சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நக்கீரன் கோபால், சென்னை எழும்பூர் நீதிமன்றம் , பேராசிரியை நிர்மலா தேவி, அருப்புக்கோட்டை நிர்மலா தேவி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நிர்மலாதேவி , 

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது ,நக்கீரன் இதழ் ஆசிரியர் ,நக்கீரன் , நக்கீரன் ஆசிரியர் கோபால் ,நக்கீரன் கோபால் கைது, Nakheeran editor Gopal arrested ,Nakheeran magazine editor, Nakheeran ,Nakheeran editor Gopal ,Nakheeran Gopal arrested, Nakheeran Gopal, Chennai Egmore Court, Professor Nirmala Devi, Aruppukottai Nirmala Devi, Governor Panwarilal Purohid, Nirmala Devi,

சென்னை : தமிழக கவர்னருக்கு மிரட்டல் விடுத்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, 'நக்கீரன்' வார இதழின், ஆசிரியர் கோபால், நேற்று காலை கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை சிறைக்கு அனுப்ப மறுத்த, எழும்பூர் நீதிமன்றம், உடனடியாக விடுவித்தது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தனியார் கல்லுாரி உதவி பேராசிரியை, நிர்மலா தேவி. இவர், மாணவியரை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல், 17ல், கைது செய்யப்பட்டு, மதுரை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், 'பூனைக்கு மணி கட்டியது நக்கீரன்; பொறியில் சிக்கிய கவர்னர்; சிறையில், நிர்மலா தேவிக்கு ஆபத்து' என்ற, தலைப்பிலான கட்டுரை, ஏப்., 20 - 22ம் தேதியிட்ட, 'நக்கீரன்' வார இதழில் வெளியானது. அட்டையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நிர்மலாதேவி ஆகியோரின் படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இதுகுறித்து, கவர்னரின் துணை செயலர் செங்கோட்டையன், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அக்., 6ல், புகார் அளித்தார். 'நக்கீரன்' வார இதழின் அலுவலகம், ராயப்பேட்டையில் உள்ளதால், ஜாம்பஜார் காவல் நிலையத்திற்கு, புகார் மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து, கோபால் மீது, ஜாம்பஜார் போலீசார், இந்திய தண்டனை சட்டம், பிரிவு, 124ல், வழக்குப் பதிவு செய்தனர். நேற்று காலை, 7:20 மணிக்கு, நண்பர்கள் இருவருடன், மஹாராஷ்டிரா மாநிலம், புனே செல்ல, சென்னை விமான நிலையத்திற்கு, கோபால் சென்றார்.

அப்போது, அவரை போலீசார் கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, ஐந்து மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர். பின், மருத்துவ பரிசோதனைக்காக, திருவல்லிக்கேணி, அரசு மருத்துவமனைக்கு, அவரை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, எழும்பூர் பெருநகர, 13வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட், கோபிநாத் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, கோபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பி.டி.பெருமாள் வாதாடியதாவது: ஏப்ரலில் வெளியிட்ட கட்டுரைக்கு, சில நாட்களுக்கு முன் தான், கவர்னரின் துணை செயலர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரில், 'கட்டுரையை படித்தேன்; இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால், பணி செய்ய முடியவில்லை' என, கவர்னர் கூறியதாக, ஒரு வரி கூட இல்லை.

ஜனாதிபதியையோ, கவர்னரையோ, அருகில் இருந்து, 'இந்த பணியை செய்யாதே' என, மிரட்டினால், இடையூறு செய்தால் தான், இந்திய தண்டனை சட்டம், பிரிவு, 124ல், வழக்குப் பதிவு செய்ய முடியும். 'நக்கீரன்'

ஆசிரியர் கோபால், கட்டுரை வெளியிட்டதற்காக, 'கவர்னரை மிரட்டினார்; பணி செய்ய விடாமல் தடுத்தார்; இடையூறு செய்தார்' என்பது, ஏற்புடையது அல்ல.

முன்னுதாரணம் :


மேலும், கோபாலை, இந்திய தண்டனை சட்டம், பிரிவு, 124ல் கைது செய்து, சிறையில் அடைத்தால், இந்தியா முழுவதும், அது முன்னுதாரணம் ஆகிவிடும். பத்திரிகை சுதந்திரம் பறிபோய் விடும். எனவே, கோபாலை, 124 பிரிவில் கைது செய்ததை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார். இதற்கு, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

முகாந்திரம் இல்லை:


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு: 'நக்கீரன்' ஆசிரியர் கோபால், கவர்னர் குறித்து கட்டுரை வெளியிட்டார் என்பதற்காக, இந்திய தண்டனை சட்டம், பிரிவு, 124ல், கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, கவர்னரின் துணை செயலர் செங்கோட்டையன் அளித்த புகாரில், எந்த முகாந்திரமும் இல்லை. இதனால், கோபால் மீது, அந்த சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து, அவரை, 'ரிமாண்ட்' செய்ய மறுப்பு தெரிவித்து விடுவிக்கிறேன். இவ்வாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

சட்டப்பிரிவு, 124 சொல்வது என்ன?


