அசையாம ஆணியடிச்சது மாதிரி இருக்காரு அப்பா... அவரு பேருல வாரிசு செய்யுறது எல்லாமே தப்பா!| Dinamalar

அசையாம ஆணியடிச்சது மாதிரி இருக்காரு அப்பா... அவரு பேருல வாரிசு செய்யுறது எல்லாமே தப்பா!

Updated : அக் 09, 2018 | Added : அக் 09, 2018
Share
அலைபேசியில் அழைத்த மித்ராவை, இதயதெய்வம் மாளிகை அருகில் வரச் சொல்லி விட்டு காத்திருந்தாள் சித்ரா; அவள் வந்து சேர்ந்ததும், வண்டிகளை நிறுத்தி விட்டு, அருகிலுள்ள டீக்கடைக்குச் சென்றனர்.''என்னக்கா...ஒரு காலத்துல 'ஜேஜே'ன்னு இருந்த ஆளுங்கட்சி ஆபீஸ், இப்போ இப்பிடி மயான அமைதியில இருக்கு; கட்சிக்காரங்க யாரையுமே காணோம்?'' என்று கவலையாய் கேட்டாள் மித்ரா.''இப்பல்லாம்
 அசையாம ஆணியடிச்சது மாதிரி இருக்காரு அப்பா... அவரு பேருல வாரிசு செய்யுறது எல்லாமே தப்பா!

அலைபேசியில் அழைத்த மித்ராவை, இதயதெய்வம் மாளிகை அருகில் வரச் சொல்லி விட்டு காத்திருந்தாள் சித்ரா; அவள் வந்து சேர்ந்ததும், வண்டிகளை நிறுத்தி விட்டு, அருகிலுள்ள டீக்கடைக்குச் சென்றனர்.

''என்னக்கா...ஒரு காலத்துல 'ஜேஜே'ன்னு இருந்த ஆளுங்கட்சி ஆபீஸ், இப்போ இப்பிடி மயான அமைதியில இருக்கு; கட்சிக்காரங்க யாரையுமே காணோம்?'' என்று கவலையாய் கேட்டாள் மித்ரா.

''இப்பல்லாம் பொறுப்புல இருக்குறவுங்களுக்கு, கட்சி ஆபீசுக்கு வர்றதுக்கு எங்க நேரமிருக்கு...சந்திப்பு, பேச்சு வார்த்தை, டீலிங் எல்லாத்தையுமே, அவுங்கவுங்க வீட்டுலயே முடிச்சிக்கிறாங்க; இங்க வந்தா, கட்சிக்காரங்க எல்லாம் 'லோக்கல் பாடி எலக்ஷன் எப்போ நடக்கும்'னு கேள்வி கேப்பாங்களே!'' என்றாள் சித்ரா.

''அது மட்டுமில்லைக்கா...இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன்; எந்தவிதமான அனுமதியும், அரசாணையும் இல்லாம, அண்ணா சிலைக்குப் பக்கத்துல எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை வச்சாங்களே; அந்த ரெண்டு சிலைகளுக்கும் யாருமே மாலை போடுறதில்லையாமே...அதுலயும் ஏதோ 'சென்டிமென்ட்' இருக்காம்!'' என்றாள் மித்ரா.

''இப்பல்லாம், நம்ம ஊர்ல திட்டங்களை முடிவு பண்றது இன்ஜினியர்கள் இல்லை; ஜோசியர்கள்!'' என்று சிரித்தாள் சித்ரா.கொடிசியா அலுவலகத்தை கடந்தபோது, ''ஊருக்குள்ள எந்த வேலையும் உருப்படியா நடக்கலைன்னு தொழில் செய்யுறவுங்க எல்லாம் புலம்புறாங்க!'' என்றாள் மித்ரா.

''என்ன வேலை நடக்குதோ இல்லியோ...பத்து வருஷமா அசையாம ஆணியடிச்சது மாதிரி, ஒரே பொறுப்புல இருக்குற ஆபீசரோட பையன், பல வேலைகள் செஞ்சு, கோவையின் பெரும் தொழிலதிபரா உருவெடுத்திட்டு இருக்காரு...அவரைப் பத்தி நான் கேள்விப்படுறதெல்லாம் 'வேற லெவல்' மித்து!'' என்றாள் சித்ரா.

''ஆமாக்கா...நானும் கேள்விப்பட்டேன்...உனக்குத் தெரிஞ்சதை நீ முதல்ல சொல்லு!'' என்றாள் மித்ரா.

''அவரும், கருப்பு எம்.எல்.ஏ., மகனும் சேர்ந்து, ஏற்கனவே நாலு ஓட்டல்கள்ல 'பார்' எடுத்து நடத்துறாங்களாம்; இப்போ, ஆர்.எஸ்.புரத்துல ஒரு ஓட்டல்ல, 'நாங்க பார் நடத்துறோம்'ன்னு கேட்ருக்காரு அந்த ஆபீசர் வாரிசு; அந்த ஓட்டல்ல நிறைய 'பில்டிங் வயலேஷன்' இருக்காம்; அதை வச்சும், மறைமுகமா மெரட்டுறாராம்'' என்றாள் சித்ரா.

