ஓ... அப்படீங்களா!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓ... அப்படீங்களா!

Added : அக் 08, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 ஓ... அப்படீங்களா!

திருத்தணி உட்கோட்ட ஊரக வளர்ச்சி துறை, உதவி செயற்பொறியாளர் மொகைதீன் பாத்திமா. இவர், பிப்ரவரி, 4ம் தேதி இங்கு பொறுப்பு ஏற்றார். இதற்கு முன், திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் பால் பண்ணையில், உதவி செயற்பொறியாளராக பணியாற்றினார்.

ஆவினில் இருந்து மாறி, தற்போது, ஊரக வளர்ச்சி துறைக்கு வந்து உள்ளார்.இவரது கணவர் நிஜாமுதீன், தஞ்சாவூர் பகுதியில், ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளராக இருக்கிறார். நிஜாமுதீன், 2013 - 2015 வரை, திருத்தணி உட்கோட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளராக பணியாற்றினார். தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உதவி செயற்பொறியாளராக இருந்த போது, முறைகேடு புகார் காரணமாக, மூன்று மாதங்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்; தற்பொழுது, மீண்டும் பணியில் இருக்கிறார்.

கணவனும், மனைவியும், ஒரே துறையில் உதவி செயற்பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதனால், துறையின், 'நெளிவுசுளிவு'கள் அனைத்தும் இவர்களுக்கு அத்துப்படி. ஒப்பந்ததாரர்களிடம் எப்படி, 'வேலை' வாங்க வேண்டும்; பில் பாஸ் செய்வதற்குரிய, 'நடைமுறை'கள் என்ன என்பதை எல்லாம், 'தெளிவாக' அறிந்து வைத்துள்ளனர்.

மொகைதீன் பாத்திமா கட்டுப்பாட்டில், திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை என, நான்கு ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் நடக்கும் அத்தனை வளர்ச்சி பணிகளுக்கும், இவர், 'ஓகே' சொன்னால் தான், 'பில் பாஸ்' ஆகும். அவ்வளவு, 'புகழ்' வாய்ந்தவர் இவர்!



வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
11-அக்-201812:51:55 IST Report Abuse
GB.ரிஸ்வான் பெண்ணுரிமையை பற்றி பேசும் அனைத்து கழிசடைகளும் வரிசையாக வரவும்....
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
11-அக்-201810:17:21 IST Report Abuse
Sekar KR எதற்கு இந்த செய்தி, நடவடிக்கை எடுத்திருந்தால் செய்தி போடுங்கள். துப்பரிவாளன் போல் செய்தி போட்டால் எப்படி? அப்படி பார்த்தால் உங்களுக்கு 1000 பக்கம் செய்தித்தாள் போதாது.
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
11-அக்-201810:08:40 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam ஊழலே நீ வாழி ... அப்படியானால் இவர்களின் பிள்ளைகளை எப்படியெல்லாம் வழிகாட்டியிருப்பார்கள் ... நினைக்கவே பயமாக இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X