'ஜனாதிபதி மற்றும் கவர்னரின் பணிகளை தடுத்தல் அல்லது இடையூறு விளைவித்தல் போன்றவை குற்றம்' என, இந்திய தண்டனை சட்டம், பிரிவு, 124ல், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
* இந்தச் சட்டப்பிரிவில், கைது செய்யப்படுவோருக்கு, அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம்
விதிக்கலாம்
* இச்சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவரை, உடனடியாக கைதும் செய்யலாம்
* நீதிமன்ற உத்தரவு இல்லாமல், விசாரணை மேற்கொள்ள முடியாது
* ஜாமின் வழங்கப்படாது.

தொடரும் பத்திரிகையாளர் கைது :


1987 ஏப்., 4: எம்.எல்.ஏ.,க்கள் பற்றி, 'கார்ட்டூன்' வெளியிட்டதற்காக, 'ஆனந்த விகடன்' இதழின் ஆசிரியர், பாலசுப்ரமணியன் கைது

1989: தமிழக சட்டசபை பற்றி எழுதிய கட்டுரைக்காக, 'இல்லஸ்டிரேடட் வீக்லி' பத்திரிகையின் சென்னை செய்தியாளர், கே.பி.சுனிலை, கைது செய்யும்படி, சபாநாயகர் உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றம், அதற்கு தடை விதித்தது
2003: சட்டசபை மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், செய்தி வெளியிட்டதாக, 'தி இந்து' ஆசிரியர், என்.ராமை கைது செய்ய, அப்போதைய சபாநாயகர் காளிமுத்து உத்தரவிட்டார். அதற்கும், உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2003 ஏப்,. 11: கொலை வழக்கு, தனி தமிழ்நாடு கோரிக்கை, 'லைசென்ஸ்' இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக, 'பொடா' சட்டத்தில், 'நக்கீரன்' ஆசிரியர் கோபால் கைது. செப்., 19ல், ஜாமினில் வெளிவந்தார்

2009 அக்., 7: நடிகையர் குறித்து அவதுாறு செய்தி வெளியிட்டதாக, 'தினமலர்' நாளிதழ் செய்தி ஆசிரியர் லெனின் கைது. அக்., 9ல், ஜாமினில் விடுதலை

2018 அக்., 9: கவர்னர் மீது அவதுாறு செய்தி வெளியிட்டதாக, 'நக்கீரன்' கோபால், பிரிவு, 124ன் கீழ் கைது. 'இது செல்லாது' என, நீதிபதி தீர்ப்பு அளிக்க, விடுதலையானார்.

பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்:


சென்னை பத்திரிகையாளர் சங்கம்: நிர்மலாதேவி கைது தொடர்பாக, 'நக்கீரன்' இதழில் தொடர்ந்து எழுதப்படுவதால், அதன் ஆசிரியர் கோபாலை கைது செய்துள்ளனர். இது, ஊடக சுதந்திரத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள, மிக மோசமான தாக்குதல். தமிழகத்தில், பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவது, கடும் கண்டனத்திற்குரியது. கருத்து

சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும், இதுபோன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்: 'நக்கீரன்' கோபாலை விடுதலை செய்து, பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்த, நீதிமன்றத்தை பாராட்டுகிறோம். இனி வரும் காலங்களிலாவது, தமிழக அரசு, பத்திரிகையாளர்கள் பிரச்னையில், பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். இதுபோல, மாநிலம் முழுவதும், பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள், 'நக்கீரன்' கோபால் கைதுக்கு, கண்டனம் தெரிவித்துள்ளன.

வைகோ மறியல் :

போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த, 'நக்கீரன்' கோபாலை சந்திக்க, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வழக்கறிஞர் என்ற அடையாள அட்டையுடன் நேற்று சென்றார். அவரை, போலீசார் தடுத்தனர். உடன், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், தன் கட்சியினருடன், காவல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டார். இதனால், அங்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், வைகோவும், அவருடன் மறியலில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். மாலையில், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


கருத்து சுதந்திரத்தை காப்பாற்றிய நீதிமன்றம்!

