சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நக்கீரன் கோபால் விடுதலை

Updated : அக் 09, 2018 | Added : அக் 09, 2018 | கருத்துகள் (220)
Advertisement
நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது, நக்கீரன் இதழ் ஆசிரியர், நக்கீரன், நக்கீரன் ஆசிரியர் கோபால், நக்கீரன் கோபால் கைது,
Nakheeran editor Gopal arrested, Nakheeran magazine editor, Nakheeran, Nakheeran editor Gopal, Nakheeran Gopal arrested,

சென்னை: கவர்னருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் மறுத்து விட்டது. மேலும் அவர் மீது போடப்பட்ட 124 வது பிரிவையும் நீதிபதி ரத்து செய்தார். தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலை, சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது தேச துரோக வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால், புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தார். அவர் கிளம்ப இருந்த சில மணி நேரங்களுக்கு முன்னதாக, அங்கு வந்த போலீசார், நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாக, கவர்னர் மாளிகை அளித்த புகாரின் பேரில், சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். பின் கைது செய்தனர். தொடர்ந்து சிந்தாதிரிபேட்டை துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கோபால் மீது சட்டப்பிரிவு 124 - சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கண்டனம்


திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்தாவது:
வைகோ கைது


இதனையடுத்து, மதிமுக பொது செயலர் வைகோ சிந்தாதிரிபேட்டை போலீஸ் ஸ்டேசன் வந்து கோபாலை சந்திக்க அனுமதி கேட்டார். போலீசார் மறுத்தனர். கோபமடைந்த வைகோ சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்.

வைகோ கூறுகையில், கோபால் மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல். வக்கீல் என்ற முறையில் அவரை சந்திக்க வந்துள்ளேன். அனுமதி வழங்காவிட்டால், போலீசார் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: பத்திரிகை சுதந்திரத்தை நெரிக்கும் வகையில், கவர்னர் மாளிகை செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கோபால் கைது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பத்திரிகையாளர்கள் போராட்டம்:


கோபால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஸ்டாலின் எச்சரிக்கை


கோபாலுக்கு மருத்துவ பரிசோதனை நடந்த திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு திமுக., தலைவர் ஸ்டாலின் வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எஸ்.வி.சேகர், ஹெச். ராஜாவை கைது செய்யாதது ஏன்? பாஜகவுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா. கோபாலை விடுதலை செய்யவில்லை என்றால் இந்த அரசு கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.


சதி


மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: கோபால் கைது செய்யப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னரை தொடர்புபடுத்துவதன் பின்னணியில் பெரிய சதி உள்ளது. நிர்மலா தேவி விவகாரம் வெளியேவந்தால் பல தலைவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (220)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
10-அக்-201811:57:35 IST Report Abuse
ஜெயந்தன் செம்ம காமெடி...அதிமுகவும்...பிஜேபியும் சொந்த செலவில் தங்களுக்கே சூனிய ம் வைத்துக் கொள்வதில் போட்டி போடுகிறது...தொடரட்டும் இந்த போட்டி...
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
10-அக்-201805:52:47 IST Report Abuse
meenakshisundaram உண்மையில் நக்கீரன் எல்லை மீறி எத்தனையோ முறைகள் செய்திகளை வெளியிட்டு தண்டனை பெற்ற பத்திரிக்கையே. முன்பு ஜே யை பற்றி தவறாக எழுதி கடைசியில் மன்னிப்புக்கேட்ட ஜனநாயக தீவிரவாதம் 'கொண்ட பத்திரிகையே. இதற்க்கு முடிவே இல்லை .இதே பத்திரிக்கை குழுமம் வெளியிடும் இன்னொரு பத்திரிக்கையே "நான் விரும்பி படிக்கும் 'ஆன்மிகம் 'என்ற மாத இதழும்.இதனால் அறியக்கூடியது ஒன்றே -காசே தான் கடவுளடா, எந்த குரூப் க்கு எந்த நியூஸ் பிடிக்குமோ அதை கொடுத்து சம்பாரி' கோபால் வயதான நிலையில் தனது குழுமத்து பத்திரிகையான ஆன்மிகம் படிக்கிறாரா? அல்லது ஊருக்குத்தான் உபதேசமா?தனி மனிதர்களை பற்றிய அக்கறையும் வேண்டும்,கூட்டங்களுக்காக மட்டுமே கருது வெளியிடல் சரியில்லையே, கடைசியில் தினகரன் வாயால் கைது சரியே என்ற கருத்தை கேட்ட நிலையில் இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
10-அக்-201803:24:41 IST Report Abuse
ராஜேஷ் விடுதலை இருக்கட்டும் கைது ஏன் செஞ்சிங்க ? இவர்க்கு அரசியவாதிகள் துணை இருக்கு , இவரிடம் பணம் இருக்கு உடனே விட்டுடுங்க . அதுவும் ஒரு கவர்னரை பற்றி எழுதியவர் . ஒரு தப்பும் செய்யாமல் , உயர் அதிகாரிகளை , அரசியவாதிகளை திருப்தி படுத்த எத்தனையோ தப்பே செய்யாமல் அப்பாவி ஜனங்கள் நீதிவேண்டி கைது செய்து வாழ்கை வீணடிப்படுகிறது , அவர்களுக்கு யார் உதவுது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X