எப்.ஐ.ஆர்., போட என்ன தடை? எப்.பி.ஓ.,க்கு எஸ்.பி., போட்ட தடை!

Added : அக் 09, 2018 | |
Advertisement
'ரெட்' அலர்ட் வாபஸ் பெறப்பட்டதால், சித்ராவும், மித்ராவும், பொருட்கள் வாங்க, மார்க்கெட்டுக்கு சென்றனர். வண்டியை பார்க் செய்து விட்டு, உள்ளே நுழைந்தனர். காய்கறிகழிவுகளும்,சே றும், சகதியுமாக நிறைந்த பழைய பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டை கண்களால், 'ஸ்கேன் ' செய்த படியே, ''ஏன்... மித்து. எல்லாரும், 'டச்'போன்வை ச்சுகிற அளவுக்கு முன்னேறிட்டாங்க. ஆனா, இந்த மார்க்கெட் மட்டும்
எப்.ஐ.ஆர்., போட என்ன தடை? எப்.பி.ஓ.,க்கு எஸ்.பி., போட்ட தடை!

'ரெட்' அலர்ட் வாபஸ் பெறப்பட்டதால், சித்ராவும், மித்ராவும், பொருட்கள் வாங்க, மார்க்கெட்டுக்கு சென்றனர். வண்டியை பார்க் செய்து விட்டு, உள்ளே நுழைந்தனர். காய்கறிகழிவுகளும்,சே றும், சகதியுமாக நிறைந்த பழைய பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டை கண்களால், 'ஸ்கேன் ' செய்த படியே, ''ஏன்... மித்து. எல்லாரும், 'டச்'போன்வை ச்சுகிற அளவுக்கு முன்னேறிட்டாங்க. ஆனா, இந்த மார்க்கெட் மட்டும் அப்படியே கிடக்குது,'' என்றாள்.
''ஆமாங்கா ... இந்த மார்க்கெட் கான்ட்ராக்டர் எதையும் கண்டுக்கறதில்லையாம். உள்ளேயும், வெளியேயும் அவ்வளவு குப்பை , பயங்கர, 'கப்ஸ்' அடிக்குதுங்க்கா,'' ''தொடர்ச்சியா மழை வந்தா , இன்னும் கொஞ்சம் நாறிடும்,'' என்ற சித்ரா , படபடவென, காய்கறிகளைவாங்கினாள். அதற்குள் இடி இடிக்கவே,
''அக்கா .. வாங்க போயிடலாம்.மழை வர்ற மாதிரிஇருக்கு,'' என்றாள் மித்ரா.
படுவேகமாக வண்டியைஎடுத்து, புறப்பட்டனர்.அதற்குள் மழை வலுக்கவே, இருவரும், ஈஸ்வரன் கோவிலுக்குள் தஞ்சம் புகுந்தனர்.ஆனால், மார்க்கெட்டே பரவாயில்லை என்பதைப்போல, கோவில் வளாகம் முழுவதும், மழைநீருடன்,சாக்கடைகழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசிய து. இருப்பினும், தண்ணீர் இல்லாத இடமாக பார்த்து இருவரும் அமர்ந்து கொண்டனர்.
''ஏன்.. மித்து. எதுக்கு இப்டியொரு பிளக்ஸ் வெச்சிருக்காங்க?''

''சர்வீஸ் ரோடு இல்லாத பாலத்தைப்பத்திதான் கேட்குறாங்க.
ஆமாங்க்கா . 'அணுகுசாலைபணி தாமதம்ஆகும் என்ற நிலையிலும்,போக்குவரத்து வசதிக்காக பாலம் திறக்கப்பட்டதற்கு நன்றி'வச்சிருக்கிறபிளக்ஸ்,உண்மையிலயே நன்றி சொல்றாங்களா? இல்ல கிண்டல் செய்றாங்களான்னுதெரியலை,'

'மழையில் நனை ந்ததால், தொடர்ந்து தும்மல் போட்ட சித்ராவுக்கு,''அக்கா .. இந்தாங்க மாத்திரைசாப்பிடுங்க,'' என்று கொடுத்தாள்.

'மாத்திரையை பார்த்ததும்,மருந்து கட்டுப்பாட்டுத்துறை குறட்டை விடுகிறதா?என்ற சந்தேகம்வருது மித்து,''''ஏன்.. எப்படி சொல்றீங்க?''

''திருப்பூரில் சில மருந்து கடைகளில் நடக்கும் மோசடி குறித்து, கோவையிலுள்ள ஏ.டி., ஆபீசுக்கு, சமூக ஆர்வலர் ஒருத்தர் போன் மூலம் புகார் சொல்லியிருக்கிறார்.