''அது 'சப்பை' மேட்டர்...நம்ம ஊர்ல ஒரு 'ஷாப்பிங் மால்'ல, 'மல்டி பிளக்ஸ்' தியேட்டர்களுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்ததுக்காக, அதே 'மால்'ல ஒரு துணிக்கடை, அஞ்சு 'புட் ஸ்டால்' போட்ருக்காராம்; ஏற்கனவே, பிரபலமான வெளிநாட்டு 'ரெடிமேட் பிராண்ட்' ஷோரூம் ஒண்ணு இருக்காம்; காலேஜ் பசங்களை 'பியூட்டி' ஆக்குற, அமெரிக்கா நிறுவனத்துக்கு, கோயம்புத்துார், சென்னையில மூணு பிராஞ்ச் நடத்துறாராம்'' என்றாள் மித்ரா.

பேசிக்கொண்டே, தனது 'ஹேண்ட் பேக்'கில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துக் காண்பித்தாள்.

அதில், ஆபீசரின் மகன் பெயர் போட்டு, 'டைரக்டர்' என்ற பொறுப்புடன், ஐந்து நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.ஆர்.ஓ.பிளான்ட், சோலார் வாட்டர் ஹீட்டர்ஸ், எஸ்.டி.பி., இ.டி.பி., டபிள்யு.டி.பி., சோலார் பவர், பவர் சொல்யூஷன், யுபிஎஸ், ஸ்டெபிலைசர், ஹார்மோனிக் பில்டர் என பட்டியல் நீளமாயிருந்தது.''மித்து...எனக்கு தலை சுத்துது... ஒரு கம்பெனி, இத்தனை வேலை செய்ய முடியுமா?'' என்று கேட்டாள் சித்ரா.

''முழுசாக்கேளு...சென்னையில் 'மெட்ரோ வாட்டர்' நிறுவனத்துல, 2 கோடி ரூபாய்க்கு எஸ்.டி.பி., அமைக்கிறதுக்கு 'டெண்டர்' எடுத்திருக்காம் இந்த கம்பெனி'' என்றாள் மித்ரா.

''அப்படியா...அதெப்படி,'' என, ஆர்வம் பொங்க கேட்டாள் சித்ரா.''அதுவா, ஆளுங்கட்சி 'சப்போர்ட்'ல கொடுத்திருக்காங்க; அதையே காரணமா காட்டி, பல கோடி ரூபாய்க்கு, சோலார் வேலைகளை எடுக்குறதுக்கு, 'பைல்'களை எடுத்துட்டுப் போனாராம் அந்த ஆபீசர்.

ஆனா, ஆளுங்கட்சி வி.ஐ.பி., காய்ச்சி அனுப்பிட்டாராம்'' என்றாள் மித்ரா.''முக்கியமான மேட்டர் மித்து... இந்த இளம் தொழிலதிபருக்கு, 'ஆல் இன் ஆல்' ஆக இருக்குறவர் யாருன்னா... ரிட்டயர்டு ஆன பிறகும் 'பிஸி'யாக அதே வேலையில் வலம் வர்ற இளம்முதியவர்தானாம். அவரோட ஐடியாவுல தான், சரவணம்பட்டியில அறநிலையத்துறைக்குச் சொந்தமான சிவன் கோவில் இடத்தை, 50 வருஷ குத்தகைக்கு எடுத்து, அங்கேயும் ஒரு ரெஸ்டாரண்ட் கட்டுறாராம்!'' என்றாள் சித்ரா.

அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்து, 'கொஞ்ச நேரத்துல நானே கூப்பிடுறேன்' என்ற மித்ரா, ரோட்டில் கடந்து சென்ற தண்ணீர் லாரியை பார்த்ததும், அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்...
''அக்கா...நம்ம ஊர்ல நிலத்தடி நீரை உறிஞ்சி, தண்ணிய விக்கிறது சம்மந்தமா நம்ம ஊரு 'மாஜி' கவுன்சிலர் ரவி போட்ட பொது நல வழக்கு, போன வாரம் விசாரணைக்கு வந்திருக்கு; அவரு, அஞ்சு கம்பெனி பேருதான் கோர்ட்ல கொடுத்திருக்காரு; மாவட்ட நிர்வாகம் கொடுத்த பதில்ல 'கோயம்புத்துார்ல 97 இல்லீகல் கம்பெனிக இயங்குது'ன்னு சொல்லி இருக்காங்க

''''பரவாயில்லையே...உண்மைய பேசிருக்காங்க!''''ஏன் அவசரப்படுற...கண்ணப்பன் நகர்ல தண்ணிய உறிஞ்சுற கம்பெனிகளுக்கு, போன மாசம் 22ம் தேதியே 'சீல்' வச்சுட்டோம்னு பொய் சொல்லி, 'செட் அப் போட் டோ'வை கொடுத்திருக்காங்க; ஆனா, அது நேத்து வரைக்கும் இயங்குது; பெட்டிஷனரோட வக்கீலு, இப்போ இயங்குற போட்டோ, வீடியோவை ஒப்படைச்சிட்டாராம்''''மித்து...

