'வந்தே மாதரம்' கூறினால் உ.பி., பள்ளியில் தண்டனை

Added : அக் 07, 2018 | கருத்துகள் (77)
Advertisement
 Vande Mataram, Uttar Pradesh School, Bharat mata ki jai, வந்தே மாதரம் ,உத்தர பிரதேசம் பள்ளி,  பாரத் மாதாவுக்கு ஜே, முகமது அலி நினைவு பள்ளி, மானஸ் மந்திர், சிவகுமார் ஜெய்ஸ்வால், ஆசிரியர் சஞ்சய் பாண்டே , ஆசிரியர் ஜாவேத் அக்தர் , பள்ளி மாணவர்கள்,  convicted,  Mohammed Ali Memorial School, Manas Mandir, Sivakumar Jaiswal, Teacher Sanjay Pandey, Teacher Javed Akhtar, School Students, தண்டனை,

பலியா:உத்தர பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில், 'வந்தே மாதரம்' மற்றும் 'பாரத் மாதாவுக்கு ஜே' எனக் கூறுவதற்கு தடை விதித்த பள்ளி நிர்வாகம், மீறும் மாணவர்களை கடுமையாக தண்டிப்பது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
உ.பி.,யில், பலியா மாவட்டத்தில் உள்ள, முகமது அலி நினைவு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், 'வந்தே மாதரம், பாரத மாதாவுக்கு ஜே' போன்ற தேசபக்தி வாசகங்களை கூற தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் மாணவர்கள் தண்டிக்கப்படுவது குறித்த வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது.
இதையடுத்து, அப்பகுதி யைச் சேர்ந்த, 'மானஸ் மந்திர்' எனப்படும் சமூக நல அறக்கட்டளையின் மேலாளர், சிவகுமார் ஜெய்ஸ்வால், பள்ளியில் சென்று விசாரித்த போது, காலை நேர பிரார்த்தனைக்கு பின், தேசபக்தி வாசகங்களை கூறினால் தண்டிக்கப்படுவதாக, மாணவர்கள் கூறினர்.
இதுகுறித்து, அப்பள்ளி யில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியரான, சஞ்சய் பாண்டே கூறியதாவது:
பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட பெரும்பாலான ஆசிரியர்கள், முஸ்லிம்கள். சமீபத்தில், 'பாரத மாதாவுக்கு ஜே' என்று கூறிய, ஒரு மாணவனை, ஜாவேத் அக்தர் என்ற ஆசிரியர், கொளுத்தும் வெயிலில், மைதானத்தில் பல மணி நேரம் நிறுத்தினார்.இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, தேசபக்தி வாசகங்களை கூறும் மாணவர்கள் தண்டிக்கப்படுவது குறித்து, வீடியோ ஆதாரத்துடன், முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக, சிவகுமார்
ஜெய்ஸ்வால் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
07-அக்-201820:05:32 IST Report Abuse
anbu நெருப்பு,கொள்ளிக்கட்டை என்று சொல்ல மாட்டார்கள். வாய் வெந்துவிடும். அல்வா ,பூந்தி ,ஜிலேபி சொல்லலாம். அது இனிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
07-அக்-201819:37:47 IST Report Abuse
sumutha - chennai // முகமது அலி நினைவு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், 'வந்தே மாதரம், பாரத மாதாவுக்கு ஜே' போன்ற தேசபக்தி வாசகங்களை கூற தடை விதிக்கப்பட்டுள்ளது. // நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் கட்சிக்கு ஒரு கேள்வி. இப்படி சொல்ல அவர்களுக்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறதா? இல்லையெனில் இவர்களை தண்டித்து நாடுகடத்த வேண்டியதுதானே? இதை செய்ய உங்களுக்கு தைரியமில்லையா? வாழும் தேசத்தை எந்த தைரியத்தில் இவர்கள் அவமதிக்கிறார்கள். நாட்டைவிட்டு துடைத்தேறியப்படவேண்டிய தேச துரோகிகள். இவர்களுக்கு ஆதரவாக எவ்வளவுபேர் வந்தாலும் தயங்காமல் கடும் நடவடிக்கை எடுங்கள் இந்த தேசத்தின் அசல் வித்துக்கள் அனைவரும் உங்களுக்கு துணையிருப்போம். ஜெய்ஹிந்த்.
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
08-அக்-201808:36:25 IST Report Abuse
தலைவா ஸ்மூத் உண்மை தெரியாமல் பொங்க வேண்டாம். உடம்புக்கு நல்லதல்ல....
Rate this:
Share this comment
Capt JackSparrow - Madurai,இந்தியா
12-அக்-201803:50:35 IST Report Abuse
Capt JackSparrowஉங்களுக்கு உண்மை தெரியுமானால் இங்கேய சொல்லுங்களேன்??? உங்களுக்கு எதுவும் தெரியாது ஆனால் /// உடம்புக்கு நல்லதல்ல.... /// என்று மிரட்ட மட்டும் செய்வீர்கள்........
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
07-அக்-201819:28:58 IST Report Abuse
JSS தாயை தெய்வமாக வணங்குவதில் என்ன தவறு? எல்லா மதங்களும் தாய்க்கு தனி சிறப்பு கொடுக்கின்றன அப்பேர்ப்பட்ட தாயை வாங்குவதில் என்ன தவறு கண்டீர்கள்? தாய் இல்லாமல் மனிதன் இவ்வுலகத்தில் வந்திருக்கமுடியாது, அத்தகைய தாயை தெய்வமாக வணங்குவதில் எந்த முரண்படும் இல்லை. முதலில் தாய் தந்தை பிறகுதான் தெய்வம். இதை புரிந்து கொள்ள மறுக்கிறவர்கள் மூடர்கள்.
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
08-அக்-201808:37:26 IST Report Abuse
தலைவா தாயை வாங்குவதில் என்ன தவறு கண்டீர்கள்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X