அதைகேட்டஆபீசர்ஒருவர்,'புகார் குறித்துகடிதம்எழுதி அனுப்புங்க. பார்க்கிறோம்,'என்று பதில் சொல்லியிருக்கார்,''

''அட்ரஸ் கேட்டதற்கு, அதெல்லாம்இல்லைன்னு, மெ த்தனமா பதில் சொல்றாங்களாம். இப்படிஒருஆபீஸ் இருந்தென்ன?

இல்லாட்டி என்ன?ன்னு,பலரும்கே ட்கிறாங்க.மருந்து கடைகளில்,ஆய்வு செய்யவே ண்டிய'டிரக் இன்ஸ்பெக்டர்கள்'ஓட்டலில்ரூம் போட்டு, கடைக்காரங்களை வரவழைச்சு, நல்லாவசூல் செய்றாங்களாம்.அப்புறம்எதுக்குவேஸ்ட்டா களஆய்வு?''

''இந்த இன்ஸ்பெக்டர்இப்படின்னா, சவுத் கிரைம் ரொம்ப வீக்காயிடுச்சாம்க்கா''

''எப்படிடி சொல்ற ?''

''பழைய பஸ்ஸ்டாண்டை சுத்தியும்,பிக்பாக்கெட் கும்பல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாயிடுச்சாம். வெளியூரிலிருந்து வந்துள்ளபிக்பாக்கெட் கும்பல்தங்கள் தொழிலை'கச்சிதமா'பார்த்துட்டு போயிடறாங்களாம். தீபாவளிவே ற வருது. கிரைம்டீம் போலீஸ் நல்லாவேலை பார்த்தால்தான்,மக்களை காப்பாத்தமுடியும். பார்க்கலாம், அதிகாரிஎன்ன பண்றாருன்னு?''என்றாள் மித்ரா .

''சிட்டியில்இப்படின்னா? ரூரல் போலீசாரும், படுமெத்தனமாக இருக்காங்களாம் மித்து,''

''அதெ ப்படிங்க்கா,சிட்டி காத்து, ரூரலுக்கும்அடிச்சிருச்சா ''

''வெள்ளையான கோவில் ஊரில், விவசாயிஒருத்தர்,பாங்கிலிருந்துஒன்றரைலட்சம்ரூபாய் எடுத்துட்டு போறப்ப, டூ வீலரில்வந்த ரெ ண்டு பே ர்,வழிமறிச்சு,பணத்தை பறிச்சிட்டு போயிட்டாங்களாம். அதிர்ச்சியடைந்தஅவர், ஸ்டேஷனில்புகார் கொடுத்தும்,இப்பவரை க்கும்எப்.ஐ.ஆர்., போடலையாம்,''

''பலமுறை கேட்டதற்கு அப்புறம்,பணம் காணாமல் போனதற்குஆதாரம் இல்லைன்னு, நொண்டிச்சாக்கு சொல்றாங்களாம். எப்.ஐ.ஆர்., போட்ட பிரச்னையாயிடும். வெ யிட் பண்ணுங்க...நாங்க கண்டுபிடிச்சு கொடுக்கிறோமுன்னு சொல்லி,இழுத்தடிக்கிறாங்களாம்,''

''கஷ்டப்படற விவசாயிகளுக்குஏன்தான், இப்படி சோதனை வருதோ . இந்த எஸ்.பி., மேடமாவது பார்த்து ஏதாவதுசெஞ்சா சரிதான்,'' என்றாள் மித்ரா .

மழை தொர்ந்து பெய்து கொண்டிருந்தது.வானத்தை பார்த்தவாறே,''இன்னைக்கு நல்லாமாட்டிட்டோம்டி. சரி..வெ யிட் பண்ணுவோம்,''

''மாட்டிட்டோம்னு,லிங்கேஸ்வரர் ஊரில்,ஆட்டம் போட்ட எப்.ஓ.பி.,யை இனிமே , வர வேண்டாமுன்னுஎஸ்.பி.,யே சொல்லிட்டாங்களாம்க்கா ,''

''அப்படியா..என்னநடந்தது?''''அக்கா .. '...நாசியில்','வெ ய்கிள் செக்கப்' பண்றதுக்கு ஹெல்ப் பண்ற எப்.ஓ.பி., பலரும், அப்பப்பா,வசூல் பண்றாங்களாம்.அதில், ஒருத்தரு ரொம்பஓவராபோ ய், பலஇடங்களில்,தனியாவே ,வசூல் வேட்டை நடத்தியிருக்கார்.பொறுமை எல்லையை கடந்ததும்,எஸ்.பி.,கிட்ட யாரோ வத்திவை ச்சுட்டாங்க,''

''இதை கேள்விப்பட்டஎஸ்.பி.., 'இனிமே அவரைகூப்பிடாதீங்க'ன்னு ஆர்டர் போட்டுட்டாங்களாம். இதைக்கேள்விப்பட்ட'கர்மவீரர்' அதிகாரி, 'தீயாவேலை செஞ்ச குமாரு'க்கு இப்படியாயிடுச்சேன்னு, சொல்லி கிண்டல் பண்றாராம்.

