தேனி தென்றல் மீனலோச்சினி

Added : அக் 07, 2018
Share
Advertisement
தேனி தென்றல் மீனலோச்சினி

இவள் மதி முகம் பார்த்து மேகமலை மயங்குதே...காந்த கண்கள் ஈர்ப்பில் சுருளி அருவி இறங்குதே. பளிச்சிடும் புன்னகை சத்தம் கேட்டு மூணாறு கிறங்குதே. அந்த தேனீக்களே தேடும் தேனியின் அழகிய பூந்தோட்டம், நடிகை மீனலோச்சினி சினிமா பயணம் குறித்து பேசுகிறார்...

* சினிமாவில் எப்படி ?நடிக்க வேண்டும் என்ற ஆசை, ஆர்வம் எல்லாம் எனக்கு இருந்தது இல்லை. ஒரு குறும் படத்தில் நடித்ததை பார்த்த இயக்குனர் வீரன் செல்வராஜ் அவரது 'வீரத்தேவன் ' படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார்.

* இது முதல் படமா ?இல்லை, மருது படத்தில் ஹீரோயின் ஸ்ரீ திவ்யாவிற்கு தோழி கேரக்டரில் நடிச்சிருக்கேன். இது ஒன்ணு மட்டும் தான் என் நடிப்பு அனுபவம்.

* தேனி பொண்ணு ஹீரோயின் ?ஏன் ஆகக் கூடாதா...வெளிமாநில பொண்ணுங்க நம்மூருக்கு வந்து ஹீரோயினா நடிக்கும் போது. நல்லா தமிழ் தெரிஞ்ச என்னை மாதிரி பொண்ணுங்க ஹீரோயினா நடிச்சா என்ன தப்பு. சினிமாவுக்கு அழகு முக்கியம் இல்லை; திறமை தான் முக்கியம்.

* நடிப்பில் சவால் ?நான் நடிக்குறதே பெரிய சவால் தான். அதை தவிர வேறென்ன சவால் இருக்க முடியும். சினிமா உலகில் நல்லவங்க, கெட்டவங்க இருக்காங்க. அவங்களை எல்லாம் அடையாளம் கண்டு நம்மை, நாமே பாதுகாப்பா பார்த்துக்கணும். அதான் பெரிய விஷயம்.

* 'வீரத்தேவன்' படம்?ஒரு மனுஷனுக்கு அதிக கோபம் வந்தா என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்ங்குறது தான் கதை. இதில், நடிக்கும் போது சினிமா சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

* ஆனால் படம்...?'ஆனால்..., இந்த படம் பெருசா ஓடலயே'ன்று தானே கேட்குறீங்க. பெரிய நிறுவனம் தயாரிச்சு, டீசர், டிரைலர், ஆடியோ லான்ச், மூவி லான்ச்ன்னு பெருசா விளம்பரம் பண்ணியிருந்தா ஓடியிருக்கும். இது பட்ஜெட் படம் ; அதனால் வந்த தடம் தெரியாமல் போயிருச்சு. இந்த மாதிரி நல்ல மெசேஜ் சொல்ற சின்ன படங்களையும் ரசிகர்கள் பார்த்து அங்கீகாரம் கொடுக்கணும்.

* மனம் கவர்ந்த நடிகை ?நம்ம அனுஷ்கா தான்...சும்மா நடிக்கணும்னு நடிக்க மாட்டாங்க. கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தா தான் நடிப்பாங்க. அவுங்க நடிச்ச 'அருந்ததி', 'பாகுபலி' படங்கள் எனக்கு பிடிக்கும். நடிச்சா அவர்களை மாதிரி நடிக்கணும்.

* தேனி பொண்ணு...?ஆமா, நான் தாரியமான பொண்ணு தான். பாசத்தை காட்டினா பாசத்தை காட்டுவேன். வீரத்தை காட்டினா வீரத்தை காட்டுவேன்.

* தேனி - சென்னை ? சென்னை சினிமா வட்டாரத்தில் தென்மாவட்ட சினிமா நடிகர்களுக்கு நல்ல மரியாதை இருக்கு. உற்சாகம், தன்னம்பிக்கை கொடுக்குறாங்க. ஆனால் மதுரை, தேனி ஒரு சினிமா நகரமா மாறிவிட்டதால் நம்மூர்லயே நிறைய வாய்ப்புகள் வருகிறது. இப்போ கூட 'விஷகத்தி' படத்தின் ஷூட்டிங் தேனியில் தான் நடக்குது. நான் ஹீரோயினா நடிக்கிறேன். அப்புறம் மலையாள படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்திருக்கு.
meenaloshinigaya@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X