அந்த கருப்பு எம்.எல்.ஏ.,வோட 'சப்போர்ட்'ல 'பார்' நடத்துறவுங்களுக்கான சங்கத்துல ஒருங்கிணைப்பாளரா 'அண்டக்குடியார்'னு, அடைமொழியோட ஒருத்தரு இருக்காராம்; அவரு, ஒவ்வொரு 'பார்'காரனையும் மெரட்டி, பணம் பறிக்கிறதே வேலையா இருக்காராம். பணம் தரலைன்னா, எம்எல்ஏ மூலமா 'டிஎம்'ட்ட சொல்லி 'பாரை' மூட வச்சிர்றாராம்!

''''அப்புறம்...!''''பீளமேட்டுல ஒரு 'பார்'ல நடக்காத தகராறை நடந்ததாச் சொல்லி, ஒரு பையனுக்கு கண்ணு போச்சுன்னு ரெண்டரை லட்சம் கேட்டு மெரட்டிருக்காரு. ஆனா, பீளமேடு போலீஸ் ஆபீசர், 'அப்பிடியொரு சம்பவமே அங்க நடக்கலை'ன்னு கண்டுபிடிச்சு, 'வேலைய பாத்துட்டுப் போய்யா'ன்னு துரத்தி விட்டுட்டாராம்'' என்றாள் சித்ரா.

''பரவாயில்லையே...இப்பிடியும் சில இன்ஸ்பெக்டர்கள் இருக்காங்க; ஆனா, சூலுார் ஆர்.டி.ஓ., யூனிட் ஆபீஸ்ல இருக்குற, பிரேக் இன்ஸ்பெக்டர் மேடம் வந்து ஒரு வாரத்துலயே வசூல் தட்டி எடுக்குறாங்களாம்; புரோக்கர்களை யாரும் கூப்பிட்டு வர வேண்டாம்; கொடுக்குற காசை நேரடியா கொடுங்க'ன்னு கேக்குறாராம். சவுத் ஆபீஸ்ல இருந்து அங்க போன, கங்காணி மேடமும், இவுங்களும் நல்ல கூட்டணியாம்!'' என்றாள் மித்ரா.

''இதென்ன பெரிய கூட்டணி...ஜி.எச்.,ல கேன்டடீன் நடத்துறவரும், அங்க இருக்குற பெரிய டாக்டரும், இதை விட பலமான கூட்டணி அமைச்சிருக்காங்க. அங்க புதுசா 'ஜைகா' ஸ்கீம்ல கட்டுற கட்டடத்துக்காக, கேன்டினை இடிக்கிறாங்களாம்; அங்க இருக்குற டிபார்ட்மென்ட்களுக்கே மாற்று இடம் கொடுக்காத பெரிய டாக்டர், கேன்டினுக்கு 'ஓபி' பக்கத்துல இடமும் கொடுத்து, கேன்டின்காரரையே கட்டடம் கட்ட அனுமதிச்சிட்டாராம்'' என்றாள் சித்ரா.

''மெடிக்கல் வார்டு கட்டவே இடமில்லைன்னு அவர் சொல்றதா டாக்டர்க சொல்லுவாங்க; இதுக்கு மட்டும் எப்பிடி இடம் கொடுத்தாரு...எல்.பி.ஏ., பர்மிஷன் இல்லாம, 'பிடபிள்யுடி'யே கட்டடம் கட்ட முடியாதே...ஒரு பிரைவேட் ஆளு எப்பிடி அங்க கட்டுறாரு?'' என்று கேட்டாள் மித்ரா.

''எல்லாம் பணம் படுத்தும்பாடு தான்...நம்மூரு வி.ஐ.பி.,மேல விஜிலென்ஸ் என்கொயரி கேட்டு கேஸ் போட்ட தி.மு.க., வக்கீல் இருக்காரே...அவரு, கொஞ்ச நாளைக்கு முன்னால, தி.மு.க., பிரமுகர் வீட்டுக் கல்யாணத்துல, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யோட பிரதரைப் பார்த்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாராம். ஆனா, கொஞ்ச நாள்லயே திடீர்னு கேஸ் போட்ருக்காரு...தெரிஞ்சவுங்க 'டீலிங்' முடியலையான்னு பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.

''அக்கா...நம்ம ஊர்ல, வி.ஐ.பி., ஏரியாவுலயே ரவுடியிசம் தலை துாக்குது...குனியமுத்துார்ல இருக்குற ஒரு 'பார்'ல ஏகப்பட்ட அடியாள் வச்சிருக்காங்களாம்; லேசா 'சவுண்ட்' விட்டாலே, துவைச்சு, துாக்கி வெளிய போடுறாங்களாம்'' என்றாள் மித்ரா.

''குடும்பத்தை மறந்து குடிக்கிறவுங்களுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்'' என்று சித்ரா சிரிக்கும்போதே, மழை அடிக்கத் துவங்கியது; இருவரும் வண்டியைக் கிளப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X