இதேபோல, இன்னொரு ஆளும் இருக்கிறாரு.அவர் மே லயும்'ஆக்ஷன்' எடுக்கோணும்,''என்று மித்ரா சொல்லிக்கொண்டிருக்கும்போது, மழைக்கு ஒதுங்கியஒருவரைபார்த்ததும்,''ஹாய் உமேஷ் ..நீயும் மாட்டிக்கிட்டயா?''என்றாள் சித்ரா .

''அரசனைநம்பி,புருஷனைகை விட்டகதை மாதிரி ஆயிடும் போல,'' என்று புதிர்போட்டாள் சித்ரா .

''அக்கா .. யாரை , எதை வைச்சு சொல்றீங்க?'''''எம்.எல்.ஏ.,வ நம்பிட்டுஇருந்தா , ரோட்ல நடமாடமுடியாதுன்னு,புலம்பின,ஆளுங்கட்சி 'மாஜி'க்க ள், எம்.பி.,கிட்ட போனாங்களாம்,''

''சரி.. அப்புறம்,என்னாச்சு?''''ஊத்துக்குளி ரோடுரயில்வே பாலம் வேலை ,பாதியில்நிக்குதுதெ ரியுமில்லே.'சவுத்' கொஞ்சம்'டெக்னிக்'கா வேலை செஞ்சு, அவர் தொகுதிக்குள்ளவர்ற வேலையமுடிச்சுட்டாரு.'நார்த்'எம்.எல்.ஏ., கண்டுக்காமவிட்டதால, தொங்கிட்டுகிடக்கு,''

''இதனால, நீங்களாச்சும்வந்து, ரயில்வே அதிகாரிங்ககிட்டசொல்லி,வேலை யை முடிச்சு கொடுங்க'ன்னு சொன்னாங்களாம். அதை க்கேட்ட , எம்.பி.,யும் நேரா போய், ஆய்வு பண்ணி, ரெ யில்வே ஆபீசரைகூப்பிட்டு,'சீக்கிரம் முடிங்க. போட்டு 'கூட்ஸ் ரெ யில்பெட்டி' கணக்கா ,இழுக்காதீங்க,' ன்னு டோஸ் விட்டாராம்,''என்றாள் சித்ரா .

''டெபுடி தாசில்தார்' போஸ்டிங் போடறதுக்கு ஏன் இழுபறியாஇருக்காம்,''என்று, ரெ வின்யூபக்கம் திரும்பினாள்மித்ரா .

'போன மாசம், 25ம் தே தி, 23 பே ர் 'டெபுடிதாசில்தாரா' செலக்ட்பண்ணி, பட்டியல் வெ ளியிட்டாங்க. அதுல, ஒன்பதுபே ர், ஏற்கனவே 'போஸ்ட்டிங்'ல இருக்காங்க. ஏன்னுதெ ரியல, 15 நாள் ஆகியும்,மீதியுள்ள,14 பே ருக்கு, 'போஸ்ட்டிங்' போடவேஇல்லை . அதான் என்னநடக்குதுனேதெ ரியலைங்க்கா ,'' என்றாள்மித்ரா .

''ஓ... அதுவா? புதுசாவர்றவங்களுக்குதேர்தல் பிரிவு கொடுத்திடலாம்; ஏற்கனவே இருக்கற எங்களுக்கு,'பசை 'உள்ள பதவி வே ணும்; 'ஜோனல் டெபுடி'கொடுங்கனு,ஒரு சிலர் கேட்கறதால, ஒட்டுமொத்தமா,17 பே ர்'போஸ்ட்டிங்'இல்லாமகாத்திருக்கா ங்களாம்டி,'' என்றாள் சித்ரா .

''நம்ம மாவட்டத் திலயே '... மலை 'தாசில்தார் மட்டும், 'உடும்பு'போல, அதேதாலுகாவில், ஒட்டிட்டுஇருக்காறாம்.அப்படி என்ன மந்திரம் போட றாருன்னுதெ ரியலை,''என்று மித்ரா சொன்னதும், சித்ரா மொபைல்போனை எடுத்து, ''சொல்லுங்க...தங்கவேல் அங்கிள். நல்லாருக்கீங்களா?'' என்றுபேச ஆரம்பித்தாள்.அதேநேரம், மழையும் நின்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X