வீழ்ந்தது வெ.இண்டீஸ்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வீழ்ந்தது வெ.இண்டீஸ்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

Added : அக் 06, 2018 | கருத்துகள் (8)
Advertisement
India vs West Indies, IND vs WI, Rajkot Test,  இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ், குல்தீப்,  ராஜ்கோட் டெஸ்ட் , வெஸ்ட் இண்டீஸ் பாலோ ஆன், குல்தீப் யாதவ், 
Test Cricket, West Indies, Kuldeep, West Indies Palo On, Kuldeep Yadav, India

ராஜ்கோட்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் குல்தீப், அஷ்வின் என சுழற்பந்து வீச்சாளர்கள் மிரட்ட இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 649/9 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. கீமோ பால் (13), சேஸ் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. உமேஷ் 'வேகத்தில்' கீமோ பால் (47) சிக்கினார். சேஸ் (53) அரை சதம் கடந்தார். லீவிஸ் (0), கேப்ரியல் (1) சொதப்பினர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அஷ்வின் 4, முகமது ஷமி 2 விக்கெட் சாய்த்தனர்.


'பாலோ ஆன்' சோகம்



முதல் இன்னிங்சில் 468 ரன்கள் பின் தங்கியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இந்தியா 'பாலோ ஆன்' கொடுத்தது. குல்தீப் சுழல் ஜாலம் காட்டினார். இவரது பந்துவீச்சில் ஹோப் (17), ஹெட்மயர் (11) சிக்கினர். பாவெலை (83) வெளியேற்றிய குல்தீப் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஜடேஜா 'சுழலில்' கீமோ பால் (15), லீவிஸ் (4) அவுட்டாகினர். கேப்ரியல் (4) ஏமாற்ற, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது போட்டி வரும் 12ல் ஐதராபாத்தில் துவங்குகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-அக்-201808:13:19 IST Report Abuse
Srinivasan Kannaiya யானை எறும்புமட்டமாகி விட்டது...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-அக்-201808:12:25 IST Report Abuse
Srinivasan Kannaiya வெற்றிகள் தொடரட்டும்
Rate this:
Share this comment
Cancel
06-அக்-201820:10:48 IST Report Abuse
கணபதி கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத அணியாக விளங்கிய அணி மீண்டும் ஜொலிக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X