Woman saves many from Gurugram highrise fire, but dies as locked gate traps her | தீ விபத்தில் பலரை காப்பாற்றி உயிர் நீத்த பெண்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் பலரை காப்பாற்றி உயிர் நீத்த பெண்

Added : அக் 09, 2018 | கருத்துகள் (44)
Advertisement
ஸ்வாதி கார்க், தீ விபத்து, கூர்கான் தீ விபத்து, பெண், அடுக்குமாடி குடியிருப்பு, ஸ்வாதி மூச்சுத்திணறல்,  டில்லி தீ விபத்து, 
swati garg fire accident, Gurgaon fire accident, women, apartment building,  Delhi fire accident,

புதுடில்லி: டில்லியை அடுத்து உள்ள குர்கானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பலர் உயிரை காப்பாற்றிய பெண், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
டில்லி அருகேயுள்ள குர்கான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம்(அக்.,7) நள்ளிரவு 2 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அருகில் உள்ள நகரில் இருந்து 45 நிமிடங்களுக்கு பின் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.




உஷார்

அதற்கு முன்னதாக, 5வது மாடியில் குடியிருந்த ஸ்வாதி கார்க்(32) என்ற கட்டட வடிவமைப்பாளர் , தீவிபத்து அறிந்தஉடன், ஒவ்வொரு வீடாக சென்று, அங்கு குடியிருந்தவர்களை, உஷார்படுத்தினார். இதனால், அவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி மொட்டை மாடிக்கு சென்று உயிர் தப்பினர்.


மூச்சுத்திணறல்

ஆனால், நீண்ட நேரமாகியும் ஸ்வாதி மாடிக்கு வரவில்லை. இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீரர்களும் தேடி பார்த்தனர். அப்போது, 10 வது மாடியில் பூட்டப்பட்ட கதவுக்கு அருகே ஸ்வாதி இறந்த நிலையில் கிடந்தார். கதவை திறக்க முடியாமல், ஸ்வாதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ஸ்வாதியின் கணவர், தனது குழந்தையுடன் மாடிக்கு சென்று உயிர் தப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurali Srinivasan - Chennai,இந்தியா
10-அக்-201815:38:06 IST Report Abuse
Balamurali Srinivasan எங்கேயோ இடிக்கிறதே.அம்மா போய்ட்டாங்க. ஆனால், புருஷனும் ,kuzhanthaiyum escape
Rate this:
Share this comment
Cancel
Mahesh JK - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
09-அக்-201822:29:47 IST Report Abuse
Mahesh JK இந்திய அரசு.. முறையாக விருது அளித்து கௌரவிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Ramesh Radhakrishnan - Virudhunagar,இந்தியா
09-அக்-201820:08:14 IST Report Abuse
Ramesh Radhakrishnan வீர வணக்கங்கள். எத்தனை மகத்தான தியாகம். சுய நலமில்லாத தங்க பெண்மணி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X