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜய பாஸ்கர், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள்:


* இன்று முதல், மீனவர்கள் மீன்பிடிக்க, கடலுக்கு செல்ல வேண்டாம். அரபிக் கடலில், மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
* கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, உடனடியாக செல்ல வேண்டும்
* கனமழை காலங்களில், மக்கள், வீடுகளை விட்டு வெளியே வராமல், பாதுகாப்பாக

இருக்க வேண்டும். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேடான இடம் அல்லது நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்

* நீர் நிலைகளிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளிலும், 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும். விவசாயி கள், தங்களின் கால்நடைகளை, பாதுகாப்பான இடங்களில், கட்டி வைக்க வேண்டும்

* தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை, மீட்பு படையினர் மற்றும் முதல் நிலை மீட்பாளர்கள் துணையுடன், மேடான பகுதிகளுக்கு அல்லது நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்

* நிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட உள்ள மக்களுக்கு, போதிய உணவு, சுத்தமான குடிநீர், பால் பவுடர், மருந்துகள், துணிமணிகள் வழங்க, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, அரசு சார்பில், ஒருங்கிணைப்பாளர் நியமிக்க வேண்டும்

* மருத்துவப் பரிசோதனைகள் செய்ய, போதிய மருத்துவ முகாம்கள் அல்லது நடமாடும் மருத்துவ குழுக்களை ஏற்படுத்த வேண்டும்

* பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என, கண்டறியப்பட்ட இடங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை, துரிதப்படுத்த வேண்டும்

* மழைநீர் தேங்கினால், அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து தொற்று நோய்கள், தமிழகத்திற்கு

Advertisement

பரவாமல் தடுக்க, சோதனைச் சாவடிகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்

* மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில், அதிக மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்த மாவட்ட கலெக்டர்கள், தனி கவனம் செலுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

* வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் செயல்படும், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள், 24 மணி நேரமும் செயல்பட்டு, தமிழக அரசுக்கு அவ்வப்போது அறிக்கைகள், சமர்ப்பிக்க வேண்டும்

* கீழே விழும் மரங்களை, உடனடியாக அகற்ற, இரவு பணிக் குழுக்கள், தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சீரமைக்க, சிறப்பு கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி, அப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-அக்-201802:34:23 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்சின்ன மழைக்கே சின்னாபின்னமாகும் சாலைகள், பொங்கி வழியப் போகும் அடைபட்ட நீர்வழித்தடங்கள். அதனாலே வானம் ஒண்ணுக்கு போனால் கூட, பெருசா ஊழிக்கால வெள்ளம் வரப்போவது போல சொல்லி பயமுறுத்துகிறார்கள். ஏரியை ஒடைச்சிவிட்டு சென்னையை மூழ்கடிச்சிட்டு 50 கால வெள்ளம்ன்னு பொய் சொன்னவர்கள் தானே.

Rate this:
S.AJINS - CHENNAI,இந்தியா
06-அக்-201817:54:31 IST Report Abuse

S.AJINSமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பது பாராட்டுக்குரியது . அதேநேரம் மழை மிக பெரிய அளவில் பெய்யப்போவது இல்லை . எனவே அச்சம் கொள்ள தேவை இல்லை

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-அக்-201808:56:16 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇப்பிடி எல்லாம் சொல்லக்கூடாது... மழையே வராது

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X