விடுதலைக்கு பின், 'நக்கீரன்' கோபால் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில், கொலை குற்றவாளியை கைது செய்வது போல, போலீசார் நடந்து கொண்டனர். அடையாறு துணை கமிஷனர், ஷெசாங் சாய் வந்ததும், போலீசார், என் மொபைல் போனை பறித்தனர். 'என்னுடன், புனே செல்ல வந்த நண்பர்களிடமாவது சொல்லி விட்டு வருகிறேன்' என்றேன். அதற்கும், போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. 'கைது செய்கிறீர்களா' என, கேட்டேன்; அதற்கும் பதில் அளிக்கவில்லை. விசாரணை என, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில், பல மணி நேரம் காக்க வைத்தனர். கவர்னர் மாளிகையான ராஜ்பவன் குறித்து, ஒரு தகவல் கிடைத்தது. அதை புலனாய்வு செய்து, நக்கீரனில் வெளியிட்டோம். அதற்காக, கவர்னரை மிரட்டினோம் என, போலீசார் வழக்கு பதிந்தனர். ஆனால், நீதிமன்றம் என்னை விடுவித்து, கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் பக்கம் நின்றுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இது, பத்திரிகையாளர்களுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனக்காக, நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்கள், ஆதரவு அளித்த, அரசியல் கட்சி தலைவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகை துறை சார்ந்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.Advertisement

வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
10-அக்-201816:59:23 IST Report Abuse

DSM .S/o PLM இந்தநாட்டில் முதலில் சரி செய்ய படவேண்டியது நீதி மன்றங்கள். தொடர்ந்துதிமுக விற்கு எதிரானவர்களை பற்றிமட்டுமே தவறாக எழுதி வரும் கோபாலுக்கு சரியான தண்டனை விரைவில் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

Rate this:
தலைவா - chennai,இந்தியா
10-அக்-201821:37:20 IST Report Abuse

தலைவா அப்படின்னா காவல்துறை உங்க வீட்டுக்கும் வந்துடப்போவுது கவுண்டர்??? ...

Rate this:
A.Ayyasamy - chennai,இந்தியா
10-அக்-201814:35:37 IST Report Abuse

A.Ayyasamyசந்தோஸ் கோபால் சொல்வது மிக சரியே திமுக கேஸ் என்றால் நீதிபதிகள் கண்ணை மூடிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்வதும் அரசு கேஸ் என்றால் என்ன தான் நியாயம் இருந்தாலும் அதற்கு எதிராக தீர்ப்பு சொல்வதை பல நீதிபதிகள் தொழிலாக கொண்டுள்ளனர் . ஆகவே அரசு கேஸ் வரும் பொது தயவு செய்து அரசு வழக்கறிசரை வாதாட அனுப்ப வேண்டாம் ஏனெனில் ஏற்கனவே திமுக நீதிபதிகள் கேஸ் பற்றி முடிவு செய்து விட்டுத்தான் நீதிமன்றமே வருகிறார்கள் நீதிபதிகளிலும் திமுக ஆட்கள் புகுந்து விட்டார்கள்

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
10-அக்-201821:08:31 IST Report Abuse

Darmavancontemt of கோர்ட் என்ற சட்டம் பரிசீலனை செய்யப்படவேண்டிய ஒன்றாகிவிட்டது ...

Rate this:
Anandan - chennai,இந்தியா
11-அக்-201806:11:48 IST Report Abuse

Anandanஅப்போ SV சேகர், ராஜாவெல்லாம் திமுகவா? அய்யாசாமி, உளறலுக்கும் ஒரு அளவு வேணாமா? இவனுங்க அனுப்புறது வண்டு முருகங்களைத் தானே. ...

Rate this:
Chandramouli - chennai,இந்தியா
10-அக்-201813:00:34 IST Report Abuse

Chandramouliஎஸ்.வி. சேகரின் சாதாரண கருத்துக்கு அவரை கைது செய்ய வேண்டும் என குதித்த ஊடகங்கள் நக்கீரன் கோபாலின் மோசமான அவதூறுக்கு அதுவும் தனி வாழ்க்கையை கோசிப்பாக வெளியிட்டும் அவரை கைது செய்யக்கூடாது என்பதை புரியவில்லை. ஒரு வேலை பத்திரிகைகளுக்கு எதை வேண்டும் எழுதும் உரிமை இருக்கிறதோ? மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லையோ?

Rate this:
மேலும் 79 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X