வெள்ளி தட்டில் விருந்து: கர்நாடகா அமைச்சர் ஆடம்பரம்| Dinamalar

வெள்ளி தட்டில் விருந்து: கர்நாடகா அமைச்சர் ஆடம்பரம்

Added : அக் 06, 2018 | கருத்துகள் (41)
Advertisement
கர்நாடகா, துணை முதல்வர், சிவக்குமார், வெள்ளி தட்டு, காங்., அமைச்சர்கள்

பெங்களூரு: கர்நாடகாவில், நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், சக அமைச்சர்களுக்கு தனது வீட்டில் அளித்த காலை உணவு விருந்தின் போது அனைவரும் வெள்ளி தட்டில் சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


அமைச்சரவை விஸ்தரிப்பு


கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி செயல்பட்டு வருகிறது. காங்கிரசை சேர்ந்த சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். வெறும், 32 எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு குமாரசாமி முதல்வராக செயல்படுவது காங்கிரசில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதை சரிக் கட்ட, காங்கிரசில் பலரும் அமைச்சர் பதவி கேட்டு நச்சரித்து வருகின்றனர். வரும், 15ம் தேதி அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


சித்தராமையா எங்கே?


இச்சூழ்நிலையில், சிவக்குமார் பெங்களூருவில் உள்ள வீட்டில், துணை முதல்வர் பரமேஸ்வரா உள்பட சக காங்., அமைச்சர்களுக்கு காலை உணவு விருந்து அளித்தார். இதில், வெள்ளி தட்டுகளிலும், வெள்ளி பாத்திரங்களிலும் உணவு வகைகள் வழங்கப்பட்டன. இந்த விருந்து புகைப்படங்களை காங்., அமைச்சர்கள் சிலர் டுவிட்டரில் வெளியிட, வெள்ளி தட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இந்த விருந்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்., தலைவர் தினேஷ் குண்டுராவ், உள்ளாட்சி துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி, சுரங்கத்துறை அமைச்சர் ராஜேஸ்வர் பாட்டீல் ஆகியோர் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிவக்குமாரிடம் கேட்ட போது ' அனைத்து ஆலோசனை கூட்டங்களிலும், சித்தராமையா பங்கேற்பது, சாத்தியமில்லை. அவரது ஆலோசனைப்படி தான் நாங்கள் செயல்படுகிறோம். மாநில காங்., தலைவர் தினேஷ் குண்டுராவ், வெளிநாடு சென்றுள்ளார். அதனால் அவர் வரவில்லை,'' என்றார்.





வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
11-அக்-201806:20:00 IST Report Abuse
R KUMAR இது போன்ற நிகழ்வுகள் தான் காங்கிரஸ் கட்சியை மக்களிடமிருந்து தொலைவுக்கு கொண்டு சென்றுவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
R MANIVANNAN - chennai,இந்தியா
08-அக்-201814:52:35 IST Report Abuse
R MANIVANNAN அனைத்தும் வெள்ளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முலாம் பூசிய தட்டுகள் உள்ளன.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
06-அக்-201822:42:08 IST Report Abuse
Gnanam இதெல்லாம் தனிப்பட்ட விஷயங்கள். விருந்தாளிகளை அவருடைய பாணியில் உபசரிப்பதில் தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X